டான் 3 படத்தில் நடிக்க ஷாருக் கான் விதிக்கும் புதிய நிபந்தனை: பர்ஹான் அக்தர் சம்மதிப்பாரா?

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் இதற்கு முன்பு நடித்த டான் படம் பெரிய அளவில் ஹிட்டானது. டான் 2 படமும் வெளிவந்துவிட்டது. இப்போது டான் 3 படத்தை இயக்க இயக்குநர் பர்ஹான் அக்தர் திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் மீண்டும் நடிக்க ஷாருக் கான் மறுத்துவிட்டார். இதையடுத்து நடிகர் ரன்வீர் சிங் இப்படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது டான் 3 படத்தில் இருந்து ரன்வீர் சிங்கும் விலகிக்கொண்டார். நடிகர் ரன்வீர் சிங் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, லோகேஷ் … Read more

கர்நாடகாவில் சோகம்; ஒரே பைக்கில் சென்ற 3 இளைஞர்கள் விபத்தில் பலி

பெங்களூரு, கர்நாடகாவின் தேவனஹள்ளி நகரில் அகலகோட் கிராமம் அருகே மாநில நெடுஞ்சாலையில் இளைஞர்கள் 3 பேர் ஒரே பைக்கில் சென்றுள்ளனர். அவர்கள் தேவனஹள்ளியில் இருந்து புடிகெரே சாலையை நோக்கி சென்றபோது, விரைவாக எதிரே வந்த லாரி ஒன்று அவர்களின் பைக் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து லாரியில் இருந்த ஓட்டுநர் தப்பி ஓடி விட்டார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச்சென்று அவர்களை மீட்க முயற்சித்தனர். ஓட்டுநர்களின் அலட்சியத்தினால் இதுபோன்ற விபத்துகள் … Read more

'விண்ணை முட்டும் ஆம்னி பஸ் டிக்கெட்; தவிக்கும் மக்கள்!' – கண்டுகொள்ளாத அரசு?

பொங்கல் விடுமுறையை முடித்துவிட்டு சொந்த ஊர்களிலிருந்து மக்கள் சென்னை திரும்ப ஆரம்பித்திருக்கின்றனர். இந்நிலையில், சென்னையை நோக்கிய ஆம்னி பேருந்துகளின் கட்டணம் விண்ணை முட்டும் வகையில் உயர்ந்திருப்பது பயணிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அமைச்சர் சிவசங்கர் வழக்கமாக திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு ஆம்னி பஸ்களில் குறைந்தபட்சமாக 700 முதல் 800 ரூபாயிலிருந்தே அமர்ந்து செல்லும் வகையிலான டிக்கெட்டுகள் கிடைக்கும். ஆனால், இப்போது அந்த வகை டிக்கெட்டுகள் குறைந்தபட்சமாக சராசரியாக 2500 ரூபாயிலிருந்து 4000 ரூபாய் வரைக்கும் விற்கப்பட்டு வருகிறது. படுக்கைவசதியுடன் கூடிய … Read more

ம.பி.: ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை துவக்கி வைத்த மத்திய மந்திரி கட்காரி

விதிஷா, மத்திய பிரதேசத்தின் விதிஷா நகரில் ரூ.4,400 கோடி மதிப்பிலான 8 தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கான திட்ட பணிகளை மத்திய மந்திரி நிதின் கட்காரி துவக்கி வைத்துள்ளார். இதனுடன், ரூ.450 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டன. இதேபோன்று, ரூ.16 ஆயிரம் கோடி செலவில் விதிஷா-சாகர்-கோட்டா பசுமை விரைவு சாலை அமைப்பதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது என கட்காரி மேடையில் அறிவித்தார். இதுதவிர, மத்திய பிரதேசத்திற்கு மத்திய சாலை நிதியின் கீழ் ரூ.1,600 கோடியை நிதின் … Read more

BB Tamil 9 Day 104: “பாரு, கம்ருதீன், நந்தினி மிஸ் யூ"- போட்டியாளர்களின் செய்தி; நெகிழ்ந்த பிக்பாஸ்

இந்த எபிசோடில் விவரிக்கும்படியாக அதிக சம்பவங்கள் நிகழவில்லை.  வீடியோ தொகுப்புகள்தான் நிறைய. ஒரு farewell party. விக்ரமின் வீடியோவைத் தொடர்ந்து திவ்யா, சபரி, அரோரா ஆகியோரின் பயண வீடியோக்கள் ஒளிபரப்பாகின. ஒவ்வொருவரின் ஆளுமையையும் வைத்து வழக்கம் போல் உத்வேகமான மற்றும் ஊக்க வார்த்தைகளைக் கூறினார் பிக் பாஸ்.  போட்டியாளர்கள் பிக் பாஸிடம் அந்தரங்கமான தோழமையையும் பிரியத்தையும், உரிமையுடன் கேட்டுப் பெறுகிற தனிப்பட்ட அன்பையும் புரிந்து கொள்ள முடிகிறது. அடைக்கப்பட்ட சூழலில் சக போட்டியாளர்களுடன் பேச முடியாத விஷயங்களை, … Read more

பள்ளிக்கூட பையில் பதுங்கி இருந்த விஷ பாம்பு.!

