ஸ்ரீ மலஹானி கரேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேகம் சிருங்கேரியில் கோலாகலம்| Sri Malahani Kareswara Swamy Temple Kumbabhishekam Kolakalam at Sringeri

கர்நாடக மாநிலம், சிருங்கேரியில், ஸ்ரீ மலஹானி கரேஸ்வர சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. வராஹமாக அவதரித்த மகாவிஷ்ணுவின் பற்களில் இருந்து தோன்றிய துங்கா நதிக்கரையில் அமைந்துள்ளது, சிருங்கேரி திவ்ய ஷேத்ரம். ஆதிசங்கரர் தோற்றுவித்த நான்கு ஆம்னாய பீடங்களில் முதன்மையானது, சிருங்கேரியில் அமைந்துள்ள ஸ்ரீ சாரதா பீடம். சிருங்கேரி நகரின் நடுவில், சிறிய குன்றின் மேல் புராதனமான ராமாயண காலத்தில் இருந்தே பவானி அம்பாள் சமேத மலஹானிகரேஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ளது. விபாண்டக … Read more

பூட்டப்பட்ட ஆளுநர் மாளிகை வளாகப் பள்ளிவாசல்; ஜவாஹிருல்லா கோரிக்கையும், அதிகாரிகள் விளக்கமும்!

சமீபத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், “சென்னையில் ஆளுநர் மாளிகையின் முதல் வாசல் அருகே பல ஆண்டுகளாக ஒரு பள்ளிவாசல் இயங்கிவந்தது. பயணிகளுக்கும், சுற்றுப்புறத்தில் பல்வேறு பணிகளில் இருப்போர்க்கும் தொழுகையை நிறைவேற்ற அந்தப் பள்ளிவாசல் பெரும் உதவியாக இருந்தது. த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லா ஐவேளைத் தொழுகை, வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை, ரமலான் மாதத்தில் இரவுத் தொழுகைகள் யாவும் அந்தப் பள்ளிவாசலில் மிகவும் அமைதியாக நடந்துவந்தன. இந்தப் பள்ளிவாசலாலோ, … Read more

முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய அல் நஸர்! அற்புதமான சாதனை..ரொனால்டோ வெளியிட்ட பதிவு

சவூதி அரேபியா மகளிர் பிரீமியர் லீக் தொடரை வென்ற அல் நஸர் அணிக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ வாழ்த்து தெரிவித்துள்ளார். மகளிர் அல் நஸர் அணி மகளிர் அல் யமமஹ் அணியை எதிர்கொண்ட அல் நஸர் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன்மூலம் முதல் முறையாக சவூதி அரேபியா மகளிர் பிரீமியர் லீக் தொடரை வென்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய வீராங்கனைகள் உற்சாகமாக வெற்றியை கொண்டாடினர். 🟡🏆🔵 pic.twitter.com/Kc0BqhU3iV — إدارة … Read more

உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…

சென்னை: தமிழ்நாடு அரசின் ‘முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்’ குறித்து அதிகாரிகளுடன்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். முத்திரை பதிக்கும் தமிழ்நாடு அரசன் திட்டங்கள் குறித்து 2 மாதங்களுக்கு ஒருமுறை நானே நேரடியாக ஆய்வு செய்வேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்படி, அந்த திட்டங்கள் தொடர்பான அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடன்று ஆய்வு மேற்கொண்டார்.  … Read more

ஸ்மிருதி மந்தனா ரூ. 3.4 கோடிக்கு ஏலம்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அறிவிப்பு

மும்பை: மும்பையில் மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள்; இந்திய அணி கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவை ரூ. 3.4 கோடிக்கு தேர்ந்தெடுத்துள்ளதாக ஏலம் எடுத்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அறிவுத்துள்ளது.

கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கு தடுப்பூசி முகாம் ஜூனில் துவக்கம்| Vaccination camp for cervical cancer starts in June

புதுடில்லி : கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கு எதிரான, நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட சீரம் இன்ஸ்டிடியூட்டின், ஹெச்.பி.வி., என்ற தடுப்பூசி, ‘செர்வாவாக்’ என்ற பெயரில் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தடுப்பூசி செலுத்தும் முகாம், முதல்கட்டமாக தமிழகம், கர்நாடகா, மிசோராம், சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் ஜூனில் துவங்கப்படுகிறது. இதில், 2.55 கோடி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய நோய்த் தடுப்பாற்றல் திட்டத்தில் இந்த தடுப்பூசியை வெளிக்கொணர, மத்திய சுகாதாரத் … Read more

“காரைக்கால் மார்க் துறைமுகம் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படுகிறது!” – புதுச்சேரி அதிமுக புகார்

புதுச்சேரி அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த 2008-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் காரைக்கால் கடற்கரையோரத்தில் இருந்த சுமார் 650 ஏக்கர் அரசு நிலத்தில், துறைமுகம் அமைப்பதற்காக மார்க் என்ற தனியார் நிறுவனத்துக்கு 30 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டது. குத்தகை விடும்போதே ஆண்டுக்கு ரூ.2.6 கோடி என குறைந்த வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது. அந்த தொகை மிகவும் குறைவானது என்றும், சட்டத்துக்கு … Read more

1100 கோடியை நன்கொடையாக கொடுத்துவிட்டு, பெயரைக் கூட சொல்லாமல் சென்ற மனிதர்!

அமெரிக்காவில் துருக்கி தூதரகத்திற்குள் நுழைந்த அனாமதேய நபர் ஒருவர், கிட்டத்தட்ட 1100 கோடி ரூபாயை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடையாக கொடுத்துச் சென்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அநாமதேய நபர் ஒருவர் துருக்கிய தூதரகத்திற்குள் நுழைந்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 30 மில்லியன் டொலர்களை (இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட ரூ.1100 கோடி) நன்கொடையாக அளித்ததாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை ட்விட்டரில் இந்த செய்தியைப் பகிர்ந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், பாகிஸ்தானிய குடிமகனாகக் கூறப்படும் நபரின் கருணையால் … Read more

பொள்ளாச்சி வழக்கு: எடப்பாடி பழனிச்சாமியை சேர்க்க கோரிய மனு அபராதத்துடன் தள்ளுபடி

சென்னை: பொள்ளாச்சி வழக்கு விசாரணையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சேர்க்கக்கோரிய வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் அபராதத்துடன் தள்ளுபடி செய்துள்ளது. பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் எடப்பாடி பழனிசாமி விசாரிக்க கோரி தாக்கல் செய்த மனு அபராதத்துடன் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில்,  பாலச்சந்தர் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ”பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், டாக்டர், பேராசிரியை என்று பல பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அதுதொடர்பான வீடியோ கடந்த 2019- ம் ஆண்டு … Read more

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் உயிருடன் இல்லை: இலங்கை இராணுவம் தகவல்

இலங்கை: தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் நலமுடன் உயிருடனும் இருப்பதாக பழ நெடுமாறன் தகவல் வெளியிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் இலங்கை இராணுவம் அதனை மறுத்துள்ளது. 2009 மே 18 அன்று தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை இறுதிக்கட்ட யுத்தத்தில் கொன்றதற்கான ஆதாரங்கள் தம்வசம் உள்ளதாக இலங்கை ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்ததாக பிபிசி தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.