ஈரோடு இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகளின் வேட்புமனுக்கள் உள்பட 80 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில்  அரசியல் கட்சிகளின் வேட்புமனுக்கள் உள்பட 80 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தேர்தலில் போட்டியில்லை என்று கூறிய அமமுக வேட்பாளரின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு உள்ளது ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி இடைத்தேர்தல் … Read more

ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பதிவு செய்து ரத்து செய்யப்பட்ட டிக்கெட்கள் மூலம் ரூ.2,000 கோடி வருவாய் : ஒன்றிய அரசு

டெல்லி :ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பதிவு செய்து ரத்து செய்யப்பட்ட டிக்கெட்கள் மூலம் ரூ.2,000 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. முன்பதிவு செய்து ரத்து செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு சேவை கட்டணம் திரும்ப தரப்படாததால் வருவாய் கிடைத்துள்ளதாகவும் ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது.

குழந்தையின் எதிர்காலத்தில் தந்தையின் பங்கு மிகப்பெரியது – சென்னை உயர்நீதிமன்றம்

விவாகரத்து வழக்கில் ஜீவனாம்சம் கோரி முறையாக விண்ணப்பிக்கவில்லை என்றாலும், குழந்தைகளின் பராமரிப்புக்கு தந்தை பணம் வழங்கக்கூறி உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நெல்லை குடும்பநல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விவாகரத்து வழக்கை சென்னைக்கு மாற்றக்கோரி, பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியன், வழக்கை சென்னைக்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும், மனுதாரர் தற்போது வேலையின்றி இருப்பதால், அவரின் பராமரிப்பில் உள்ள 15 வயது ஆண் மற்றும் 9 வயது … Read more

துருக்கி நிலநடுக்கம்! மிகவும் வருத்தப்பட்ட ரொனால்டோ- மேற்கொண்ட ஒரு உதவி

துருக்கி நிலநடுக்கத்தால் பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் கையொப்பமிடப்பட்ட ஜெர்சியை ஏலத்திற்கு வழங்கியுள்ளார். துருக்கி நிலநடுக்கம் துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட தொடர் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9000-ஐ நெருங்கியுள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் உலக நாடுகளில் இருந்து உதவிகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளது. பெரும் சோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கால்பந்து உலகமும் தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறது. Indiatimes ரொனால்டோ ஜெர்சி … Read more

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை! மாவட்ட ஆட்சியர் தகவல்…

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலுமான கிருண்ணஉன்னி தெரிவித்துள்ளார். ஈவேரா திருமகன் காலமானதைத்தொடர்ந்து காலியாக உள்ள  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் 27-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில் அங்கு 4 முனை போட்டி நிலவி வருகிறது. மேலும் திமுக, அதிமுக இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. இதன் காரணமாக, அங்கு அனல்பறக்கும் … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : காங்கிரஸ், அதிமுக,தேமுதிக, நாம் தமிழர் கட்சி வேட்பு மனுக்கள் ஏற்பு..

ஈரோடு : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த அமமுக வேட்பாளர் சிவ பிரசாந்த் மனுவும் ஏற்கபட்டது. ஓ பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் … Read more

துருக்கி – சிரியா நிலநடுக்கம்: தம்பியை பாதுகாத்த 7 வயது சிறுமி… மனதை உருக்கும் சம்பவங்கள்!

கடந்த திங்கள் கிழமை அதிகாலை 3.30 மணியளவில் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் ரிக்டர் அளவு 7.8 என்ற அளவில் பதிவாகியிருந்தது. அதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஆனாலும், அதே நாளில் தொடர்ந்து மூன்று முறை துருக்கி, சிரியா உள்ளிட்ட பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கத்தை அண்டை நாடுகள் வரை உணரமுடிந்தது. இந்த நிலநடுக்கத்தில் 8000-க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருப்பதாகவும், இன்னும் மீட்புப் பணி நிறைவடையவில்லை என்பதால் பலி எண்ணிக்கை இன்னும் … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: டிடிவி தினகரன்

சென்னை:  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை. அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளுக்கும் ஆதரவு இல்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளரை அறிவித்த அமமுக தலைவர் டிடிவி தினகரன், தங்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்காததால், தேர்தலில் இருந்து விலகுவதாக நேற்று திடீரென அறிவித்தார். இது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்,  இன்று திடீரென செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,  “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக … Read more

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட சிறுமி டானியாவிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு!!

ஆவடி : முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட சிறுமி டானியாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.ஆவடியில் உள்ள சிறுமி டானியாவின் இல்லத்திற்கு சென்று முதல்வர் நலம் விசாரித்தார்.ஸ்டீபன்ராஜ், சவுபாக்கியா தம்பதியின் மகன் டானியாவுக்கு சமீபத்தில் 2வது அறுவை சிகிச்சை முடிந்தது.