ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி: கிரீன் வீரர் சிட்சிபாஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கிரீன் வீரர் சிட்சிபாஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அரைஇறுதியில் கச்சாநோவை 7 – 6, 4 – 6, 7-6, 6 – 3 என்ற செட் கணக்கில் சிட்சிபாஸ் வீழ்த்தினார்.

குஜராத் கலவரம்: பிபிசி ஆவணப்படத்துக்குத் தடை; தொடரும் திரையிடல்களும் எதிர்ப்புகளும் – நடப்பது என்ன?

2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் குறித்து மறு விசாரணை செய்து பிபிசி நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படம் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இரண்டு பாகங்கள் கொண்ட இந்த ஆவணப்படத்தின் முதல் பாகம் சென்ற வாரம் வெளியானது. இது வெற்றுப் பிரசாரத்தைப் பரப்புவதாகவும் இந்திய ஒருமைப்பாட்டை குலைப்பதாகவும் கூறி, சமூக வலைதளங்களில் அது தொடர்பான அனைத்து இணைப்புகளுக்கு மத்திய ஒளிப்பரப்பு அமைச்சகம் அவசர கால அதிகாரங்களைப் பயன்படுத்தி தடை விதித்தது. இந்தத் தடை எதிர்க்கட்சிகள் சார்பாக கடுமையாக விமர்சிக்கப்பட்டது. … Read more

மூன்றரையாண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த இளம்பெண்ணின் வீடு: தந்தை இறந்ததால் தெரியவந்த திடுக்கிடவைக்கும் உண்மை

இளம்பெண் ஒருவரின் தந்தை இறந்துவிட்டதை அவருக்குத் தெரிவிப்பதற்காக அவரது உறவினர்கள் அந்த இளம்பெண்ணின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி அவர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சர்ரேயிலுள்ள ஏழைகளுக்காக அரசு ஒதுக்கியுள்ள வீடு ஒன்றில் தனியாக வாழ்ந்துவந்துள்ளார் லாரா (Laura Winham, 38) என்ற இளம்பெண். கடுமையாக மன நலம் பாதிக்கப்பட்டு, தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாக கூறப்படும் லாராவுடைய தந்தை 2021ஆம் ஆண்டு மே மாதம் இறந்துபோனதால், லாராவின் உறவினர்கள் அவரது தந்தையின் மரணம் குறித்து அவருக்கு அறிவிக்க … Read more

பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டம்! தொடங்கி வைத்து ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டத்தை தொடங்கி வைத்த,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயனாளர்களுக்கு முதலீட்டு ஆணைகள் வழங்கினார். தமிழ்நாடு பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டத்தை  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்  தொடக்கி வைத்து, பயனாளர்களுக்கு முதலீட்டு ஆணைகள் வழங்கினார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் 2022-2023 ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள பழங்குடியினர்கள் உன்னிக்குச்சி மூலம் தளவாடப் பொருட்கள் தயாரித்தல்- ரூ.1,35,90,000/- நிதி ஒப்பளிப்பு  ஆணை வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று  … Read more

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 29, 30, 31 ஆகிய தேதிகளில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 29, 30, 31 ஆகிய தேதிகளில்  மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் ஓரிரு இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கும் என்றும் வானிலை மையம் தகவல். 

திறமையை குறைத்து மதிப்பிடக் கூடாது: மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை| Dont underestimate talent: Prime Ministers advice to students

புதுடில்லி: மாணவர்கள் ஒரு போதும் தங்களது திறமைகளை குறைத்து மதிப்பிடக்கூடாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கி உள்ளார். பொதுத் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகள் எழுதும் மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர், ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக உரையாடும் ‘பரிக்ஷா பே சர்ச்சா’ எனப்படும் பரீட்சை வீரர்கள் நிகழ்வு, 2018 முதல் ஆண்டுதோறும் நடக்கிறது. இதில், பொதுத் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகளை, மாணவர்கள் பதற்றம் இன்றி எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற உத்தியை, … Read more

7 மாதங்களில் 105 லிட்டர் தாய்ப்பால் தானம்; 27 வயது இளம்பெண் தரும் விழிப்புணர்வு!

கோவையைச் சேர்ந்த 27 வயது ஸ்ரீவித்யா, கடந்த ஏழு மாதங்களில் 105 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து, பாலூட்டும் இளம் தாய்மார்களுக்கு அது குறித்து விழிப்புணர்வு ஊட்டி வழிகாட்டியாக இருந்து வருகிறார். ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் அவர் பெயர் இடம் பிடித்துள்ளது. கோவை, வடவள்ளி அருகே பி.என். புதூரை சேர்ந்தவர் ஸ்ரீவித்யா. இவரின் கணவர் பைரவ். இத்தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். முதல் குழந்தை பிறந்தபோதே, தாய்ப்பால் தானம் செய்ய வேண்டும் என ஸ்ரீவித்யா விரும்பியுள்ளார். … Read more

பழம்பெரும் நடிகை ஜமுனா காலமானார்!

சென்னை: தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல மொழிகளில் நடித்துள்ள  பழம்பெரும் நடிகையான ஜமுனா வயது மூப்பு  காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 86. வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் காலமானார் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். தற்போது ஐதராபாத்தில் வசித்து வரும் அவர் இன்று காலை காலமானார் என்றும்,  அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக  தெலுங்க பிலிம் சேம்பரில் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜமுனா ஒரு நடிகை, இயக்குனர் … Read more

கோவையில் தலைக்கவசம் இன்றி வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.1000 அபராதம்: போக்குவரத்து காவல்துறை அதிரடி

கோவை: கோவையில் தலைக்கவசம் இன்றி வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவோருக்கு போக்குவரத்து விதிகள் குறித்து 3 மணி நேரம் விழிப்புணர்வு வகுப்பு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் 100 சதவீதம் தலைக்கவசம் அணிய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

2 மணி நேரம், 130 மாணவர்கள்; தொடர்ந்து சிலம்பம் சுற்றி, குத்துவரிசை நிகழ்த்தி உலக சாதனை!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், ஸ்ரீ அகத்தியர் வீர சிலம்பம் குழுவில், ஓசூர், கிருஷ்ணகிரி சுற்றுப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், சிலம்பம், குத்துவரிசை மற்றும் தற்காப்பு கலைகள் பயின்று வருகின்றனர். குடியரசு தினத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக சிலம்பம் மற்றும் குத்துவரிசை நிகழ்த்தும் முயற்சியில் மாணவர்கள் களமிறங்கினர். சிலம்பம் சுற்றிய மாணவர்கள். 5 வயது முதல் 14 வயது வரையிலான, 45 மாணவிகள், 85 மாணவர்கள் என, 130 பேர் தொடர்ச்சியாக, 2 மணி நேரம் சிலம்பம் சுற்றியும், … Read more