கோயில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளின் உரிமையை பறிக்க முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்
சென்னை: கோயில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளின் உரிமையை பறிக்க முடியாது என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. கோயில் சொத்துகள் பாதுகாப்பு தொடர்பாக வெங்கட்ராமன் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் நீதிபதிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். கோயில் நிலத்தை மூன்றாவது நபருக்கு மனுதாரர் கிரயம் செய்துள்ளார் என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.