நீதிமன்றத்திற்குள் புகுந்த சிறுத்தை : மூன்று பேரை தாக்கியது| Leopard entered the court: attacked three people

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காசியாபாத்: உத்திரபிரதேசத்தில் நீதிமன்றத்திற்குள் புகுந்த சிறுத்தை மூன்று பேரை தாக்கி காயப்படுத்தியது. உபி . மாநிலம் காசியாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கம் போல் அலுவலக பணிகள் நடந்து கொண்டிருந்தன. இன்று மாலை 4 மணியளவில் மெயின் வாசல் வழியாக கோர்ட் வளாகத்திற்குள் சிறுத்தை புகுந்தது. முதல் தளத்தில் தலைமை நீதிபதி அலுவலகஅறைக்குள் புகுந்ததை கண்ட அங்கிருந்த சில வழக்கறிஞர்கள், போலீசார் பொதுமக்கள், கோர்ட் வளாகத்தை விட்டு வெளியே வந்தனர். அப்போது … Read more

Border – Gavaskar Trophy: 2003, 2013, 2023 – கடந்த 20 ஆண்டுகளில் இந்தத் தொடர் சந்தித்த மாற்றங்கள்!

ஓவர்சீஸில் டெஸ்ட் போட்டிகளை வெல்ல கங்குலி கற்றுத்தந்தார் என்றால் தொடர்களையே கைப்பற்ற கோலிதான் காரணகர்த்தாவாகினார். பார்டர் – கவாஸ்கர் தொடர் தொடங்கியபின் இந்த 28 ஆண்டுகளில் இந்தியா – ஆஸ்திரேலியா இருவேறு அணிகளாகப் பல மாற்றங்களையும் ஏற்றங்களையும் சந்தித்திருக்கின்றன என்றால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிலுமேகூட பல மாற்றங்கள் நடந்தேறியுள்ளன. இதில் 2003, 2013, 2023-ல் என மூன்று தசாப்தங்களைச் சேர்ந்த ஆண்டுகளில் அரங்கேறியுள்ள மாற்றங்களின் தொகுப்புதான் இது. 2003/04 தொடர்: பந்தும் பேட்டும் சிநேகத்தோடு கரம்குலுக்கிக் கொண்டதா … Read more

‘விடுதலை’ படத்தில் இளையராஜா இசையில் வெளியான ‘ஓன்னோட நடந்தா’ பாடல் வைரலானது…

சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் விடுதலை. வெற்றிமாறன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் ‘ஓன்னோட நடந்தா’ இன்று வெளியானது. தனுஷ், அநன்யா பஃட் இருவரும் பாடியுள்ள இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடை நீக்கத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!!

டெல்லி : குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடை நீக்கத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. குட்கா தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் புகையிலை பொருட்களுக்கான தடையை ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

“பருவம் தவறி பெய்த மழை; விவசாயிகளுக்கு ரூ.30,000 இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்!" – சீமான்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறிப் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்காக, ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விவசாயிகளுக்கான பயிர் இழப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்கவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். சீமான் இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் சீமான், “காவிரிப்படுகை மாவட்டங்களில் பருவம் தவறிப் பெய்த கனமழையால் நீரில் மூழ்கி அழுகியிருக்கும் பல லட்சம் … Read more

லேப்டாப்பால் நடுவானில் விமானத்தில் தீவிபத்து: நால்வர் காயம்

அமெரிக்காவில் நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் பயணியின் மடிக்கணினியால் தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. செவ்வாயன்று அமெரிக்காவில் நெவார்க் செல்லும் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தின் கேபினில் லேப்டாப் திடீரென தீப்பிடித்தது. நடுவானில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 4 விமானப் பணிப்பெண்கள் காயமடைந்தனர். இதனால், விமானம் மீண்டும் சான் டியாகோ விமான நிலையத்திற்கு திரும்ப வேண்டியிருந்தது. புறப்பட்ட சிறிது நேரத்தில், யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் 2664-ல் பயணித்த பயணி ஒருவரின் மடிக்கணினியில் தீ விபத்து ஏற்பட்டது. Reuters … Read more

இந்தியாவின் குஜராத், காஷ்மீர் உள்பட 8 மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு…

டெல்லி: துருக்கியைத் தொடர்ந்து இந்தியாவில் 8 மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என நிலநடுக்கம் குறித்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் 60% பகுதி  நிலநடுக்கத்திற்கு ஆளாகும் அபாயம் இருப்பதாக ஏற்கனவே ஆய்வுகள் தெரிவித்து உள்ளன.  இதை நாடாளுமன்றத்தில் த்திய சுற்றுச்சூழல், மற்றும் புவி அறிவியலுக்கான மத்திய இணை அமைச்சரின் (சுயாதீனப் பொறுப்பு)  தெரிவித்திருந்தார். அதன்படி, இந்தியாவின் நிலப்பரப்பில் 60% (அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கியது) வெவ்வேறு அதிர்வு தீவிரங்களின் பூகம்பங்களுக்கு ஆளாகிறது என … Read more

லத்தேரி காவல் நிலையத்தில் ஆய்வாளர் உட்பட அனைத்து போலீசாரும் கூண்டோடு மாற்றம்

வேலூர்: லத்தேரி காவல் நிலையத்தில் ஆய்வாளர் உட்பட அனைத்து போலீசாரும் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் உட்பட 12போலீசாரை கூண்டோடு மாற்றி எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். லத்தேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றங்களை சரிவர கட்டுப்படுத்தவில்லை என நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

‘ஓசூரில் விமான நிலையம் அமைக்க முடியாது!’ – மத்திய இணை அமைச்சர் பதிலுக்கு திமுக எம்.பி கண்டனம்

கிருஷ்ணகிரியை அடுத்த ஒசூர் மாநகராட்சிப் பகுதியில், சிப்காட் மையங்கள் மற்றும் சில பகுதிகளில், ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள், கம்பெனிகள் இயங்கி வருகின்றன. இதனால், நாட்டின் `ஐடி ஹப்’ பெங்களூரு என்றால், தமிழகத்தின் `இண்டஸ்ட்ரியல் ஹப்’ ஒசூர் எனலாம். இந்த நிலையில், ஒசூரிலிருந்து, 75 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள, பெங்களூரு கெம்பேகெளவுடா பன்னாட்டு விமான நிலையத்துக்குச் சென்றுதான் மக்கள் விமான சேவை பெறுகின்றனர். ஓசூரிலிருந்து இந்த விமான நிலையம் செல்ல, 3 – 5 மணி நேரமாகிறது. பெங்களூரு கெம்பேகவுடா … Read more