வெளி உணவுப்பொருட்களுக்கு தியேட்டர்களில் தடை விதிக்கலாம்| Outside food may be banned in theatres

புதுடில்லி: ‘தியேட்டர்களுக்கு படம் பார்க்க வருவோர், வெளியில் இருந்து உணவு பொருட்கள் மற்றும் பானங்களை கொண்டு வருவதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் தடை விதிக்கலாம். ‘அதேநேரத்தில், பார்வையாளர்களுக்கு சுத்தமான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டிய பொறுப்பு தியேட்டர் நிர்வாகத்துக்கு உள்ளது’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘மல்டிபிளக்ஸ் மற்றும் தியேட்டர்களுக்கு படம் பார்க்க வருவோர், வெளியில் இருந்து உணவு மற்றும் பானங்களை எடுத்து வந்தால், அதற்கு தியேட்டர் நிர்வாகம் தடை விதிக்கக் கூடாது’ என, ஜம்மு – காஷ்மீர் … Read more

திருமலை உண்டியல் வருவாய் ரூ.7.68 கோடி சாதனை வசூல்| Tirumala bill revenue is a record collection of Rs 7.68 crore

திருப்பதி : திருமலை ஏழுமலையானுக்கு, நேற்று முன்தினம் வரலாறு காணாத வகையில், 7.68 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலானது. திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்த பின், பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை, தேவஸ்தானம் சில்லரை ரூபாய் நோட்டுகள், மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் என பிரித்து, மொத்த தொகையை வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. சராசரியாக உண்டியல் காணிக்கை தினசரி 2 கோடி ரூபாய் முதல் 3 கோடி ரூபாய் வரை வசூலாவது வழக்கம். தற்போது பக்தர்கள் வருகை … Read more

2026 FIFA உலகக் கோப்பையில் மெஸ்ஸி வேண்டும்! அர்ஜென்டினா அணி வலியுறுத்தல்

அர்ஜென்டினாவில் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி அடுத்து வரும் 2026 FIFA உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று அவரது சக வீரர்கள் விரும்புகிறார்கள். 2026 FIFA உலகக் கோப்பையில் மெஸ்ஸி இறுதியாக FIFA உலகக் கோப்பை கோப்பையை வென்ற பிறகு, அர்ஜென்டினா தேசிய அணியில் லியோனல் மெஸ்ஸியின் எதிர்காலம் குறித்து ஊகங்கள் அதிகரித்து வருகின்றன. அர்ஜென்டினா ஜாம்பவான் முன்பு இந்த ஆண்டு கத்தாரில் நடைபெறும் போட்டி தனது கடைசி போட்டியாக அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இருப்பினும், அர்ஜென்டினா … Read more

ம.பி.,யில் 12 வயது சிறுமி 58 வயது நபரால் பலாத்காரம்| A 12-year-old girl was raped by a 58-year-old man in MP

போபால் மத்திய பிரதேசத்தில், 12 வயது சிறுமி, 58 வயது நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பேதுல் நகரைச் சேர்ந்த 12 வயது சிறுமியை, 58 வயதான மாவு மில் உரிமையாளர் ரமேஷ் குல்ஹனே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்களும், பொதுமக்களும் ரமேஷின் வீட்டிற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது கார், பைக்கை அடித்து … Read more

தினமும் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை:மாநகராட்சி தலைமை கமிஷனர் தகவல்

பெங்களூரு: பெங்களூருவில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- பெங்களூருவில் கடந்த 2 நாட்களாக தினமும் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தினமும் 5 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பெங்களூருவில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் தான் உள்ளது. ஆனாலும் நாங்கள் பரிசோதனைகளை அதிகரித்து உள்ளோம். அக்டோபர் … Read more

அமைச்சரின் பேச்சு அரசின் கருத்தாக முடியாது | The speech of the minister cannot be the opinion of the government

புதுடில்லி: அமைச்சர்கள் போன்ற பொது சேவையில் ஈடுபட்டுள்ளோரின் கருத்து சுதந்திரத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க தேவையில்லை என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ‘அமைச்சரின் பேச்சை, அரசின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது’ என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த ௨௦௧௬ ஜூலையில், புலந்த்ஷெஹர் நகரில் ஒரு பெண்ணும், அவருடைய மகளும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக அப்போது அமைச்சராக இருந்த சமாஜ்வாதி மூத்த … Read more

காங்கிரசின் முதல் வேட்பாளர் பட்டியல் இந்த மாதம் வெளியாகும்; சித்தராமையா பேட்டி

பெங்களூரு: கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா விஜயநகரில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- காங்கிரஸ் வேட்பாளர்கள் கர்நாடகத்தில் காங்கிரசுக்கு ஆதரவான அலை வீசுகிறது. மேலும் எங்கள் கட்சி பலமாக உள்ளது. அதனால் தான் அதிகம் பேர், டிக்கெட் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல் பட்டியல் இந்த மாதம் வெளியிடப்படும். ஜனார்த்தனரெட்டி புதிய கட்சியை தொடங்கியுள்ளார். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால் கட்சிகளை ஏற்பது குறித்து மக்கள் … Read more

பெரம்பலூர் அருகே சென்னையிலிருந்து கொடைக்கானல் சென்ற கார் இருசக்கர வாகனம், வேன் மீது மோதி விபத்து

பெரம்பலூர்: பெரம்பலூர் துறைமங்கலத்தில் சென்னையிலிருந்து கொடைக்கானல் சென்ற கார் முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதியதில் நிலை தடுமாறி கார் சென்டர் மிடியனை தாண்டி எதிர்திசையில் வந்த வேன் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மற்றும் காரில் வந்த ஒருவர் என இரண்டு பேர் இறந்தனர் வேன் சாலையில் கவிழ்ந்து பெண்களுக்கு காயம் ஏற்பட்டது.

குடும்ப தலைவர் ஒப்புதலுடன் ஆதாரில் முகவரி மாற்றலாம்| Address can be changed in Aadhaar with the approval of the family head

புதுடில்லி, :குடும்ப தலைவரின் ஒப்புதலுடன், சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் ஆதாரில் உள்ள முகவரியை, தாங்களாகவே மாற்றிக் கொள்ளும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும் மத்திய அரசின் தனித்துவ அடையாள எண் வழங்கும் ஆணையம், குடிமக்களுக்கான ஆதார் விபரங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குடிமக்கள், தங்கள் குடும்பத்தினரின் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை தாங்களாகவே மாற்றிக் கொள்வதற்கு அல்லது திருத்தம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட குடும்பத்தின் தலைவர் ஒப்புதல் … Read more

பணி நியமன முறைகேடுகள் குறித்து உயர்மட்ட விசாரணை; காங்கிரஸ் வலியுறுத்தல்

பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்ட தொழில் அதிபர் பிரதீப் பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர். சமூக வலைத்தள ஒப்பந்தம் தொடர்பாக அவரை அரவிந்த் லிம்பாவளி எம்.எல்.ஏ. ஏமாற்றியதாக சொல்லப்படுகிறது. இதில் இன்னும் அதிகளவில் பேரம் நடந்திருக்கும். இதுகுறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும். ஆனால் அரவிந்த் லிம்பாவளியிடம் போலீசார் இன்னும் விசாரணையை தொடங்கவே இல்லை. கர்நாடக மின்சார கழக பணி நியமன தேர்வு முறைகேடு தொடர்பான … Read more