சென்னை சென்ட்ரல் – விமானநிலையம் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம்

சென்னை : சென்னை சென்ட்ரல் – விமானநிலையம் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆலந்தூர் வழித்தடத்தில் பயணிக்குமாறும் மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Doctor Vikatan: கர்ப்பமாக இருக்கும்போது தைராய்டு மாத்திரைகளைத் தொடர்ந்து எடுக்கலாமா?

Doctor Vikatan: திருமணமாவதற்கு முன்புதான் எனக்கு தைராய்டு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. மருத்துவரைச் சந்தித்து தைராய்டுக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது கர்ப்பமாகி இருப்பதால், அந்த மருந்துகளைத் தொடர்ந்து எடுக்கலாமா என குழப்பமாக இருக்கிறது. கர்ப்பகாலத்தில் எந்த மருந்தும் எடுக்கக்கூடாது என்கிறார்களே…. உண்மையா? பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி மருத்துவர் ஸ்ரீதேவி உங்களைப் போல பலருக்கும் உள்ள சந்தேகம்தான் இது. கர்ப்ப காலத்தில் சில மருந்துகளை எடுக்கக்கூடாது … Read more

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடக்கம்

ராமேஸ்வரம்: கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது. தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையே நடுக்கடல் பகுதியில் கச்சத்தீவு அமைந்துள்ளது. ராமேசுவரத்தில் இருந்து 12 மைல் கல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 18 மைல் கல் தொலைவிலும் இந்த தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. ஆண்டுதோறும் இந்த ஆலய திருவிழா பிப்ரவரி மாதம் இறுதியிலோ அல்லது மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலோ நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று தொடங்கி, … Read more

ஆளுநர் தமிழிசைக்கு எதிராக தெலுங்கானா அரசு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு!!

டெல்லி : தமிழ்நாட்டைப் போல தெலுங்கானா மாநிலத்திலும் ஆளுநருக்கும் – முதலமைச்சருக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததால் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராக தெலுங்கானா அரசு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.

இளமை, கேச வளர்ச்சி, உடல் பலம், தாம்பத்யம்… மிடுக்காய் மிளிரவைக்கும் கடுக்காய்!

இயற்கை தந்த பல மருத்துவ குணம் கொண்ட பொருள்களில் கடுக்காய்க்கு முக்கிய இடமுண்டு. `காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் உண்டால் கோலை ஊன்றி குறுகி நடக்கும் கிழவனும், கோலை வீசி குலாவி நடப்பானே’ என்கிறது சித்தர்களின் வாக்கு. `ஈனாத மாட்டுக்கு ஒரு கடுக்காய்; இளம் பிள்ளைத்தாய்ச்சிக்கு ஏழு கடுக்காய்’ போன்ற பழமொழிகளும் கடுக்காயின் மகத்துவத்தை நமக்கு உணர்த்துகின்றன. `உடலை அழியாத் தன்மைக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்றால், 60-க்கும் மேற்பட்ட காயகல்ப முறைகளைப் பின்பற்ற … Read more

மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்! இந்த 3 ராசிக்காரர்களுக்கும் எடுத்த காரியம் எல்லாம் வெற்றியாம்

நவகிரகங்களில் தளபதி செவ்வாய் ஆகவே இவர் தைரியம், துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த ராசியில் மே 10 ஆம் திகதி வரை இருப்பார். மிதுனம் செல்லும் செவ்வாயின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இருப்பினும் இந்த 3 ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும், அரசு வேலையைப் பெறும் வாய்ப்பையும் பெறுவார்கள்.  மிதுனம்  இந்த செவ்வாய் பெயர்ச்சியானது மிதுன ராசிக்காரர்களுக்கு அற்புதமாக அமையும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். விரும்பிய வேலை கிடைக்கும். சம்பளம் உயரும். … Read more

வார ராசிபலன்:  3.3.2023  முதல் 9.3.2023 வரை! வேதாகோபாலன்

மேஷம் மகான்களோட ஆசியும், புதிய தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும். ஒங்களோட தளராத முயற்சி காரணமாப் போட்டி, பந்தயங்களில் சக்ஸஸ் கெடைக்கும். இந்த வாரம் உங்கள் சம்பாதிக்கும் திறன் மேம்படும்.  கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக பெஸ்ட்டாய்ச் செய்து முடிப்பீர்கள்.  கவர்ன்மென்ட் வேலைக்கு மனு செய்தவர்களுக்கு ஹாப்பி நியூஸ் வரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். லாபம் கொறையாது. குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தைகளின் முன்னேற்றங்கண்டு ஹாப்பினஸ் அதிகரிக்கும். … Read more

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை!

சென்னை : ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி ஓ.பி.எஸ். தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர் பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் உரிமையியல் வழக்கை தாக்கல் செய்துள்ளார். நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பாக இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப் பொதுச் செயலாளராக நியமித்தது, ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர்களை நீக்கியது ஆகிய தீர்மானங்களை ரத்து செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய மருத்துவ கண்காட்சி 17 எஸ்.சி.ஓ., நாடுகள் பங்கேற்பு| Traditional Medicine Exhibition 17 SCO, Countries Participating

புதுடில்லி : எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முதல் சர்வதேச பாரம்பரிய மருத்துவக் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி அசாமின் குவஹாத்தியில் நேற்று துவங்கியது. இதில் அமைப்பில் உள்ள ௧௭ நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இந்தியா சீனா உட்பட ௧௭ நாடுகள் இடம்பெற்றுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முதல் சர்வதேச பாரம்பரிய மருத்துவக் கருத்தரங்கு மற்றும் காண்காட்சி குவஹாத்தியில் நேற்று துவங்கியது. நான்கு நாட்கள் நடக்கும் இந்தக் கருத்தரங்கில் ௧௭ நாடுகளைச் சேர்ந்த ௧௫௦ பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். … Read more