குஜராத் கலவரம்: பிபிசி ஆவணப்படத்துக்குத் தடை; தொடரும் திரையிடல்களும் எதிர்ப்புகளும் – நடப்பது என்ன?
2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் குறித்து மறு விசாரணை செய்து பிபிசி நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படம் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இரண்டு பாகங்கள் கொண்ட இந்த ஆவணப்படத்தின் முதல் பாகம் சென்ற வாரம் வெளியானது. இது வெற்றுப் பிரசாரத்தைப் பரப்புவதாகவும் இந்திய ஒருமைப்பாட்டை குலைப்பதாகவும் கூறி, சமூக வலைதளங்களில் அது தொடர்பான அனைத்து இணைப்புகளுக்கு மத்திய ஒளிப்பரப்பு அமைச்சகம் அவசர கால அதிகாரங்களைப் பயன்படுத்தி தடை விதித்தது. இந்தத் தடை எதிர்க்கட்சிகள் சார்பாக கடுமையாக விமர்சிக்கப்பட்டது. … Read more