சென்னையில் திருட்டு வாகனங்களை கண்டுபிடிக்க அதிநவீன ஏஎன்பிஆர் கேமராவை பயன்படுத்த போலீஸ் முடிவு

சென்னை: சென்னையில் திருட்டு வாகனங்களை கண்டுபிடிக்க அதிநவீன ஏஎன்பிஆர் கேமராவை பயன்படுத்த போலீஸ் முடிவு செய்துள்ளனர். முதற்கட்டமாக 50 இடங்களில் 200 ஏஎன்பிஆர் கேமராக்களை பொருத்த சென்னை காவல்துறை திட்டம் வகுத்துள்ளது. திருட்டு வாகனத்தின் எண் கேமராவில் பதிவானதும் போலீசுக்கு தகவல் அளிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவித்துள்ளனர்.

"காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் பேனா நினைவுச்சின்னத்தை விமர்சிக்கிறார்கள்!" – கே.எஸ்.அழகிரி தாக்கு

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கியப் பணி, எழுத்தாளுமையைப் போற்றும்விதமாக, அவர் பயன்படுத்திய பேனாவின் மாதிரி வடிவத்தைப் பிரமாண்ட சிலையாகச் சென்னை மெரினா கடலுக்கு நடுவே அமைக்க, தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்காக சுமார் 81 கோடி ரூபாய் செலவில் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையைவிடப் பெரியதாக 134 அடி உயரத்தில் பேனா சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்துகொண்டிருக்கின்றன. மெரினா கடலில் பேனா சிலை இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் … Read more

கருப்பை நீக்கினால் மட்டுமே பெண்கள் இனி அந்த ஆபத்தில் இருந்து தப்ப முடியும்: மருத்துவர்கள் ஆலோசனை

கருப்பை புற்றுநோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க, பெண்கள் கருப்பை நீக்க வேண்டும் என தற்போது மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கருப்பை புற்றுநோய் கருப்பை நீக்கம் அல்லது salpingectomy என்பது பொதுவாக நிரந்தர கருத்தடையாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது கருப்பை புற்றுநோய் தொடர்பான ஆய்வறிக்கை ஒன்று வெளியானதில், பிள்ளைகள் இனி போதும் என்ற முடிவுக்கு வந்த தாய்மார்கள், கருப்பை நீக்கம் செய்து கொள்வது கருப்பை புற்றுநோய் என்ற ஆபத்தில் இருந்து தப்பிக்க காரணமாக அமையும் … Read more

பாரம்பரிய நகரங்கள் மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க ரயில்வே திட்டம்

டெல்லி: பாரம்பரிய நகரங்கள் மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக மக்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. பாரம்பரியத்துக்கு ஹைட்ரஜன் என்ற பெயரில் திட்டத்துக்கு தலா ரூ.80 கோடியில் ஹைட்ரான் ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஹைட்ரான் ரயிலை இயக்க ஒவ்வொரு வழித்தடத்தில் கட்டமைப்புகளை உருவாக்க ரூ.70 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

“அவைத்தலைவரின் கடிதத்தைப் புறக்கணிக்கிறோம்; தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம்!' – ஓபிஎஸ் அணி

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, அ.தி.மு.க தரப்பில் வேட்பாளரைத் தேர்வுசெய்து, தேர்தல் ஆணையத்தில் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய பொறுப்பு, எடப்பாடி பழனிசாமி அணியிலிருக்கும் அ.தி.மு.க அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்குச் சென்றிருக்கிறது. இதையடுத்து, வேட்பாளர் விவரங்கள்கொண்ட சுற்றறிக்கையை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பி, ஒப்புதல் பெறுகின்ற பணியை தமிழ்மகன் உசேன் தொடங்கிவிட்டார். ஓ.பி.எஸ் தரப்புக்கும் நீதிமன்ற உத்தரவுப்படி, அவைத்தலைவர் கடிதம் அனுப்பியிருந்தார். உச்ச நீதிமன்றம் இந்த நிலையில், … Read more

