அதிகாலையில் கதவை தட்டிய மர்ம நபர்கள்; திறந்த ஊராட்சித் தலைவருக்கு நேர்ந்த சோகம்! – என்ன நடந்தது?

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகேயுள்ள கொண்டக்கரை ஊராட்சி மன்றத் தலைவராக அ.தி.மு.க-வைச் சேர்ந்த மனோகரன் பொறுப்பு வகித்து வந்தார். இவர் கடந்த மே மாதம் தன்னுடைய குடும்பத்துடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது, காரை ஒரு லாரி மோதியது. அப்போது லாரியிலிருந்து இறங்கிய 10 பேர் கொண்ட கும்பல் மனோகரனை அவரின் மனைவி, மகள்களின் கண்முன்னே சரமாரியாக வெட்டிப் படுகொலைசெய்தது. படுகொலை செய்யப்பட்ட மனோகரன் இந்த கொலை சம்பவத்தில் குண்டர் வழக்கு பதிவுசெய்யப்பட்டு கைதுசெய்யப்பட்ட ஏழு பேர் சிறையில் இருக்கின்றனர். … Read more

அமெரிக்காவில் நீதிபதிகளாக பதவியேற்ற 3 இந்திய வம்சாவளியினர்!

அமெரிக்காவில் உள்ள ஃபோர்ட் பெண்ட் மாவட்ட நீதிபதிகளாக மூன்று இந்திய அமெரிக்க ஜனநாயகக் கட்சியினர் பதவியேற்றுள்ளனர். புத்தாண்டு தினத்தன்று (ஜனவரி 1) நடைபெற்ற விழாவில், ஜூலி ஏ. மேத்யூ, கே.பி. ஜார்ஜ் மற்றும் சுரேந்திரன் கே. பட்டேல் ஆகியோர் ஃபோர்ட் பென்ட் மாவட்ட நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுடன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளும் பதவியேற்றனர். ஜூலி ஏ. மேத்யூ நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் நீதிபதி பெஞ்சில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய-அமெரிக்கப் பெண்மணியான … Read more

“போலியான லெட்டர் பேட் வைத்துக்கொண்டு, ஓ.பி.எஸ். போலி அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறார்: ஜெயக்குமார்

சென்னை: “போலியான லெட்டர் பேட் வைத்துக்கொண்டு, ஓ.பி.எஸ். போலி அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே அதிமுகவில் இல்லை, இல்லாத ஒரு பதவிக்கு தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்” எனவும் கூறியுள்ளார்.

டீ குடிக்க சென்ற இடத்தில் தகராறு; கல்லூரி மாணவரை குத்தி கொன்ற 6 சிறுவர்கள்

இந்தூர், மத்திய பிரதேசத்தில் சிவபுரி பகுதியை சேர்ந்தவர் ஆயுஷ் குப்தா (வயது 21). பொறியியல் கல்லூரி மாணவரான அவர் தனது நண்பர்களுடன் டீ குடிக்க கடைக்கு சென்றுள்ளார். அவர் சென்ற வழியில் சிலர் வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி இருந்துள்ளனர். இதனால், அந்த வாகன உரிமையாளர்களான மைனர் சிறுவர்களிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இதில், வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, மாணவரை அவர்கள் தாக்க தொடங்கியுள்ளனர். இதனால், அவர் தனது நண்பர்களுடன் … Read more

புத்தாண்டு ட்ரீட் கொடுப்பதாக அழைத்த இளைஞர்; நம்பிச் சென்ற இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

திருவள்ளூரை அடுத்த சீயஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவருக்கும் திருவள்ளூர் காக்களுர் சாலையில் வசிக்கும் இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிப் பழகிவந்தனர். இந்த நிலையில், புத்தாண்டையொட்டி இளம்பெண்ணுக்கு ட்ரீட் கொடுப்பதாகக் கூறி விஜய், ஆட்டோவில் சீயஞ்சேரியில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு ஏற்கெனவே விஜய்யின் நண்பர்கள் சாம்ராஜ், சதீஷ் ஆகியோர் இருந்தனர். “பெண் காவலருக்கு திமுக இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு…” – எடப்பாடி, அண்ணாமலை … Read more

உக்ரைனின் தாக்குதலில் 63 ரஷ்ய துருப்புகள் பலி!

உக்ரைன் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 63 ரஷ்ய துருப்புகள் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் ஏவுகணை தாக்குதல் மெகிவ்கா நகரில் ரஷ்ய வீரர்களின் தற்காலிக ராணுவ தளத்தில் உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஹிமரஸ் ஏவுகணை அமைப்பில் இருந்து உக்ரைன் படைகள் ஆறு ராக்கெட்டுகளை வீசியதாகவும், அவற்றில் இரண்டு சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது. ஆனால், கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் ரஷ்ய துருப்புகள் நிலைகொண்டிருந்த பகுதியின் மீது உக்ரேனியப் படைகள் ராக்கெட்டுகளை வீசியதில் 63 பேர் கொல்லப்பட்டதாகவும் … Read more

பொங்கல் பரிசாக தரப்படும் ரூ.1000-ஐ ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த முடியுமா?: ஐகோர்ட் கேள்வி

மதுரை: பொங்கல் பரிசாக தரப்படும் ரூ.1000-ஐ ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த முடியுமா? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகள்:நிறுவனங்களுக்கு மத்திய அரசு விதிமுறைகள் வெளியீடு| Online Games: Release of Central Government Rules for Companies

புதுடில்லி: ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்களுக்கு வரைவு விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. பார்லிமென்டில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் மத்திய அரசு இந்நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு இந்திய முகவரிகள், விளையாடுவோரின் முகவரிகள் சரிபார்ப்பு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களாக உள்ள நிறுவனங்கள் நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். ஆன்லைன் விளையாட்டு குறித்து உருவாகும் புகார்கள், குறைதீர்க்கும் முறையில் சரி செய்ய வேண்டும். … Read more

“கோபாலபுரம் பாய்ஸைவிட மாட்டேன்; இதுவரை நடந்த ஊழல்களுக்கு அக்கவுன்ட் கேட்பேன்!" – அண்ணாமலை

தருமபுரியில் இன்று மாலை மாவட்ட பா.ஜ.க சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் ராமலிங்கம், மற்றும் மாநில, மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, ‘‘சென்னையில் ஒரு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், எம்.பி கனிமொழி பங்கேற்றார். கூட்டத்திலிருந்து ஒரு பெண் காவலருக்கு, இரண்டு தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொல்லை கொடுத்திருக்கின்றனர். பெண் காவலர்கள்மீது கைவைத்த அயோக்கியர்கள் மீது, இதுவரை ஒரு வழக்குகூட பதிவுசெய்யவில்லை. … Read more

6 நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு 100% கொரோனா பரிசோதனை சான்றிதழ் இருக்க வேண்டும்: ஒன்றிய சுகாதாரத்துறை அறிவிப்பு

டெல்லி: சீனா, சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்கங் கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு 100% கொரோனா பரிசோதனை சான்றிதழ் இருக்க வேண்டும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. உருமாறிய கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் ஒன்றிய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. பயணிகள் 72 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு நெகடிவ் என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். 6 நாடுகளில் இருந்து வேறு எந்த நாடுகளுக்கு சென்று விட்டு இந்தியா வந்தாலும் கொரோனா … Read more