குளச்சலில் 3வயது மகன் மில்ஷித்துடன் கடலில் இறங்கிய தாய் உயிரிழப்பு
குமரி: குளச்சலில் தனது 3வயது மகன் மில்ஷித்துடன் கடலில் இறங்கிய தாய் சசிகலா உயிரிழந்துள்ளனர். சசிகலா சடலம் மீட்கப்பட்ட நிலையில் குழந்தை மில்ஷித்தை காவல்துறையினர் தேடி வருகின்றனர்
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
குமரி: குளச்சலில் தனது 3வயது மகன் மில்ஷித்துடன் கடலில் இறங்கிய தாய் சசிகலா உயிரிழந்துள்ளனர். சசிகலா சடலம் மீட்கப்பட்ட நிலையில் குழந்தை மில்ஷித்தை காவல்துறையினர் தேடி வருகின்றனர்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இந்தியாவின் கிழக்கு எல்லையில் இருந்து மேற்கு எல்லை வரை 2ம் கட்ட யாத்திரை மேற்கொள்ள காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதன்படி, அருணாச்சலப் பிரதேசத்தின் பாசிகட் என்ற இடத்திலிருந்து குஜராத் மாநிலம் போர்பந்தர் வரை பாதையாத்திரை செல்ல உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. கடந்த 24ம் தேதி துவங்கிய இந்த மாநாடு இன்றுடன் முடிவடைய உள்ளது. இந்த மாநாட்டில் … Read more
H5N1 நோய் தொற்று பரவல் பல நாடுகளில் அதிகரித்து வரும் நிலையில், உலகின் முன்னணி நிபுணர்கள் ஒன்றுகூடி இந்த நோய் குறித்து கலந்துரையாடினர். உலக வங்கி, சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க அமைப்பிலிருந்து உக்ரைனுக்னுக்கு மேலும் 2.5 பில்லியன் டாலர் வழங்குவதாக அறிவித்திருக்கிறது. ரஷ்யா-உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சீனா கூறியதையடுத்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சீன அதிபரைச் சந்திக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறார். புகழ்பெற்ற அமெரிக்க நிதியாளர் தாமஸ் ஹெச் லீ, 78 வயதில் அவரது … Read more
வால்பாறை: வால்பாறை பாதுகாக்கப்பட்ட பகுதியான அக்காமலை புல்மலை வனப்பகுதியில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. மூணாறு வனத்தில் பிடித்த காட்டுத் தீ, கட்டுக்கடங்காமல் வால்பாறை அக்காமலை புல்மலை வரை பரவியுள்ளது. தீயணைப்பு வாகனங்கள் தீ பரவிய இடத்துக்கு செல்லமுடியாத நிலையில் ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
குஜராத் மாநிலம், காந்தி நகர் மாவட்டம் கலோஸ் பகுதியில் வசித்து வந்தவர் பிரிஜி குமார் யாதவ். இவருக்கு பூஜா என்ற மனைவியும், தன்மென் என்ற மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில், பிரிஜி குமார் யாதவ் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேற நினைத்திருக்கிறார். இதற்காக கடந்த ஆண்டு அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேற ஏற்பாடு செய்யும், தரகர் குழுவையும் அணுகியிருக்கிறார். அந்த தரகர் குழு வழங்கிய ஆலோசனைப்படி, கடந்த ஆண்டு நவம்பர் 11-ம் தேதி பிரிஜி குமார் யாதவ் தன்னுடைய … Read more
பிரித்தானியாவில் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் உள்ளூர் பத்திரிகை ஒன்று முன்னெடுத்த ஆய்வின் அடிப்படையில், வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான பகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இரண்டு மடங்கு குற்ற விகிதம் பிரித்தானியாவின் குற்றச்செயல்களின் தற்போதைய தலைநகரமாக கிளீவ்லேண்ட் விளங்குகிறது அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இங்கே, 1,000 மக்களுக்கு மிக அதிக எண்ணிக்கையிலான குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளது. அதாவது 1,000 மக்களுக்கு 139.6 குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளது. இதில் 35.8 மிகக் கொடூரமாக குற்றச்செயல்கள் என தெரியவந்துள்ளது. மேலும், … Read more
குஜராத்: குஜராத் ராஜ்கோட் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு ஆகியுள்ளது. காலை முதல் ஏற்பட்ட நில அதிர்வுகளில் அதிகபட்சமாக குஜராத்தில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. ராஜ்கோட் பகுதியில் இருந்து 270 கி.மீ தூரத்திலும், 10.கி.மீ ஆழத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85-வது மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாவது நாளான நேற்று, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் பேசினார். அப்போது அவர், “பா.ஜ.க உள்ளடக்கிய இந்தியாவுக்கு ஆதரவாக, நமது கருத்தியல் நிலைப்பாட்டில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். பல சமயங்களில் நீதியை புறந்தள்ளிவிடாமல் இருப்பது மிகவும் அவசியம். பில்கிஸ் பானோவின் வழக்கு, கிறிஸ்தவ தேவாலயங்கள்மீதான தாக்குதல்கள், பசு பாதுகாப்பு என்ற பெயரில் கொலை, முஸ்லிம் வீடுகளை புல்டோசர் வைத்து … Read more
ஹொங்ஹொங்கின் வடக்கு தை போ மாவட்டத்தில் உள்ள வாடகை வீட்டில் மொடல் அழகியின் உடல் துண்டாக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. பல துண்டுகளாக வெட்டப்பட்ட உடல் உறுப்புகளுடன், இறைச்சி வெட்டும் இயந்திரம், மின்சார ரம்பம் மற்றும் சில ஆடைகளும் மீட்கப்பட்டுள்ளன. ஹொங்ஹொங் மொடல் அழகி அப்பி சோய் (Abby Choi) ஒரு சர்வதேச மாடலாக இருந்தார் மற்றும் பாரிஸில் நடந்த எலி சாப் ஸ்பிரிங் சம்மர் 2023 ஹாட் கோச்சர் ஷோவில் பங்கேற்று, புகைப்படம் எடுக்கப்பட்டதில் மேலும் பிரபலமானார். … Read more
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.71.3 கோடி மதிப்புள்ள 2.6 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற ஊழியரை கைது செய்துள்ளனர். விமான நிலைய ஊழியர் ரமேஷை மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் பிடித்து சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர். ஊழியரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.