தமிழ்நாடு மின்வாகன கொள்கை 2023ஐ வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

சென்னை: தமிழ்நாடு மின்வாகன கொள்கை 2023ஐ தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு மின்வாகன கொள்கை 2023ஐ தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் மின்வாகன கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மின் வாகன உற்பத்தி துறையில் ரூ.50,000 கோடி முதலீடு, 150 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது. முன்னேற்ற நிலையங்களுக்கான ஊக்க சலுகைகள், சாலை வரி விலக்கு, பதிவு கட்டணம், அனுமதி கட்டணம் தள்ளுபடி 2025 டிசம்பர் வரை … Read more

நாமக்கல்லில் முட்டை பண்ணை கொள்முதல் விலை ரூ.4.40-க்கு விற்பனை

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை பண்ணை கொள்முதல் விலை ரூ.4.40-க்கும்; சென்னையில் ஒரு முட்டை விலை ரூ.4.65-க்கும் விற்கப்படுகிறது. நாமக்கல்லில் ஒரு கிலோ கறிக்கோழி கொள்முதல் ரூ.83-ஆக தொடருகிறது.

வளர்ப்பு குரங்குகள் மூலம் சித்ரவதை; பாலியல் கொடுமைகளுக்குள்ளான பெண்கள்? – மூடப்பட்ட ஆசிரமம்!

விழுப்புரம் மாவட்டம், கெடார் அருகேயுள்ள குண்டலிப்புலியூர் பகுதியில் சுமார் 15 ஆண்டுகளாக ஜீபின் என்பவர் ‘அன்புஜோதி ஆசிரமம்’ நடத்தி வருகிறார். இந்த ஆசிரமத்தில் முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், 2021-ம் ஆண்டு இங்கு சேர்த்துவிடப்பட்ட முதியவர் ஜபருல்லா என்பவரை பார்ப்பதற்காக வெளிநாட்டிலிருந்து சலீம்கான் எனும் அவரின் உறவினர் வந்திருந்தபோது, அந்த முதியவர் அங்கு இல்லாமல் போயிருக்கிறார். ஆசிரம உரிமையாளர் தம்பதி நித்யானந்தா ஆசிரமம்: பெண் பக்தை … Read more

ஜப்பான் தீவு முழுவதும் சூழ்ந்த காகங்கள்.! இயற்கை பேரழிவின் தொடக்கமா?

ஜப்பானிய தீவு ஒன்றில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூட்டம் கூட்டமாக சூழ்ந்த விசித்திரமான நிகழ்வின் வீடியோக்களை பீதியை கிளப்பியுள்ளது. ஆயிரக்கணக்கான காகங்கள் கியோட்டோவிற்கு அருகிலுள்ள ஜப்பானிய தீவான ஹோன்ஷுவில் தரை, வானம், கட்டிடங்கள், வாகனங்கள் என எங்கு பார்த்தாலும் காகங்கள் பறப்பதைக் கண்டு மக்கள் அதிர்ச்சியைந்தனர். தீவில் மர்மமான முறையில் காக்கைகள் கூடும் விசித்திரமான வீடியோவை பல பயனர்கள் இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த நிகழ்வின் பின்னணியில் உள்ள காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், விலங்குகள் அல்லது பறவைகள் … Read more

பிரபாகரன் விவகாரத்தை வைத்து அரசியல் செய்யும் தமிழக அரசியல் கட்சிகள்… வைகோ, சீமான் கருத்து…

சென்னை: இலங்கை ராணுவத்துடனான போரில்  விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், 14 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது பிரபாகரனை வைத்து தமிழக அரசியல் கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன. வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, மே 18 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. எனினும் விடுதலைப் புலிகளின் பன்னாட்டுத் தொடர்பாளர் செ. பத்மநாதன் விடுத்த அறிக்கையில் பிரபாகரன் 2009 மே 17 ஆம் நாள் இறந்ததாக அறிவித்தார். சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே … Read more

இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை குறித்து ஆராய குழு அமைத்து அரசாணை வெளியீடு

சென்னை: இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க குழு அமைத்து அரசாணை வெளியீட்டுள்ளது. நிதித்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர். தொடக்கக்கல்வி இயக்குனர் அடங்கிய குழு அமைத்து அரசாணை வெளியிட்டது. சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி கடந்த ஆண்டு டிச.27-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

`சிறுத்தை நடமாட்டத்துக்கு பயந்து, வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறோம்!' -அலறும் விவசாயிகள்

நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை அருகே அடுத்தடுத்து அமைந்திருக்கும் ஊராட்சிகள், இருக்கூர், வீரணம்பாளையம், நடந்தை. இந்த மூன்று ஊராட்சிகளிலும் 15 -க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களைச் சுற்றி 15 கிலோமீட்டர் சுற்றளவுள்ள இடங்களில் வசிக்கும் விவசாயிகளையும், பொதுமக்களையும் தான் சிறுத்தை ஒன்று அச்சமடைய வைத்துள்ளதாகச் சொல்கிறார்கள். கடந்த மாதம் 31-ம் தேதி செஞ்சுடையாம்பாளையத்தைச் சேர்ந்த செந்தில்ராஜா என்பவரது பசுமாட்டுக்கன்றை மர்ம விலங்கு இரவில் வேட்டையாட, ‘வெறிநாய் பார்த்த வேலை இது’ என்று மக்கள் முதலில் நினைத்தனர். … Read more

ஃபிரீஸரில் பெண்ணின் சடலம்! காதல் விவகாரம்., தாபா உணவக உரிமையாளர் கைது

டெல்லியில் தாபா உணவகம் ஒன்றில் ஃபிரீஸரில் இளம் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. தென்மேற்கு டெல்லியின் நஜப்கரில் உள்ள ஒரு தாபாவில் 25 வயது பெண்ணின் சடலம் குளிர்சாதன பெட்டியில் இன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மூன்று நாட்களுக்கு முன்பு அந்தப் பெண் கொல்லப்பட்டதாகவும், அவளது சடலம் தாபாவின் உறைவிப்பான் அறைக்குள் வைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். தாபா உரிமையாளர் சாஹில் கெஹ்லோட் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த பெண் டெல்லி உத்தம் நகரில் வசிப்பவர் என்று பொலிஸார் … Read more

கோவை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் 5 பேர் கைது

கோவை: கோவையில் நீதிமன்ற வாய்தாவுக்கு வந்தவர்கள்மீது  நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோவை கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த கோகுல் மற்றும் சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த மனோஜ் இருவர் மீது உள்ள  வழக்கு விசார ணைக்காக கோவை நீதிமன்றத்திற்கு  வருகை தந்தனர்..  அவர்கள் இருவரும்  நீதிமன்றம் அருகே உள்ள தேநீர் கடையில் இருவரும் தேநீர் குடிக்க சென்ற … Read more

நாளை முதல் 10, 12-ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வு ஏப்.5-ம் தேதி வரை நடைபெறும்

சென்னை: 10, 12-ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வு நாளை முதல் ஏப்.5-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 7,250 தேர்வு மையங்களில் 38,83,710 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வை எழுதவுள்ளனர்.