2 போர் விமானங்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒரு விமானி பலி என தகவல்

மொரேனே: ம.பி.யின் மொரேனாவில் 2 போர் விமானங்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒரு விமானி பலி என விமானப்படை அறிவித்துள்ளது. சுகோய்-30, மிராஜ் 2000 வகை போர் விமானங்கள் மோதிக் கொண்டதில் 3 விமானிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பயிற்சியின்போது மிக அதிக வேகத்தில் 2 விமானங்களும் பறந்தபோது மோதியிருக்கலாம் என விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மாளிகை தோட்டத்தின் பெயர் மாற்றம்| Govt renames Delhi’s Mughal Gardens to ‘Amrit Udyan’

புதுடில்லி: புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகல் தோட்டத்தின் பெயரை, அம்ரித் உத்யன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை குறிக்கும் ‘அம்ரித் மஹோத்சவ்’ -ஐ முன்னிட்டு இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதியின் துணை பத்திரிகை செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் 75வது சுதந்திர தின ஆண்டை முன்னிட்டு, ஜனாதிபதி மாளிகை தோட்டத்திற்கு ‘அம்ரித் உத்யன்’ என்ற பெயரை ஜனாதிபதி சூட்டியுள்ளார் எனக்கூறப்பட்டுள்ளது. இந்த … Read more

“தயாராகுங்கள்; 2025-ல் சீனாவுடன் போர் ஏற்பட வாய்ப்பிருக்கிறது'' – அமெரிக்கா எச்சரிக்கை

தென் சீன கடல் பகுதியில் தனி தீவாக தைவான் இருக்கிறது. இதை தனது எல்லைக்குட்பட்ட பகுதியாக சீனா கூறிவருகிறது. இதனால், தைவானுடன் வேறு எந்த நாடும் அதிகாரபூர்வ உறவு வைத்துக் கொண்டால் அதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எனினும், தைவானை தனி நாடாக செயல்பட விடவேண்டும் என அமெரிக்கா கூறிவருகிறது. அமெரிக்கா-சீனா இடையேயான மோதல் தற்போது பொருளாதாரத்திலும் பூதாகரமாக உருவெடுத்திருக்கிறது. சீனாவின் பல நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. இந்த … Read more

லண்டனில் சராசரி வீட்டு வாடகை மாதம் ரூ.2.5 லட்சம்! மேலும் உயர வாய்ப்பு

லண்டனில் வீட்டு வாடகை வாடகைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதிகரிக்கும் மாத வடக்கை கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் பிரித்தானிய தலைநகர் லண்டனில் வாடகை சராசரியாக ஒரு மாதத்திற்கு குறைந்தது 2,50,000 ரூபாயாக (£2,480) உயர்ந்தது. இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 11 லட்சம் ஆகும். சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, லண்டனின் உள் வாடகை முதல் முறையாக 3,000 பவுண்டுகளைத் தாண்டியது. Getty Images கடந்த ஆண்டு, லண்டனுக்கு வெளியே புதிதாக பட்டியலிடப்பட்ட சொத்துகளுக்கான சராசரி … Read more

கர்நாடக அரசை விமர்சித்த மடாதிபதி: மைக்கை பிடுங்கிய முதலமைச்சர் பொம்மை…

பெங்களூரு:  நிகழ்ச்சி ஒன்றில்,  முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மடாதிபதி ஆளும் பாஜக அரசை குறை கூறி பேசினார். இதனால் அதிர்ச்சி அடைந்த முதலமைச்சர் பொம்மை, அவரிடம் இருந்து மைக்கை பிடுங்கினார். இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், முதலமைச்சரின் நடவடிக்கை கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூருவில் உள்ள மகாதேவபுராவில்  மடாதிபதி ஈஸ்வரானந்தபுர சுவாமியின் ஷங்கராந்தி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினமாக மாநில முதலமைச்சர்  பசவராஜ் பொம்மை கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின்போது, விழா மேடையில் … Read more

தமிழ்நாடு அரசின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஐகோர்ட் மதுரை கிளை பாராட்டு

சென்னை: தமிழ்நாட்டில் போதைப்பொருளை ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது என ஐகோர்ட் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. போதைப்பொருள் தடுப்பு கூடுதல் சிறப்பு நீதிமன்றங்களை அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தலாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 3 மாதங்களில் 10,673 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 149.43 டன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் கல்லூரி மாணவியர் உழவன் செயலி குறித்து விளக்கம்| Agricultural college students explain about Ulhavan app

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முகமது அஸ்லாம், அதியமான் வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், நான்காம் ஆண்டு இளங்கலை படித்து வரும் மாணவியருக்கு, ‘உழவன் செயலி’ குறித்து எடுத்துரைத்தார். மேலும் இந்த செயலியின் பயன்பாடுகளை கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள விவசாயிகளுக்கு எடுத்துரைக்குமாறும் கேட்டுக்கொண்டார். அதன்படி, ஆலப்பட்டி கிராமத்திற்கு வேளாண் அலுவலர் பிரியாவுடன் மாணவியர் அம்பிகா, நிருபாஷினி; கட்டிகானப்பள்ளி கிராமத்திற்கு, வேளாண் அலுவலர் ஜோதியுடன், மாணவியர் காவியா, நர்மதா; மோரமடுகு கிராமத்திற்கு … Read more

அதிமுக: கே.வி.ராமலிங்கம், தென்னரசு… எடப்பாடி தரப்பு வேட்பாளர் ரேஸில் முந்துவது யார்?!

2011-ம் ஆண்டுக்கு முன்பு வரை பிரிக்கப்படாத ஈரோடு தொகுதியாக இருந்த நிலையில், 2011-ம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்புக்கு பின் ஈரோடு கிழக்கு, மேற்கு என இரண்டு தொகுதியாக பிரிக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க, தே.மு.தி.க கூட்டணி அமைத்து போட்டியிட, இந்தத் தொகுதி தே.மு.தி.க-வுக்கு ஒதுக்கப்பட்டது. வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் களமிறங்கினார். தொகுதி பிரிக்கப்பட்ட பின் நடைபெற்ற அந்த முதல் தேர்தலில் சந்திரகுமார், தற்போதைய அமைச்சரான தி.மு.க வேட்பாளர் சு.முத்துசாமியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். தென்னரசு … Read more

நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் வரலாறு காணாத வெள்ளம்… அவசர நிலை பிரகடனம்…

நியூஸிலாந்து நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஆக்லாந்து நகரில் நேற்று பெய்த கனமழையால் அந்நகரமே நீரில் மூழ்கியது. கோடை காலம் முழுவதும் பெய்யும் மழையில் 75 சதவீதம் மழை 15 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகள் வெள்ளக்காடானது, தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கின, தண்ணீர் புகுந்ததால் விமான நிலையம் மூடப்பட்டது. எல்டன் ஜான் இசைநிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில் 40,000 க்கும் மேற்பட்டோர் அந்த இசைநிகழ்ச்சியை காண குவிந்தனர். இசை நிகழ்ச்சி துவங்குவதற்கு சில … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒப்படைக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் மின்னணு இயந்திரங்கள் ஒப்படைக்கப்பட்டது. 238 வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்த 1,408 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.