கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ. 1800 கோடி மோசடி.. உல்லாச வாழ்க்கை வாழும் புக்கிகள்… டீ செலவுக்கு மட்டும் ரூ. 50 லட்சம்…

குஜராத் மாநிலத்தில் 1400 கோடி ரூபாய் கிரிக்கெட் சூதாட்ட மோசடி நடைபெற்றுள்ளதை அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசார் உறுதி செய்துள்ளனர். இருந்தபோதும் இதுதொடர்பாக இதுவரை யாரையும் கைது செய்ய முடியவில்லை. லண்டன் மற்றும் துபாய் உள்ளிட்ட இடங்களில் இருந்து செயல்படும் புக்கிகள் மூலம் இந்த சூதாட்ட மோசடி நடைபெற்றுள்ளதாகவும் இதில் நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிம்-மின் பங்கு இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. ஆகாஷ் ஓஜா என்பவரது ஆதார் மற்றும் பான் எண்ணை வைத்து போலியாக துவக்கப்பட்ட வங்கி கணக்கில் … Read more

மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை பற்றி பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறுவது தேர்தல் விதிமீறல் இல்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

ஈரோடு: மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை பற்றி பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறுவது தேர்தல் விதிமீறல் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ரூ.1,000 உரிமைத் தொகை என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டம்தான். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டம் பற்றி பேசுவது தேர்தல் விதிமீறலில் வராது என முதலமைச்சர் தெரிவித்தார்.

மஹா.,வில் 512 கிலோ வெங்காயத்துக்கு வெறும் ரூ.2.49 லாபம்: விவசாயி அதிர்ச்சி| 512 kg of onion in Maha. Only Rs 2.00 profit: farmer shocked

புனே: மஹாராஷ்டிராவில், வியாபாரியிடம் 512 கிலோ வெங்காயம் விற்பனை செய்த விவசாயிக்கு, வெறும் 2.49 ரூபாய் மட்டுமே நிகர லாபமாக கிடைத்ததால், அவர் அதிர்ச்சி அடைந்தார். மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா – – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, புனே மாவட்டத்தில் சோலாபூரைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திர சவான், 63. இவர், கடந்த வாரம் தான் விளைவித்த 512 கிலோ வெங்காயத்தை, சோலாபூர் மார்க்கெட் வியாபாரியிடம் விற்றுள்ளார். இதில், அவருக்கு வெறும் … Read more

“மூன்றாவது அணி உருவானால், பாஜக-வுக்கு சாதகமாகவிடும்" – கூட்டணி குறித்து காங்கிரஸ் தீர்மானம்

அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, இந்த ஆண்டு ஒன்பது மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. பாஜக-வும், காங்கிரஸும் இதில் கவனம் செலுத்திவரும் அதேவேளையில், 2024-ல் வலுவான கூட்டணி அமைக்கக் காய்களை நகர்த்திவருகிறது காங்கிரஸ். மல்லிகார்ஜுன கார்கே அதன் ஒருபகுதியாக சட்டீஸ்கர் மாநிலத்தின் ராய்பூரில், நேற்று முதல் மூன்று நாள் ஆலோசனைக் கூட்டம் நடந்துவருகிறது. இன்றைய கூட்டத்தில், கூட்டணி அமைக்க வலியுறுத்தி பேசிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தாங்கள் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாகவும், … Read more

என் வயிற்றில் இருக்கும் குழந்தை என்ன பாவம் செய்தது? சிறைத்தண்டனை அனுபவிக்கும் இளம்பெண் வழக்கு

அமெரிக்காவில் சிறையில் இருக்கும் இளம்பெண் ஒருவர் தனது கர்ப்பத்தை காரணம் காட்டி விடுதலை கோரியுள்ளார். சிறையில் கர்ப்பிணி பெண் கொலைக் குற்றச்சாட்டின் பேரில் புளோரிடாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடாலியா ஹாரெல் (Natalia Harrell) எனும் 24 வயது பெண் கர்ப்பமாக உள்ளார். அவர், தனது வயிற்றில் உள்ள குழந்தை எந்த பாவமும் செய்யாத “நிரபராதி” என்றும், பிறக்காத அந்த குழந்தை தன்னுடன் தண்டனை அனுபவிப்பது சட்டவிரோதமான செயல் என்றும் கூறி, தன்னை விடுதலை செய்யக் கோரி வருவதாக … Read more

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவிப்பு…

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராய்ப்பூரில்  நடைபெற்று வரும் அகில இந்திய காங்கிரஸ் 85வது தேசிய மாநாட்டின் கட்சியின் 2வது நாள் கூட்டத்தில், இன்று பங்கேற்று உரையாற்றிய சோனியா காந்தி,  அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ரேபரேலி எம்.பி.யான இவர், 2024ல் நடைபெற உள்ள  லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டார் … Read more

மியான்மரில் பிற்பகல் 2.41 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்

நைபியிடவ்: மியான்மரில் பிற்பகல் 2.41 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2-ஆக பதிவாகியுள்ளதாக புவி அதிர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது. மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

விழுப்புரம்: மேல்மலையனூர் தேரோட்டம்; இரு நபர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு; என்ன காரணம்?

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுள் ஒன்று மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம். இந்த கோயிலில், ஆண்டுதோறும் மாசித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். மயானக்கொள்ளை, தீமிதி திருவிழா, தேர் திருவிழாக்களின் போது பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இங்கு வந்து குவிவார்கள். இந்த நிலையில், கடந்த 18-ம் தேதி துவங்கிய இந்த மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது. உயிரிழந்த இருவர் … Read more

பிரித்தானியாவின் வேல்ஸில் நிலநடுக்கம்! நள்ளிரவில் பீதியடைந்த மக்கள்

வேல்ஸில் நள்ளிரவில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பலர் பீதியடைந்தனர். நள்ளிரவில் நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ரோண்டா பள்ளத்தாக்கிற்கு வடக்கே எட்டு மைல் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 3.8 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தினால் தங்கள் படுக்கைகள் நகரந்ததாகவும், சுவர்கள் குலுங்கியதாகவும் உள்ளூர்வாசிகள் பீதியடைந்தனர். எனினும் இந்த அதிர்வுகள் அதிகபட்சம் இரண்டு வினாடிகள் மட்டுமே நீடித்ததாகவும், சேதத்தை விட அதிக குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் ஒரு சிலர் தெரிவித்தனர். (jamssy is licensed under … Read more

புதுச்சேரியில் இருந்து சென்னை உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு தீபாவளி முதல் விமான போக்குவரத்து…

புதுச்சேரியில் இருந்து தமிழ்நாட்டின் சென்னை, கோவை, வேலூர், மதுரை, சேலம், திருச்சி, தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு தீபாவளி முதல் விமான போக்குவரத்து துவங்க இருக்கிறது. சிங்கபூரைச் சேர்ந்த ஏர் ஸபா என்ற விமான நிறுவனம் இதற்கான முதல்கட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளது. கோவை மற்றும் பெங்களூரில் இருந்து புதுவை விமான நிலையத்திற்கு நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது. இதை புதுவை மாநில முதல்வர் ரங்கசாமி நேரில் ஆய்வு செய்தார்.. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஏர் ஸபா விமான … Read more