முதுநிலை ‘நீட்’ தேர்வை தள்ளிவைக்க கோரிய மனு தள்ளுபடி! உச்சநீதிமன்றம்

டெல்லி: நீட் பிஜி 2023 தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நுழைவுத் தேர்வு அசல் அட்டவணை யின்படி நடத்தப்படும் என கூறியுள்ளது. அதாவது மார்ச் 5. “முதல் சாளரத்தில், கிட்டத்தட்ட இரண்டு லட்சத்து மூவாயிரம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். இன்டர்ன்ஷிப் காலக்கெடு நீட்டிக்கப்பட்ட பிறகு ஆறாயிரம் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்தனர். முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ முதுநிலை தேர்வு வருகிற மார்ச் 5-ந் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், … Read more

நாகர்கோவில் அருகே வலம்புரி விளையில் உள்ள மாநகராட்சி உரங்கிடங்கில் தீ விபத்து

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே வலம்புரி விளையில் உள்ள மாநகராட்சி உரங்கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உரக்கிடங்கில் கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்க 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் முயற்சித்து வருகின்றனர்.

Doctor Vikatan: காலை சிற்றுண்டிக்கு ஏற்றவையா திரவ உணவுகள்?

Doctor Vikatan: தினமும் காலை உணவுக்கு சத்துமாவுக் கஞ்சியோ, கோதுமை ரவைக் கஞ்சியோ குடிக்கலாமா? தின உணவுதான் சாப்பிட வேண்டும் என ஏதேனும் விதி உள்ளதா? -asw, விகடன் இணையத்திலிருந்து… பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன் ஸ்ரீமதி வெங்கட்ராமன் இதற்கு பதில் தெரிந்துகொள்ள முதலில் நீங்கள் உடலைப் புரிந்து கொள்ள வேண்டும். சிலர் காலையில் திட உணவு சாப்பிட்டால், ரொம்பவும் ஹெவியாக உணர்வார்கள். பல மணி நேரத்துக்கு … Read more

மணிப்பூரில் திடீர் நிலநடுக்கம்

மணிப்பூர்: மணிப்பூரில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் அதிகாலை 2.46 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில், 3.2 ஆகப் பதிவானது. நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். மேலும் இந்த நிலநடுக்த்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை.

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல்

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டது;நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில், 74.79% வாக்குகள் பதிவாகியுள்ளன.

சிவகாசி: அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்றதாக பெண் திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க ஆலோசனை!

சிவகாசி மாநகராட்சியில் கடந்த 2022 நவம்பர் 29-ந் தேதி கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சிவகாசி மாநகராட்சி 5-வது வார்டு தி.மு.க. பெண் கவுன்சிலர் இந்திராதேவி, “மாநகராட்சி வருவாய்பிரிவு அதிகாரிகள் சொத்துவரி தீர்வை மாற்றத்திற்கு லஞ்சம்கேட்டு எனது வார்டை சேர்ந்த பொதுமக்கள் அளித்த முறையீட்டு மனுவை பல மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளனர். மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக பொதுமக்களிடம், அதிகாரிகள் கேட்ட லஞ்சப்பணத்தை மொத்தமாக நானே தந்துவிடுகிறேன்” எனக்கூறி தான் வைத்திருந்த பையிலிருந்து ரூ.1 லட்சத்து … Read more

கிளப் அணிகளுக்காக 700 கோல்களை பதிவு செய்து மெஸ்ஸி புதிய சாதனை

ஜெர்மன்: கால்பந்தாட்ட உலகின் மாயமான் மெஸ்ஸி கிளப் அணிகளுக்காக 700 கோல்களை பதிவு செய்து மெஸ்ஸி புதிய சாதனை படைத்துள்ளார். நேற்று பிஎஸ்ஜி கிளப் அணிக்காக, Olympique de Marseille அணிக்கு எதிரான ஆட்டத்தில் 29-வது நிமிடத்தில் அவர் கோல் பதிவு செய்தார். அது கிளப் அணிகளுக்காக அவர் பதிவு செய்த 700-வது கோல் ஆகும். இது அவரது விளையாட்டு உலக சாதனைகளில் புதிய சாதனையாக அமைந்துள்ளது. இதற்கு முன்னர் கால்பந்தாட்ட உலகில் 700 கோல்களை கிளப் … Read more

அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!!

சென்னை : அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில், அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமண விழாவில் நடனமாடியவர் பலி| Bali was the one who danced in the wedding ceremony

ஹைதராபாத் : தெலுங்கானாவில், உறவினரின் திருமண விழாவில் நடனமாடிய இளைஞர் ஒருவர் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார். தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தின் பர்டி என்ற கிராமத்தில் திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட மஹாராஷ்டிராவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் திடீரென சரிந்து கீழே விழுந்தார். உறவினர்கள் அவரை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தனர். திருமண … Read more

இத்தாலி நோக்கி பயணித்த புலம்பெயர்ந்தோரில் 61 பேர் பலி! மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

துருக்கி நாட்டில் இருந்து படகில் இத்தாலிக்கு பயணித்த புலம்பெயர்ந்தோரில் 61 பேர் பலியாகினர். படகில் பயணித்த புலம்பெயர்ந்தோர் நிலநடுக்கத்தின் பேரழிவால் துருக்கி, சிரியா நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இதனால் துருக்கியில் வசித்து வந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சோமாலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் படகில் பயணித்தனர். இத்தாலி நோக்கி சென்ற அவர்கள் சென்ற படகு, குரோடோன் நகருக்கு அருகே கடலில் சென்று கொண்டிருந்தபோது கடல் சீற்றம் காரணமாக விபத்தில் சிக்கியது. @IMAGO/ZUMA Wire 61 … Read more