திருவனந்தபுரம், கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அத்தாணி அருகே எலவக்காட்டு வீட்டை சேர்ந்தவர் அப்துல் அஸீஸ். இவரது மகன் சிராஜ், அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 1-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வழக்கம்போல் பள்ளிக்கூடம் சென்ற சிராஜ் மாலையில் டியூசனுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினான். பள்ளிக்கூட பையை வீட்டில் இருந்த மேஜையில் வைத்தான். நேற்று காலை வீட்டை சுத்தம் செய்தபோது சிராஜின் பள்ளிக்கூட பையை எடுத்து ஓரமாக வைக்கப்பட்டது. அப்போது அந்த பையில் நாகப்பாம்பு … Read more

கர்ப்பிணிகள் Paracetamol சாப்பிட்டால் குழந்தைகளின் மனநலம் பாதிக்குமா? – ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன?

‘கர்ப்பமான பெண்கள் பாராசிட்டமால் சாப்பிடுவது நல்லதல்ல. அவர்கள் அந்த மாத்திரையை எடுத்துக்கொண்டால் குழந்தைகளுக்கு ADHD, ஆட்டிசம் போன்ற நோய்கள் ஏற்படுகிறது’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்பு கூறியிருந்தார். காய்ச்சல்… வலி… தலைவலி என எதுவாக இருந்தாலும், பெரும்பாலான மக்கள் பாராசிட்டமால் வாங்கி சாப்பிடுவது வழக்கம். ட்ரம்பின் இந்தக் கூற்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்போது ட்ரம்பின் பேச்சு பொய்யானது… அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ‘The Lancet’ இதழில் வெளியாகி உள்ள ஆய்வு தற்போது … Read more

டெல்லி-பாட்னா தேஜஸ் ராஜ்தானி ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்; பயணிகள் அச்சம்

பாட்னா, டெல்லியில் இருந்து பீகாரின் பாட்னா நகர் நோக்கி தேஜஸ் ராஜ்தானி ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த நிலையில், ரெயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என டெல்லி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் கூறியுள்ளார். இதனால், நேற்றிரவு ரெயிலில் சோதனை நடந்தது. உடனடியாக, ரெயிலை நிறுத்தி விரிவான சோதனையில் பாதுகாப்பு குழுவினர் ஈடுபட்டனர். வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர், மோப்ப நாய் பிரிவினர், தீயணைப்பு அதிகாரிகள், உள்ளூர் போலீசார், அரசு நிர்வாகத்தினர், மண்டல … Read more

மகா., உள்ளாட்சி தேர்தல்: சரத் பவாரை நேரில் சந்தித்து கூட்டணியை உறுதிசெய்த அஜித் பவார்

மும்பை மாநகராட்சி உட்பட மகாராஷ்டிரா முழுவதும் நடந்த மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு தோல்வியை தழுவியது. சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் படுதோல்வியை சந்தித்துள்ளது. புனே மற்றும் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சிகளில் இரண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அப்படி இருந்தும் இரண்டு மாநகராட்சிகளிலும் பா.ஜ.க பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று இரண்டு மாநகராட்சிகளையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இதையடுத்து இரு தேசியாத … Read more

உ.பி.: மவுனி அமாவாசையை முன்னிட்டு பிரயாக்ராஜில் கடும் குளிரில் புனித நீராடிய பக்தர்கள்

பிரயாக்ராஜ், உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஆண்டுதோறும் மகாமேளா நடத்தப்படுகிறது. இந்த மகாமேளா காலத்தில் அங்கு புனித நதியான கங்கை நதியிலும், திரிவேணி சங்கமத்திலும் பெருந்திரளானோர் புனித நீராடுவது வழக்கம். இதன்படி, கடந்த 3-ந்தேதி பிரயாக்ராஜில் பவுர்ணமி தினத்தில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடல் தொடங்கியது. இந்த மகாமேளா பிப்ரவரி 15-ந்தேதி வரை 44 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளில் புனித நீராடுவதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இதேபோன்று கங்கை நதியிலும் புனித நீராடினர். இதில், ஜனவரி … Read more