ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும்! மத்தியஅமைச்சர் பாராளுமன்றத்தில் தகவல்…

டெல்லி: ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும் என நாடாளுமன்றத்தில்  மத்தியஅமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களால், பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து, வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றனர். ஆனால், மத்தியஅரசு அதை தடுப்பதற்கு பதிலாக, 28 சதவிகித ஜிஎஸ்டி வரி வசூலித்து வருகிறது. இதனால், தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள ஆன்லைன் தடை சட்டத்துக்கும் கவர்னர் அனுமதி மறுத்து வருகிறார்.  அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி ஆன்லைன் … Read more

பிரதமர் மோடி பேச்சுக்கு எதிர்ப்பு : காங்கிரஸ் வெளிநடப்பு

டெல்லி : நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது 2004 முதல் 2014 வரையிலான ஆட்சிக் காலத்தில் அதிகளவில் ஊழல் நடந்ததாக பிரதமர் மோடி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.

ஹொளேநரசிபுரா மஹாராஜா ரேவண்ணாவுக்கு புதிய பட்டம்| Holenarasipura Maharaja is a new title for Revanna

மாண்டியா, : ”கே.ஆர்.பேட் தொகுதியில் ரேவண்ணா போட்டியிட மாட்டார். அவர் ஹொளேநரசிபுராவின் மஹாராஜா,” என ம.ஜ.த., – எம்.எல்.ஏ., புட்டராஜு வர்ணித்துள்ளார். மாண்டியா பாண்டவபுராவில், நேற்று அவர் கூறியதாவது: முன்னாள் அமைச்சர் ரேவண்ணா, மாண்டியாவின், கே.ஆர்.பேட் தொகுதியில் போட்டியிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அவர் ஹொளேநரசிபுராவின் மஹாராஜா. இங்கு அவர் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். ஹாசன் சட்டசபை தொகுதியில், பவானி ‘சீட்’ எதிர்பார்க்கிறார். இது குறித்து, தேவகவுடாவின் வழிகாட்டுதலில், ரேவண்ணாவும், குமாரசாமியும் முடிவு செய்வர். … Read more

தஞ்சாவூர்: சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு – ஹெல்மெட் அணிந்து 7 கி.மீ பைக் ஓட்டிய மாவட்ட ஆட்சியர்!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்துவதற்காகவும், சாலை விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்காகவும் ஹெல்மெட் அணிந்து ஏழு கிலோ மீட்டர் தூரம் வரை ராயல் என்பீல்டு பைக்கை ஓட்டிச் சென்று விபத்தில்லா சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது பலரையும் கவர்ந்தது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக ஹெல்மெட் அணிவதன் அவசியம், சாலை போக்குவரத்து விதிமுறைகளைக் … Read more

78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்களின் மூலம் இரவு நேரங்களில் சென்னை சாலைகள் சுத்தம் செய்யும் பணி!

சென்னை; 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்களின் மூலம் இரவு நேரங்களில் சென்னை சாலைகள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருவதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிக்க சென்னையின் பல சாலைகள் இரவு நேரங்களில் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது   78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்களின் மூலம்  இரவு நேரங்களில் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியால்,  387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து … Read more

2022-2023ம் நிதியாண்டுக்கான சொத்து வரியை உடனே செலுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை : 2022-2023ம் நிதியாண்டுக்கான சொத்து வரியை உடனே செலுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.சென்னையில் சுமார் ரூ.346 கோடி அளவுக்கு சொத்து வரி நிலுவைத் தொகையாக உள்ளதாகவும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 5.03 லட்சம் பேர் சொத்து வரி செலுத்தாமல் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உப்புமா கதை சொன்ன திருச்சி சிவா; சிரிப்பலையில் மூழ்கிய மாநிலங்களவை!

மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், மாநிலங்களவையில் இன்று தி.மு.க எம்.பி திருச்சி சிவா, உப்புமா கதை ஒன்று கூறி விமர்சிக்க அவையே சிரிப்பலையில் மூழ்கியது. நாடாளுமன்றம் தன்னுடைய உரையின்போது உப்புமா கதை சொல்லத்தொடங்கிய திருச்சி சிவா, “ஒரு கல்லூரி விடுதியில் எல்லா நாள்களும் உப்புமா பரிமாறப்பட்டு வந்தது. இதனால் எரிச்சலடைந்த மாணவர்கள் உப்புமா வேண்டாம் எனப் போராட்டத்தில் இறங்கினர். வார்டனுக்கு என்ன செய்வதென்று ஒரு வழியிலும் தெரியவில்லை. பிறகு வார்டன், `வாக்கெடுப்பு நடத்துகிறேன் உங்களுக்கு … Read more

கனடாவில் தீப்பிடித்து எரிந்த வீட்டில் இருந்து கிடைத்த பெண் சடலம்!

கனடாவில் உள்ள வீடு தீப்பிடித்து எரிந்த நிலையில் அங்கிருந்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தீப்பிடித்த வீடு நோவா ஸ்கோடியாவின் அனபோலிஸ் கவுன்டியில் உள்ள வீடு தீப்பிடித்து எரிவதாக இரு தினங்களுக்கு முன்னர் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு போன் வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அங்கு உபகரணங்களுடன் விரைந்து சென்றனர். அவர்கள் சென்ற போது வீடு தீப்பிடித்து எரிந்த நிலையில் இருந்தது. File/saltwire பெண் சடலம் பிறகு வீட்டிற்குள் சடலமாக கிடந்த பெண்ணை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். … Read more

தனுஷ் நடித்துள்ள ‘வாத்தி’ படத்தின் டிரெய்லர் வெளியானது…

தனுஷ் – சம்யுக்தா நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழில் ‘வாத்தி’ என்றும் தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரிலும் வரும் 17 ம் தேதி ரிலீசாகிறது. ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் ஏற்கனவே இந்தப் படத்தின் பாடல் வெளியாகி வைரலாகி உள்ளது.