ஊழல்வழக்கு பதிய அனுமதி – சிபிஐ சம்மன்: டெல்லி துணைமுதல்வரை கைது செய்ய மத்தியஅரசு முடிவு?

டெல்லி: மதுபான ஊழல் முறைகேடு தொடர்பாக, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில், அவரை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. இதனால் அவர் கைது செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த … Read more

கிழக்கு கடற்கரை ரயில் திட்ட பாதையை மாற்றக்கூடாது: அன்புமணி ராமதாஸ்

சென்னை: தமிழ்நாட்டின் கனவுத் திட்டமான கிழக்கு கடற்கரை ரயில் திட்ட பாதையை மாற்றக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கிழக்கு கடற்கரை ரயில் திட்டத்தில் மாற்றம் செய்ய ரயில்வே முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. கிழக்கு கடற்கரை ரயில் திட்டத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டால், அது திட்டத்தின் நோக்கத்தையே சிதைத்துவிடும். தற்போது பெருங்குடிக்கு மாற்றாக செங்கல்பட்டு நகரில் இருந்து திட்டத்தை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. நிலத்தின் மதிப்பு அதிகரித்துவிட்டதால் வேறு … Read more

சத்தீஸ்கரில் காங்கிரஸை கட்டம் கட்டும் ரெய்டு: பாஜக அஞ்சுகிறதா, அச்சுறுத்துகிறதா?!

சத்தீஸ்கர் மாநிலத்தில், முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. அங்கு, மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கவிருக்கிறது. இந்த நிலையில், சத்தீஸ்கரில் நிலக்கரி தொழில் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், இடைத்தரகர்களும் சட்டவிரோதமாக பண வசூலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் பல்வேறு இடங்களில் பிப்ரவரி 20-ம் தேதி அமலாக்கப்பிரிவு சோதனை நடத்தியது. நிலக்கரி சுரங்கம் சத்தீஸ்கரில் … Read more

தைப்பூசத்தையொட்டி பழனி முருகன் கோயிலில் வசூலான உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

பழனி: தைசப்பூசத்தையொட்டி, பழனி முருகன் கோவிலில்  உண்டியல்கள் மூலம் 5 கோடியே 9லட்சத்து 80ஆயிரம் ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சில்லரைகள் எண்ணும் பணி இன்றும்  நடைபெற உள்ளது. அறுபடை வீடுகளில் முக்கியமான மற்றும் அதிக மக்கள் கூடும் இடம் பழனி மலை. இங்குள்ள முருகன், போகரால் வடிவமைக்கப்பட்ட மருத்துவ குணமுடையது. இதனால், இங்குள்ள முருகனை தரிசித்தால், வேண்டுவோரின் நோய் நொடிகள் குணமாகி வாழ்வில் சுபிட்சம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இக்கோவில்,  திண்டுக்கல் மாவட்டம் … Read more

அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் சந்தையில் தொடர்ந்து சரிவு

மும்பை: அதானி குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் சந்தையில் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. அதானி கிரீன் எனர்ஜி பங்கு ரூ.28 குறைந்து ரூ.539 ஆகவும், அதானி பவர் பங்கு ரூ.4 குறைந்து ரூ.167 ஆகவும் உள்ளன.

பகிரங்க மோதலில் ஈடுபட்ட பெண் அதிகாரிகள் மீது… நடவடிக்கை! | Action against female officers involved in public conflict!

பெங்களூரு: பகிரங்க மோதலில் ஈடுபட்ட கர்நாடக ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரோகிணி சிந்துாரி – ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபா ஆகியோர் மீது அரசு நடவடிக்கை பாய்ந்து உள்ளது. இருவரும், அவரவர் வகித்து வரும் பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். வேறு பணி ஒதுக்காமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். ரூபாவின் கணவரான ஐ.ஏ.எஸ்., அதிகாரியும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடக அறநிலையத் துறை கமிஷனராக பணியாற்றியவர் ரோகிணி சிந்துாரி, 39. இவர் மைசூரில் கலெக்டராக இருந்தபோது, அம்மாவட்டத்தைச் சேர்ந்த ம.ஜ.த., – … Read more

“நம் தேச வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது கார்ல் மார்க்ஸ் சிந்தனை" – ஆளுநர் ரவி பேச்சு

சென்னை ராஜ் பவனில் நேற்று (21.02.2023) பேராசிரியர் தர்மலிங்கத்தின் ‘பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா சிந்தனைச் சிதறல்கள்’ மற்றும் ‘பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா ஒருங்கிணைந்த மனிதநேயம்’ ஆகிய புத்தகங்களின் தமிழாக்க வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். இதில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதாவது, “பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் ஒருங்கிணைந்த மனிதநேயம் என்பது சனாதன ஆன்மிகத்தின் சமகால விளக்கமாகும். இது ஒவ்வொரு இந்தியரின் … Read more

இன்ஸ்டாகிராமில் ஜடேஜா பாலோ செய்யும் ஒரே நபர் யார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜாவை 5 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறார்கள். ஆனாலும் தான் இவர் ஒருவரைத் தான் பாலோ செய்கிறேன் எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்ஸ்டாகிராம் ஐடியின் ஸ்கீர்ன் சாட்டை ஜடேஜா பகிர்ந்துள்ளார். இந்தியா, ஆஸ்திரேலியாவிற்கிடையே கடந்த சில தினங்களாக டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இத்தொடரில் இந்தியா முதல் 2 போட்டிகளில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டிகளில் சிறப்பாகப் பந்து … Read more

சிவசேனா வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

டெல்லி : சிவசேனா கட்சி, சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு வழங்கிய தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து, உத்தவ் தாக்ரே தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று பிவிசாரணைக்கு வர உள்ளது. இந்த மனுவானது  இன்று மாலை 3.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்திருக்கிறார்.