"துருக்கி வரலாற்றில் மிகவும் மோசமான நிலநடுக்கம்!" – நெஞ்சை உறையவைக்கும் படங்கள்! | Visual Story

துருக்கி – சிரியா நிலநடுக்கம் துருக்கியில் சிரிய எல்லைக்கு அருகில் அடுத்தடுத்து ஏற்பட்ட மூன்று நிலநடுக்கங்களில் இதுவரை 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். துருக்கி – சிரியா நிலநடுக்கம் மேலும் பலர் மீட்கப்படவுள்ள நிலையில் பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம் என அஞ்சப்படுகிறது. துருக்கி – சிரியா நிலநடுக்கம் அதிகாலையில் 7.8 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலையில் 6.0 ரிக்டர் அளவில் ஒரு … Read more

பிரான்சில் பயங்கர தீ விபத்து: தாயுடன் 7 குழந்தைகள் மூச்சுத் திணறி மரணம்

பிரான்சில் வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் தாயுடன் சேர்த்து 7 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாயுடன் 7 குழந்தைகள் மரணம் திங்கட்கிழமை வடக்கு பிரான்சில் தங்கள் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு தாயும் அவரது 2 முதல் 14 வயதுடைய 7 குழந்தைகளும் தீ விபத்துக்குள்ளாகி இறந்ததாக காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இந்த தசாப்தத்தில் பிரான்சில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்து என கூறுகின்றனர். தலைநகர் பாரிஸுக்கு கிழக்கே சுமார் … Read more

வழக்கறிஞர் கவுரி உள்பட 5 பேரை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவு!

சென்னை: வழக்கறிஞர்  விக்டோரியா கவுரி உட்பட 5 பேர் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.   உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் எட்டு பேரை பரிந்துரை செய்த நிலையில், 5 பேரை மத்தியஅரசு குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளது. கடந்த 17ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமைநீதிபதி சந்திரசூடு தலைமையில்  கொலிஜியம் கூட்டம் நடைபெற்றது. இதில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக எட்டு பேரை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்து … Read more

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,600-ஐ தாண்டியது..!!

அங்காரா: துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,600ஐ தாண்டியது. துருக்கியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,014ஐ தாண்டியது. சிரியாவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 582ஐ கடந்தது. இடிபாடுகளில் இருந்து 10 நிமிடங்களுக்கு ஒன்று என்ற கணக்கில் சடலங்கள் மீட்கப்பட்டு வருவதாக மீட்புப் படை தகவல் தெரிவித்துள்ளது.

மழை பாதிப்பு: “முதலமைச்சர் அறிவித்திருக்கும் நிவாரணம், துயர் துடைக்க போவதில்லை!” விவசாயிகள் வேதனை!

டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறிய மழை ஏற்படுத்திய பாதிப்பில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் துயரத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் ஒரு ஹெக்டேருக்கு ரூ 20,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருப்பது விவசாயிகள் கண்ணீரை துடைக்க போவதில்லை என கூறும் விவசாயிகள் கூடுதல் நிவாரணம் கேட்டு போராட்டம் நடத்த போவதாகவும் அறிவித்துள்ளனர். மழை பாதிப்பை பார்வையிட்ட அமைச்சர் சக்கரபாணி டெல்டா மழைச் சேதம்: ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பித்த அமைச்சர் குழு – விவசாயிகள் … Read more

100ற்கு மேற்பட்ட உயிர்களை காவு வாங்கிய பாரிய நிலநடுக்கம்! உயிரழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம்.. அச்சத்தில் மக்கள்

துருக்கி மற்றும் சிரியாவில் உணரப்பட்ட பாரிய நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 300 ஐ தாண்டியுள்ளது. துருக்கியில் 900 ற்கும் மேற்பட்டவர்களும் சிரியாவில் 470 ற்கும் மேற்பட்டவர்களும் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. துருக்கியில் ஆயிரத்து 700 ற்கும் அதிகமான கட்டடங்கள் இடிந்துவீழ்ந்துள்ள நிலையில், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. துருக்கியிலுள்ள 10 நகரங்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு உள்துறை அமைச்சர் சுலைமான் சொய்லூ குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக இங்குள்ள 2,200 … Read more

ரூ.1057 கோடி மதிப்பிட்டில் தமிழ்நாட்டிற்கு 9 புதிய ரயில் பாதைகள்! மத்திய பட்ஜெட்டில் தகவல்…

டெல்லி:  40 ஆண்டுகளுக்குப்பின், தமிழ்நாட்டில் 9 புதிய ரயில் வழித்தடம் மற்றும்  ரயில்பாதைகள் விரிவுபடுத்த  2023-24 மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் ரூ.1057 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு (2022) தாக்கல் செய்த பட்ஜெட்டிலும்,  தமிழ்நாட்டில் புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு ரூ.1000 ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும்,  46 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன கூறியிருந்தது. அதுபோலவே இந்த ஆண்டும், அதே அளவிலான நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. பிப்ரவரி 1ந்தேதி மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் … Read more

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.0ஆக பதிவு

அங்காரா: துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 3வது முறையாக நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.0ஆக பதிவாகியுள்ளது. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் கிரீன்லாந்து வரை உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கியாரா அத்வானி – சித்தார்த் மல்ஹோத்ரா திருமணம் ஒரு நாள் தள்ளிவைப்பு – 100 பேருக்கு மட்டும் அழைப்பு!

பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி கடந்த பல ஆண்டுகளாகக் காதலித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சாலிமரில் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர். இதற்காக மணமக்கள் மற்றும் விருந்தினர்கள் ஏற்கெனவே ராஜஸ்தான் சென்றுவிட்டனர். அவர்கள் தங்குவதற்குச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மணமகள் மும்பையிலிருந்து டிசைனர் மனீஷ் மல்ஹோத்ராவுடன் ஜெய்சாலிமர் புறப்பட்டுச் சென்றார். திருமணம் இன்றுதான் நடப்பதாக இருந்தது. ஆனால் தற்போது திருமணம் நாளை நடக்க இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. நேற்று இரவு … Read more

தமிழக ரயில் திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிப்பு – போதுமான நிதி ஒதுக்கிடு செய்யவில்லை! மதுரை எம்.பி. குற்றச்சாட்டு

மதுரை: மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழக வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன தேவைக்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் குற்றச்சாட்டியுள்ளார். பிப்ரவரி 1ந்தேதி நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், ரூ. 2.40 லட்சம் கோடி  ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இதில்,  தமிழ்நாட்டில் 9 புதிய ரயில் வழித்தடம் மற்றும்  ரயில்பாதைகள் விரிவுபடுத்த  ரூ.1057 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், மத்திய … Read more