சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளி மாணவன் கடலில் சடலமாக மீட்பு

சென்னை: சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளி மாணவன் கடலில் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் சேத்துப்பட்டு தனியார் பள்ளியில் படிக்கும் மாணவன் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

`அப்ப தனிப்படை, இப்ப சிபிசிஐடி; எங்களையே பலிகடா ஆக்குறாங்க!' – குமுறும் வேங்கைவயல் பட்டியலின மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்திவரும் குடிநீர்த் தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடந்த டிசம்பர் 26-ம் தேதி நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பாக, தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தீவிர விசாரணை நடத்திவந்தனர். ஆனால், வழக்கில் முன்னேற்றம் இல்லாத நிலையில், சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதன் பின்பு, இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் பலரையும் நேரில் சந்தித்தும், அலுவலகம் வரவழைத்தும் தீவிர விசாரணை … Read more

7 நாட்களாக கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பெண்: 17 மணி நேரம் போராடி மீட்ட பிரித்தானியர்கள்

துருக்கியில் 7 நாட்களாக கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பெண்ணை பிரித்தானிய தன்னார்வலர்கள் 17 மணி நேரம் போராடி, பின் மீட்டுக்கொண்டுவரும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. 17 மணி நேரமாக பெண்ணின் சத்தத்தை வைத்து கண்டு பிடித்த பிரித்தானியர்கள் துருக்கியின் Hatay மாகாணத்திலுள்ள கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருந்த பெண் ஒருவரை, 17 மணி நேரமாக கேட்ட அவரது சத்தத்தை வைத்து மீட்டுள்ளார்கள் பிரித்தானிய தன்னார்வலர்கள் சிலர். ஒரு வாரமாக கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அந்தப் பெண் சிறிய துவாரம் … Read more

பிரபாகரன் உயிருடன் இல்லை! பழ.நெடுமாறனுக்கு இலங்கை ராணுவம் பதில்…

கொழும்பு: பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என இன்று திடீரென பழ.நெடுமாறன் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இலங்கை ராணுவம், அதை மறுத்துள்ளது. இலங்கையில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை ராணுவம் மற்றும் விடுதலைப்புலிகளுக்க இடையேயான  இறுதிப் போரில் முல்லிவாய்க்கால் பகுதியில் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது, இலங்கை ராணுவ தாக்குதலில் பிரபாகரன் வீரமரணம் அடைந்ததாக கூறப்பட்டது. அது தொடர்பான புகைப்படங்களும் உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆண்டுதோறும் அவரது இறப்பு தினம், அவரது ஆதரவாளர்களால் … Read more

அதானி விவகாரம்: நிபுணர் குழு விசாரிக்கலாம்

டெல்லி: அதானி விவகாரம் தொடர்பாக நிபுணர் குழு விசாரிக்க ஆட்சேபம் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நிபுணர் குழுவுக்கான வரையறையை சீலிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யவும் தயார் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

மேட்ரிமோனியில் வரன் தேடிய முதியவர்: ஆபாச வீடியோ எடுத்து ரூ.60 லட்சத்தை அபகரித்த பெண் – என்ன நடந்தது?

சோஷியல் மீடியா மூலம் நடைபெறும் மோசடிகள் வெகுவாக அதிகரித்து வருகிறது. இது தவிர எஸ்.எம்.எஸ். மூலம் லிங்க் அனுப்பியும் மோசடிகள் நடந்து வருகிறது. மும்பையில் திருமணத்துக்காக திருமண தகவல் இணையத்தளத்தில் பதிவு செய்து வைத்திருந்த முதியவர் ஒருவரிடம் பெண் ஒருவர் மோசடி செய்துவிட்டார். மும்பை புறநகரான அந்தேரியை சேர்ந்த முதியவர் ஒருவர் தன் மனைவி இறந்து போனதால் தனியாக வாழ்ந்து வந்தார். கடைசிக்காலத்தில் தன்னை கவனித்துக்கொள்ள ஒரு துணை தேவை என்று நினைத்த அந்த முதியவர் தன்னைப்பற்றிய … Read more

டபிள்யு பிஎல்: மகளிர் பிரீமியர் லீக் லோகோவை வெளியிட்டது பிசிசிஐ

டெல்லி: இந்தியாவில் மாநிலங்களின் சார்பில், ஐபிஎல் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது பெண்களுக்கான மகளிர் பிரிமியர் லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏலம் இன்று நடைபெற்ற நிலையில், மகளிர் பிரீமியர் லீக் லோகோவை  பிசிசிஐ வெளியிட்டுள்ளது. பெண்கள் கிரிக்கெட்டில்  புதிய புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில்,  பெண்களுக்கான பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.  ஐபிஎல்லைப் போல டபிள்யூபிஎல் மகளிர் பிரீமியர் லீக் போட்டியின் முதல் சீசன்  மார்ச் … Read more

மின்இணைப்புடன் ஆதாரை இணைப்பது பாதுகாப்புதான்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

சென்னை: மின்இணைப்புடன் ஆதாரை இணைப்பது நுகர்வோருக்கு பாதுகாப்புதான் என்று முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மின் இணைப்புடன் ஆதார் என்னை இணைப்பதற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.