22-வது சட்ட ஆணையத்தின் பதவிக்காலம் ஆகஸ்டு வரை நீட்டிப்பு! மத்திய கேபினட் அனுமதி

டெல்லி: 22-வது சட்ட ஆணையத்தின் பதவிக்காலம் ஆகஸ்டு வரை நீட்டிப்பு செய்ய மத்திய கேபினட் அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளது.  பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், 22-வது சட்ட ஆணையத்தின் பதவிக்காலத்தை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. இதன் பதவிக்காலம், கடந்த 20-ந் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது, அடுத்த ஆண்டு ஆகஸ்டு 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 22வது சட்டக் குழு பிப்ரவரி 21, 2020 அன்று மூன்று ஆண்டுகளுக்கு அமைக்கப்பட்டது மற்றும் … Read more

புதுச்சேரி முதல்வர் அமைச்சர்களுக்கு உரிய மரியாதை தருவதில்லை: ஐபிஎஸ் அதிகாரி மாற்றம்!

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்களுக்கு உரிய மரியாதை தருவதில்லை என்று குற்றம் சாட்டிய ஐபிஎஸ் அதிகாரி தீபிகா, ஜம்மு காஷ்மீருக்கு மாற்றம் செய்யப்பட்டார். மற்றொரு ஐபிஎஸ் அதிகாரி லோகேஸ்வரன் மிசோரமுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

செல்வத்தைப் பெருக்கும் சூப்பர் முதலீடு – சென்னைவாசிகளுக்கு ஒர் அரிய வாய்ப்பு… அனைவரும் வருக, வருக!

வீட்டுக் கடன், கார் கடன், கிரெடிட் கார்டு, கல்விக் கடன் என ஏதோ ஒரு கடன் எல்லோரிடமும் இருக்கிறது. கடனில் இருப்பவர்கள் யாருமே தங்களை நிதிச் சுதந்திரத்தோடு இருக்கிறேன் என்று சொல்லிக்கொள்ள முடியாது. அதேபோல்தான் மாத வருமானத்தை எதிர்பார்த்து இருப்பவர்களும் நிதிச் சுதந்திரத்தோடு இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. நிதிச் சுதந்திரம் எனில், சேமிப்பும், முதலீடும் இருக்க வேண்டும். வருகிற வருமானம் கடனுக்குச் சரியாக இருக்கிறது என்ற நிலை இருக்கக் கூடாது. ஒன்றுக்கு மேற்பட்ட வருமானம் இருக்க … Read more

மூதறிஞர் ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர்.கேசவன் காங்கிரஸிலிருந்து விலகல்

டெல்லி: இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலும், மூதறிஞருமான  ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர்.கேசவன் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியையும் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு  அனுப்பியுள்ள கடிதத்தில்,  “நான் 2001ல் வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்ததற்குக் காரணம் தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணமே.  இந்தியாவில், அனைவரையும் உள்லடக்கிய தேசிய மறுமலர்ச்சியைக் காண வந்தேன். அத்தகைய கொள்கையின் மீது ஈர்ப்பு … Read more

தரங்கம்பாடியில் இருந்து மீன்பிடிக்கச்சென்ற 6 மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

மயிலாடுதுறை: தரங்கம்பாடியில் இருந்து மீன்பிடிக்கச்சென்ற 6 மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். நடுக்கடலில் இலங்கை கடற்படை தாக்கியதில் வேல்முருகன், பாலமுருகன், மாதவன் உள்ளிட்ட 6 பேர் காயமடைந்துள்ளனர். இலங்கை கடற்படை இரும்பு பைப்பால் தாக்கியதில் 6 பேர் காயமடைந்து பொறையாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எரிசக்தி உற்பத்தியில் சிறப்பாக செயல்படும் இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம்| India is doing well in energy production: PM Modi proud

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: எரிசக்தி உற்பத்தியில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது என பிரதமர் மோடி கூறினார். 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி பார்லிமென்டில் தாக்கல் செய்தார். பட்ஜெட் தொடர்பான விளக்கங்களை அளிக்க இன்று(பிப்.,23) முதல் மார்ச் 11ம் தேதி வரை 12 இணைய வழி கருத்தரங்குகளை மத்திய அரசு நடத்த உள்ளது. இந்நிலையில், பசுமை வளர்ச்சி குறித்து பட்ஜெட்டுக்கு பிந்தைய முதல் கருத்தரங்கில் … Read more

இபிஎஸ் வசமான அதிமுக! – OPS -க்கு பின்னடைவு! -கழுகார்: மதிமுகவில் சாதிப்புயல்! – பருத்திவீரன்: Rewind

எடப்பாடி வசமான அதிமுக… அடுத்தகட்ட திட்டம் என்ன?! எடப்பாடி பழனிசாமி அதிமுக-வின் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஜூலை மாதம் நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது. அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை சர்ச்சையால் ஒ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இடையே பெரும் கருத்து மோதல் ஏற்பட்டு இருவரும் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பு எடப்பாடி தரப்புக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இத்தகைய சூழலில் … Read more

பிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கு உண்மையில் எவ்வளவு செலவாகும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

அதிகாரப்பூர்வமாகக் கூறினால், அனைத்து பிரெஞ்சுக் குடியுரிமை விண்ணப்பங்களுக்குமான நிர்வாகக் கட்டணம் 55 யூரோக்கள்தான். ஆனால், நடைமுறையில், சில மறைமுக கட்டணங்கள் உள்ளன. அவற்றைக் குறித்து அறிந்துகொள்ளலாம். பிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கு எவ்வளவு செலவாகும்? ஒருவர் பிரான்ஸ் குடியுரிமை பெறுவதற்கு ஏராளமான ஆவண்ங்களை நிரப்பவேண்டியிருக்கும், நீண்ட காலம் காத்திருக்கவேண்டியிருக்கும். அத்துடன் சில பரிசோதனைகளும். கூடவே செலவு அதிகம் பிடிக்கும் சில விடயங்களும்… நீங்கள் என்னென்ன ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டும் என்பது, நீங்கள் எந்த வகையில் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கிறீர்கள் (குடியிருப்பு அனுமதி … Read more

மாநில மகளிர் கொள்கை: உலக மகளிர்தினத்தன்று வெளியிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு அரசு உருவாக்கி உள்ள மகளிருக்கான பிரத்யேக கொள்கையை, உலக மகளிர் தினமான மார்ச் 8ந்தேதி அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். அதில், மகளிர் மேம்பாடு, பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம், மாநில மகளிருக்கான கொள்கை வரைவு   வெளியிடப்பட்டது. தற்போது மாநில மகளிர் கொள்கையை வெளியிட முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 3 கோடிக்கும் அதிகமாக பெண்கள் உள்ளனர். இவர்களுக்கு … Read more

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 139 புள்ளிகள் சரிந்து 59,606 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!

மும்பை: வர்த்தகம் தொடங்கியபோது ஏற்றத்துடன் இருந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் இறுதியில் சரிவுடன் முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 139 புள்ளிகள் சரிந்து 59,606 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 43 புள்ளிகள் சரிந்து 17,511 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.