2023-24 தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 20 ல் சட்டப்பேரவையில் தாக்கல்…

2023-24 ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 20 ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது சபாநாயகர் அப்பாவு இதனைத் தெரிவித்தார். நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வாகன பறிமுதல் வழக்கை விசாரிப்பது யார்?.. ஐகோர்ட் கிளை

மதுரை: மணல் கடத்தல், திருட்டு வழக்கில் வாகனங்களை பறிமுதல் செய்த பிறகு விசாரிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது?  ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. வாகனங்களை பறிமுதல் செய்த பிறகு அதை விசாரிக்கும் அதிகாரம் காவல்துறைக்கு உள்ளதா? வருவாய் துறைக்கு உள்ளதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. நெல்லை தருவைகுளம் அருகே கல் உடைக்கும் மையத்தின் உரிமம் ரத்து, வாகனங்கள் பறிமுதலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் விரிவான வாதத்துக்கு வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

அக்னிபத் திட்டத்துக்கு எதிரான மனு தள்ளுபடி| Dismissal of petition against Agnipat project

புதுடில்லி: ராணுவத்தில் இளைஞர்கள் சேர, அக்னிபத் என்ற திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டு கால ஒப்பந்தத்தில் வீரர்கள் நியமிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு இன்று(பிப்.,27) டில்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அக்னிபத் திட்டம் தேசிய முக்கியத்துவத்தை முன் வைத்து கொண்டு வரப்பட்டதால், முப்படையில் அக்னி வீரர்களை சேர்க்கும் திட்டத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. புதுடில்லி: ராணுவத்தில் … Read more

நெல்லை: “சாதிச் சான்று கிடைக்கலைனா, படிப்பைத்தான் கைவிடணும்!" – மாவட்ட ஆட்சியரிடம் மாணவி மனு

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம், ராதாபுரம், வீரவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் காட்டுநாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சாதிச் சான்றிதழ் கேட்டுப் பல வருடங்களாக அரசு அலுவலகங்களுக்கு நடையாய் நடந்து வருகிறார்கள். ஆனால், அவர்களின் மனுக்களை பரிசீலிக்காமலே அதிகாரிகள் தள்ளுபடி செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. தாயுடன் மனு அளிக்க வந்த மாணவி இந்த நிலையில், பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டி கிராமத்தின் ஜே.ஜே.நகரில் வசிக்கும் காட்டுநாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த இசக்கி என்பவரின் மகள் காளீஸ்வரி, தனக்குச் சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை என … Read more

மெஸ்ஸியின் உதவியுடன் மாஸ் காட்டிய எம்பாப்பே! PSG அணிக்காக அடித்த 200-வது கோல்

லியோனல் மெஸ்ஸியின் (Lionel Messi) உதவியுடன் கைலியின் எம்பாப்பே (Kylian Mbappe) PSG அணிக்காக அடித்த கோலை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். மெஸ்ஸி-எம்பாப்பே காம்போ திங்கட்கிழமை வெலோட்ரோமில் நடந்த லீக் 1 போட்டியில், பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் (PSG) அணி 3-0 என்ற கோல் கணக்கில் மார்சேயை (Marseille) தோற்கடித்தது. PSG அணியின் இந்த அசத்தலான வெற்றியையும் தாண்டி, போட்டியில் மெஸ்ஸியின் உதவியுடன் எம்பாப்பே அடித்த கோலை ரசிகர்கள் பாராட்டிவருகின்றனர். இருவரின் இந்த காம்போ பார்க்க அருமையாக இருப்பதாக … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மாலை 5 மணி நிலவரப்படி 70.58 வாக்குப்பதிவு! மேகாலயா, நாகலாந்து தேர்தல் நிலவரம்…

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 5 மணி நிலவரப்படி 70.58 வாக்குப்பதிவாகியுள்ளது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதுபோல,  நாகலாந்தில் – 72.99%, மேகாலயாவில் – 63. 91% வாக்கு பதிவாகியுள்ளதாக தேர்தல் அணையம் தெரிவித்துள்ளது.  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை 7:14 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன் வாக்களித்தார்.  அவரைத்தொடர்ந்து வாக்களிப்பதற்குக் கட்சி வேட்டி துண்டுடன் … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. வாக்குச்சாவடிகளில் வரிசையில் நிற்பவர்கள் வாக்களிக்க டோக்கன் அளிக்கப்படுகிறது.

₹ 73,000 விலையில் வரவுள்ள ஷைன் 100 பைக் டீசரை வெளியிட்ட ஹோண்டா #honda100 #Hondashine100

ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்க்கு சவால் விடுக்கும் வகையில் ஹோண்டா 100சிசி பைக் மாடலை ஷைன் என்ற பெயரில் மார்ச் 15, 2023 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிட உள்ளது. முன்பாக சிபி ஷைன் 125 சிசி சந்தையில் பிரசத்தி பெற்ற மாடலாக உள்ளது. இன்றைக்கு ஹோண்டா வெளியிட்டுள்ள டீசர் வீடியோவில் ‘SHINING FUTURE’ என்ற பெயரில் குறிப்பிட்டுள்ளது. 110சிசி சந்தையில் ஹோண்டா லிவோ மற்றும் சிடி 110 பைக்குகளை விற்பனை செய்து வருகின்றது. Honda CB Shine … Read more

காரடையான் நோன்பு: ஆயுள் அருளும் திருக்கடையூரில் மாங்கல்ய பலம் அளிக்கும் வழிபாடு; சங்கல்பியுங்கள்!

உங்கள் வாழ்வு வளம் பெறவும், ஆரோக்கியம் மேம்படவும், ஆயுள் விருத்தியாகவும் சக்தி விகடன் சிறப்பு சங்கல்ப பூஜைகளைத் திருக்கடையூரில் ஏற்பாடு செய்துள்ளது. சிறப்புமிக்க காரடையான் நோன்பு நாளில் (15-3-2023) காலை வேளையில் சிறப்பு சங்கல்பத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. “ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப் பாசத்தில் அல்லல்பட இருந்தேனை, நின் பாதம் என்னும் வாசக்கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டு கொண்ட நேசத்தை என் சொல்லுவேன்? ஈசர்பாகத்து நேரிழையே!” – அபிராமி அந்தாதி அபிராமி அம்மன் தீர்க்க ஆயுள் … Read more

முதல் திரைப்படம் வெளியாகும் முன்பே அறிமுக இயக்குநர் மரணம்

முதல் திரைப்படம் வெளியாகும் சில நாட்களுக்கு முன்பே இளம் அறிமுக இயக்குநர் உயிரிழந்த சம்பவம் மலையாள திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளம் இயக்குநர் மரணம் மலையாள திரைப்பட இயக்குநர் ஜோசப் மனு ஜேம்ஸ் (Joseph Manu James) இப்போது உயிருடன் இல்லை. அவர் ஹெபடைடிஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பிப்ரவரி 24 அன்று துரதிர்ஷ்டவசமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு வயது 31. அவர் தனது முதல் படமான ‘நான்சி ராணி’ வெளியாவதற்கு சில … Read more