முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஓலா – தமிழ்நாடு அரசு இடையே புதிய ஒப்பந்தம்!

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஓலா – தமிழ்நாடு அரசு இடையே புதிய ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இதன்மூலம்; 3000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசிற்கும், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கும் இடையே ரூ.7,614 கோடி முதலீட்டில் 3,111 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, தலைமைச்செயலாளர் … Read more

சாதாரணமான போலீஸ் விசாரணைகளை மனித உரிமை மீறலாக கருத முடியாது: ஐகோர்ட் கருத்து

சென்னை: சாதாரணமான போலீஸ் விசாரணைகளை மனித உரிமை மீறலாக கருத முடியாது என சென்னை உய்ரநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மனித உரிமை மீறல் வழக்கில் சென்னை காவல் உதவி ஆணையருக்கு எதிரான உத்தரவை ஐகோர்ட் ரத்து செய்தது. விசாரணையின் தொடக்க நிலையிலேயே போலீஸ் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு கூறுவது சரியல்ல என ஐகோர்ட் குறிப்பிட்டது.

என் அழகானவன்! – இல்லத்தரசி ஷேரிங்ஸ் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் என் அழகானவன்; என்னோடு பழகியவன்; வாட்டம் போக்குபவன்; பளபளப்பானவன்; இளஞ்சிவப்பு நிறத்தழகன்; என் உடலுக்கு கேடயமானவன்;கொழுப்பைக் குறைக்க உதவுபவன் நான் அழுதால் தானழுது நான் சிரித்தால் தான் சிரித்து எனக்கு எனக்கான ஒரே உயிரானவன். என் ஜீவனை புதுப்பிக்கிற சக்தி அவனுக்கு மட்டுமே … Read more

உக்ரைன் முன்னாள் ஜனாதிபதியின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து, முன்னாள் உக்ரைன் ஜனாதிபதியான விக்டர் யானுக்கோவிச் (Viktor Yanukovich) என்பவருடன் தொடர்புடைய சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளைத் துவக்கியுள்ளது. சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை சுவிஸ் அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், முன்னாள் உக்ரைன் ஜனாதிபதியான விக்டருடன் தொடர்புடைய சட்டவிரோதப் பணம் என கருதப்படும் சுமார் 130 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளை பறிமுதல் செய்யும் நடவடிகைகளை சுவிஸ் அரசு, பெடரல் நிர்வாக நீதிமன்றத்தில் துவக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்திலிருக்கும் விக்டருடைய சொத்துக்கள் 2014ஆம் ஆண்https://www.ndtv.com/world-news/swiss-seek-to-seize-140-million-linked-to-ukraine-ex-president-viktor-yanukovich-3788271 டு முடக்கப்பட்டன. … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி தீவிரம்

ஈரோடு:  இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு  கிழக்கு தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி அனைத்து கட்சியினர் முன்னிலையில் இன்று காலை தொடங்கி நடைபெற்றது.  திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில்  தென்னரசு, தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது.  இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் … Read more

தென்னாப்ரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட 12 சீட்டாக்கள் குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டன..!!

போபால்: தென்னாப்ரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட 12 சீட்டாக்கள் குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டன. குவாலியர் அருகே உள்ள பூங்காவில் 12 சீட்டாக்களையும் மத்திய பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுகான் விடுவித்தார். பூங்காவில் ஏற்கனவே உள்ள 8 சீட்டாக்களுடன் புதிதாக கொண்டுவரப்பட்ட 12 சீட்டாக்களும் பராமரிக்கப்பட உள்ளன.

அசாம் பஜாரில் பயங்கர தீ விபத்து 300 கடைகள் எரிந்து சாம்பல்| Terrible fire in Assam Bazaar burns 300 shops

ஜோர்ஹட்,அசாமின் பிரபல பஜாரில், நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ௩௦௦ கடைகள் எரிந்து சாம்பலாகின. வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஜோர்ஹட் நகரின் மையப் பகுதியில், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட சவுக் பஜார் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, அனைவரும் கடையை அடைத்து சென்றுவிட்ட நிலையில், திடீரென ஒரு கடையில் பிடித்த தீ, வேகமாக பல கடைகளுக்கும் பரவியது. சம்பவ இடத்துக்கு … Read more

அவர் கணவரின் தோழியா, காதலியா… சந்தேகம் தீர்ப்பது எப்படி? #PennDiary105

எனக்குத் திருமணமாகி ஆறு வருடங்கள் ஆகின்றன. எங்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. என் கணவர் தொழில் செய்து வருகிறார். நான் ஹோம் மேக்கர். மூன்று வருடங்களுக்கு முன், என் கணவர் புதிய தொழில் ஒன்றை தொடங்குவதற்கு லோனுக்கு முயன்றார். ஆனால் அதில் பல தடைகள் மற்றும் சிக்கல்கள். இந்நிலையில்தான், வங்கித் துறையில் பணிபுரியும் பெண் ஒருவர், என் கணவரின் நண்பர் மூலமாக கணவருக்கு அறிமுகமானார். அவர் அந்த லோனை பெறுவதற்கு எல்லா வகையிலும் உதவி செய்தார். இறுதியில் … Read more

பாட்டியை ஓடும் காரில் துப்பாக்கியால் சுட்ட 6 வயது சிறுமி: இறுதியில் தெரியவந்த உண்மை

அமெரிக்காவில் ஓடும் காரின் பின் இருக்கையில் இருந்து 57 வயதுடைய பாட்டியை 6 வயது சிறுமி துப்பாக்கியால் சுட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கி சூடு அமெரிக்காவின் புளோரிடாவில் 6 வயது சிறுமி தனது பாட்டியை ஓடும் காரின் பின் இருக்கையில் இருந்து துப்பாக்கியால் சுட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வடக்கு துறைமுக பொலிஸார் வழங்கிய ஊடக அறிக்கையில், சிறுமி தனது 57 வயது பாட்டியின் துப்பாக்கியை காரின் பின் இருக்கையில் உள்ள பாக்கெட்டில் … Read more

கர்நாடக வனத்துறை துப்பாக்கிச்சூடு: தமிழக மீனவர் உடல் மீண்டும் உடற்கூறாய்வு செய்ய ஒப்புதல்…

சேலம்: கர்நாடக வனத்துறை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாக கூறப்படும் தமிழக மீனவர்  உடலை மீண்டும் உடற்கூறாய்வு செய்ய அதிகாரிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியில் தமிழ்நாடு – கர்நாடக எல்லையான அடிபாலாறு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பது வழக்கம். அங்கு மீன் பிடிக்க தொடர்ச்சியாக கர்நாடக வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு அப்பகுதியில் மீன் பிடித்த தமிழக மீனவர் பழனி என்பவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய கர்நாடக … Read more