பாஸ்போர்ட் திடீர் மாயம்., விமானத்தை தவறவிட்ட அவுஸ்திரேலிய குடும்பம்

இந்தியாவில், பெங்களூரு விமான நிலையத்தில் திடீரென பாஸ்போர்ட் காணாமல் போனதால் அவுஸ்திரேலிய குடும்பத்தினர் விமானத்தை தவறவிட்டனர். பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் (KIA) புறப்படுவதற்கு முந்தைய பாதுகாப்பு சோதனையில் பாஸ்போர்ட் மற்றும் தொலைபேசிகள் காணாமல் போனதால், அவுஸ்திரேலிய குடும்பம் ஒன்று தாயகம் திரும்பும் திட்டத்தை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவுஸ்திரேலிய குடும்பம் குடும்பம் டாக்டர் ரமேஷ் நாயக், அவரது மனைவி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் என அடையாளம் காணப்பட்டது. … Read more

அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் எழுதியுள்ள கடிதத்தில் ஓபிஎஸ் வேட்பாளர் பெயர் இல்லாதது தவறு: பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் பேட்டி

சென்னை: அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் எழுதியுள்ள கடிதத்தில் ஓபிஎஸ் வேட்பாளர்பெயர் இல்லாதது தவறு என ஓபிஎஸ் உடனான ஆலோசனைக்கு பின் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் பேட்டியளித்துள்ளனர். பொதுக்குழு தான் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டுமே தவிர முன்கூட்டியே அவைத்தலைவர் முடிவு செய்தது தவறு என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

பருமனான உடல்வாகு… தாம்பத்திய வாழ்க்கையை பாதிக்குமா? | காமத்துக்கு மரியாதை – S 3 E 27

“என் ஹஸ்பண்ட் ரொம்ப ஹேண்ட்சமா இருப்பார். ஆனா உடல் பருமனாகவும் இருப்பார். இதனால, தாம்பத்திய உறவு வெச்சுக்கிறப்போ ரொம்ப கஷ்டமா இருக்கு.  அவர் என்மேல ரொம்ப பிரியமா இருக்கார். நீங்க  பருமனா இருக்கிறதால உறவு வெச்சுக்கிறப்போ கஷ்டமா இருக்குன்னு வெளிப்படையா சொன்னா மனசுக் கஷ்டப்படுவாரோன்னு சங்கடமா இருக்கு. என்ன செய்யுறது டாக்டர்?” – இது ஒரு வாசகியின் கேள்வி. [email protected] மெயில் மூலமாக தன்னுடைய கேள்வியை நமக்கு அனுப்பியிருந்தார். அவருடைய கேள்விக்கு, மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி பதிலளிக்கிறார்.  Dr. Narayana Reddy பால்வினை நோய் எய்ட்ஸ் ஆக மாறுமா?|காமத்துக்கு மரியாதை – S 3 E19 “உடல் பருமனான கணவருடன் உறவுகொள்ளும்போது, நிச்சயம் அது உங்களுக்கு உடலளவில் கடினமானதாகத்தான் இருக்கும். தவிர, ஒருவருடைய … Read more

திருமண ஆடை வடிவிலான பிரமாண்ட கேக்…கின்னஸ் சாதனை படைத்த சுவிட்சர்லாந்து பெண்

திருமண ஆடை வடிவிலான கேக் ஒன்றை வடிவமைத்து சுவிட்சர்லாந்தை சேர்ந்த நடாஷா என்ற பெண் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். திருமண ஆடை வடிவில் கேக் சுவிட்சர்லாந்தின் பெர்ன் பகுதியில் ஸ்வீட்டிகேக்ஸ் என்ற பேக்கிரியை நடாஷா கோய்ன்(Natasha Coline)  என்ற பெண் நடத்தி வருகிறார்,  புதுமையான பல வடிவங்களில் கேக்குகளை வடிவமைப்பதில் இவர் அந்த பகுதியில் கடந்த 2014ம் ஆண்டு முதல் சிறந்து விளங்கி வருகிறார். இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் உலக திருமண கண்காட்சியில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டியின் இறுதி … Read more

சென்னையில் போலீஸ் என கூறி ரூ.1.5 கோடி வழிப்பறி செய்த கொள்ளையனை அடையாளம் கண்டது போலீஸ்

சென்னை: சென்னை யானைக்கவுனியில் போலீஸ் என கூறி ரூ.1.5 கோடி வழிப்பறி செய்த கொள்ளையனை போலீசார் அடையாளம் கண்டனர். வழிப்பறியில் ஈடுபட்டது பிரபல கொள்ளையன் இம்ரான் என தெரிய வந்துள்ளதாக தனிப்படை போலீசார் கூறியுள்ளார். சிசிடிவி கட்சி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்த்தப்பட்டதில் கொள்ளையனை போலீசார் அடையாளம் கண்டனர்.