பொது சிவில் சட்டம் முடிவு எடுக்கவில்லை: கிரண் ரிஜிஜூ| No decision taken on bringing General Civil Code: Kiran Rijiju

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல் தெரிவித்துள்ளார். பல்வேறு விஷயங்களில் நாடு முழுவதும் வெவ்வேறு விதமான சட்டப்பிரிவுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை அனைத்தையும் மாற்றி விட்டு பொது சிவில் சட்டம் என்று ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். … Read more

“அரசின்மீது விமர்சனம் வைக்கப்படுகிறது; எச்சரிக்கையாக இருங்கள்’’ – முதல்வர் ஸ்டாலின்

‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின்கீழ் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் உயரதிகாரிகள் உடனான ஆய்வுக்கூட்டத்தை இன்று வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ‘‘கள ஆய்வை வேலூரில் தொடங்கியதை நான் மகிழ்ச்சியாகக் கருதுகிறேன். இந்தக் கூட்டத்தை பொறுத்தவரை ஏதோ குறைகளைக் கண்டுபிடிப்பதற்காக நடத்துகின்ற கூட்டம் அல்ல; இதனுடைய நோக்கமும் அதுவல்ல. மக்களுக்கான பணி சிறக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கருதிதான் இந்தக் … Read more

ஜேர்மனிக்கு வந்து இரண்டே மாதங்களுக்குள் பெண்களைக் குறிவைத்து கொலை செய்த நபர்: பொலிசார் வெளியிட்டுள்ள தகவல்

ஜேர்மனியில் வயதான பெண்களைக் குறிவைத்து கொலை செய்வதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பொலிசார் வெளியிட்டுள்ள விவரம் தென்மேற்கு ஜேர்மனியிலுள்ள Schwäbisch Hall என்ற இடத்தில் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டது தொடர்பாக செர்பியா நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அந்த 31 வயது நபர், 2022ஆம் ஆண்டு, அதாவது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்தான் தன் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் ஜேர்மனிக்கு குடிபெயர்ந்துள்ளார். அவர் அந்தப் பெண்கள் கொலை … Read more

ரகுமான் மற்றும் ஜிவி பிரகாஷ்குமார் வழக்குகள் தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: இசை படைப்புகளுக்கு சேவைவரி விதிப்பை எதிர்த்து ரகுமான், ஜிவி  பிரகாஷ்குமார் கொடுத்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. வரியை எதிர்த்து ஜிஎஸ்டி மேல்முறையீடு அதிகாரியிடம் மேல்முறையீடு செய்ய ரகுமானுக்கு ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. வரி விதிப்பது தொடர்பான நோட்டீசுக்கு சம்பத்தப்பட்ட அதிகாரியிடம் விளக்கமளிக்க ஜிவி பிரகாஷுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்: `அப்பா விமர்சனம், மகன் பாராட்டு' – ப.சிதம்பரம் vs கார்த்தி!

பட்ஜெட் தாக்கல்: 2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப் 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது அவர், “புதிய வரி விதிப்பின் கீழ் வருமான வரி தள்ளுபடி வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்படுகிறது. புதிய வரி விதிப்பு இனி இயல்புநிலை வரி விதிப்பாக இருக்கும். இந்த ஆண்டு, விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத்துறையில் புதுமைகளை ஊக்குவிப்பது முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. 2023-2024 பட்ஜெட் மூலதன முதலீட்டுச் … Read more

டிக்கெட் வாங்கணுமா., குழந்தையே வேண்டாம்.! விமான நிலையத்திலேயே அனாதையாக விட்டுச்சென்ற தம்பதி

தம்பதியினர் தங்களுக்கு மட்டும் டிக்கெட் வாங்கியதால், குழந்தையை விமான நிலையத்திலேயே அனாதையாக விட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வினோதமான இந்த சம்பவத்தில், தம்பதியினர் தங்கள் குழந்தையை இஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள விமான நிலைய செக்-இன் கவுண்டரில் கைவிட்டுவிட்டு, விமானத்தில் ஏறியுள்ளனர். இஸ்ரேலின் Ben Gurion சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகருக்கு Ryanair விமானத்தில் இந்த தம்பதி புறப்பட இருந்தது. கன்வேயர் பெல்ட் அருகே குழந்தை Picture: Reuters and Mako அவர்கள் … Read more

விருதுநகர் அருகே சதுரகிரி மலைக் கோயிலுக்கு பத்தர்கள் செல்ல தடை விதிப்பு

விருதுநகர்: ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதோஷம், பௌர்ணமியை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல அனுமதி தரப்பட்ட நிலையில் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் சதுரகிரி கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

அவசரத்துக்கு கைக் கொடுத்த பட்டாணி – நிறைவான ஒரு விருந்து | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்நடந்த… ஒரு நிகழ்வு… பொங்கலுக்கு மகனின் ஊருக்கு செல்ல இருந்ததால் பரபரப்பாக துணிமணிகளை பேக் செய்து கொண்டு இருந்தேன்., காய்கறி எதையும் வாங்கி வைக்கவில்லை.. ஊரிலிருந்து வந்த பிறகு வாங்கிக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.  மதியம் 2 மணி … Read more

அகதிகளை ஏமாற்றி பணம் பார்க்கிறார்கள்: சுவிஸ் மாகாணமொன்றின்மீது பரபரப்புக் குற்றச்சாட்டு

அகதிகளை வைத்து சுவிஸ் மாகாணமொன்று இலாபம் சம்பாதிப்பதாக அரசியல்வாதி ஒருவர் பரபரப்புக் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். அது எந்த மாகாணம்? மத்திய சுவிட்சர்லாந்திலுள்ள Lucerne மாகாண கவுன்சிலர், அந்த மாகாணம், அகதிகளை வைத்து இலாபம் பார்ப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். பெடரல் அரசு அகதிகளுக்காக கொடுக்கும் பணத்தைவிட குறைவான தொகையையே Lucerne மாகாணம் அகதிகளுக்காக செலவிடுவதாக அம்மாகாண கவுன்சிலரான Urban Frye குற்றம் சாட்டுகிறார். நேற்று ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த Urban Frye, அகதி ஒருவருக்கு பெடரல் அரசு … Read more