“ஒய்வெடுக்க யாரும் நேரம் கொடுப்பதில்லை” ரிஷப் பண்ட் குடும்பத்தினர் குற்றச்சாட்டு

கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்டிற்கு யாரும் ஓய்வெடுக்க நேரம் கொடுப்பதில்லை என்று அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் 30, 2022 அன்று இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், டெல்லியில் இருந்து ரூர்க்கி நோக்கி செல்லும் போது பயங்கர கார் விபத்தில் சிக்கினார். அவர் ஓட்டி சென்ற Mercedes-AMG கார் டிவைடரில் மோதி அதிவேகமாக சாலையில் சறுக்கிச் சென்று … Read more

பிபிஎல் கிரிக்கெட் தொடர் : பிரிஸ்பேன் ஹீட் அணி வெற்றிபெற உதவிய மைக்கேல் நெசரின் சர்ச்சைக்குரிய கேட்ச்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2022-23 பிக் பாஷ் லீக் (பி.பி.எல்) தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பிரிஸ்பேன் ஹீட் – சிட்னி சிக்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பிரிஸ்பேன் நகரில் நேற்றிரவு நடைபெற்றது. வெற்றிபெற 225 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணியின் ஜோர்டான் சில்க் 18.2 வது ஓவரில் அவுட்டானார். பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் என்று அதிரடியாக விளையாடிய ஜோர்டான் சில்க் அவுட்டானது ஆட்டத்தின் போக்கை மாற்றியதோடு மட்டுமல்லாமல் அவர் அவுட்டான … Read more

கடலூர் அருகே சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 10-ம் வகுப்பு மாணவி உட்பட 3 பேர் உயிரிழப்பு

கடலூர்: விருத்தாசலம் அருகே சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 10-ம் வகுப்பு மாணவி உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

New Year 2023: 5 லட்சம் ஆர்டர்களைப் பெற்ற Swiggy, Zomato; முதல் இடம் பிடித்த பிரியாணி!

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நேற்று முன்தினமான  டிசம்பர் 31-ம் தேதி இரவு மட்டும் ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர்  செய்துள்ளனர் என்று Zomato மற்றும் Swiggy உணவு டெலிவரி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அந்நிறுவனங்கள் அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளன. அதில், 5 லட்சத்திற்கும் அதிகமானோர் உணவுகளை ஆர்டர் செய்திருந்த நிலையில் பிரியாணி மற்றும் பீட்சா ஆகியவை பட்டியலில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளன. 3.5 லட்சம் பேர் பிரியாணியும், 2.5 லட்சம் பேர் பீட்சாவும் ஆர்டர் செய்துள்ளனர். … Read more

ரஷ்யா சாத்தானை பின் தொடர்கிறது! புடின் இதற்காகவே போரை நடத்துகிறார்.. ஜெலன்ஸ்கி காட்டம்

ரஷ்யா சாத்தானை பின் தொடர்கிறது என கூறியுள்ள ஜெலன்ஸ்கி புடினுக்கு ரஷ்யாவின் குடிமக்களை பற்றி கவலையில்லை என தெரிவித்துள்ளார். ஜெலன்ஸ்கி புத்தாண்டு உரை உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் ஒரு ஆண்டை நெருங்கவுள்ளது. இந்த நிலையில் உக்ரைன் மக்களுக்கான புத்தாண்டு உரையில் பேசிய அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா சாத்தானை பின் தொடர்கிறது. ஒரு நபர் (புடின்) தனது வாழ்நாளின் இறுதி வரை அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த போர் நடத்தப்படுகிறது. AP மக்களுக்கு … Read more

வாகன நெரிசலை குறைக்க சென்னையின் 300 சாலைகளில் போக்குவரத்தை கண்காணிக்கும் கருவி

சென்னை:  மாநிலத்தின் தலைநகரான சென்னையில் பெருகி வரும் வாகனப்போக்குவரத்து,. அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்து தகவல் தெரிந்துகொள்ளும் வகையில்,  ‘ரோடு ஈசி’ என்ற இந்த செயலி ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.  தற்போது, அது மேலும் மேம்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இதற்காக, 300 இடங்களில் சாலைகளின் போக்குவரத்தை கண்காணிக்கும் வகையில் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு வகையான  நவீன யுக்தியை சென்னை போக்குவரத்து போலீசார் செயல்படுத்தி வருகின்றனர்.  அதன்படி … Read more

நாகையில் உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்ஹா கந்தூரி விழாவின் சந்தனக்கூடு ஊர்வலம் தொடங்கியது

நாகை: உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்ஹா கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நாகையில் இருந்து தொடங்கியது. ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், எம்.எல்.ஏ ஷாநவாஸ், நாகை எஸ்.பி ஜவஹர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

IPL 2023-ல் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு; பிசிசிஐயின் புதிய திட்டம் கைகொடுக்குமா?

பிசிசிஐ தங்களின் செயல்பாடுகளை ஆராய்ந்தறியும் கூட்டத்தைச் சமீபத்தில் நடத்தி முடித்திருக்கிறது. இதில், மிக முக்கியமாக ஐ.பி.எல் போட்டிகள் குறித்தும் ஒரு முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, ஐ.பி.எல் போட்டிகளில் ஆடும் முக்கிய வீரர்களின் உடற்திறன் தேசிய கிரிக்கெட் அகாடமியால் பரிசோதிக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான ஓய்வை வழங்க வேண்டும் என்றும் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. Team India இந்திய அணி சமீபமாக முக்கியமான ஐ.சி.சி தொடர்களிலும் பன்னாட்டுத் தொடர்களிலும் கடுமையக்ச் சொதப்பி வருகிறது. இந்திய அணியின் சொதப்பல்களுக்குப் பல்வேறு காரணங்கள் … Read more

3 மாத பெண் குழந்தையை 3-வது மாடியிலிருந்து தூக்கி எறிந்த தாய்

3 மாத பெண் குழந்தையை தாயே மருத்துவமனையின் 3-வது மாடியில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இருந்து தனது மூன்று மாத மகளை தூக்கி எறிந்து கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் 23 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். குழந்தையை வீசியதன் விளைவாக குழந்தை இறந்தது என்று காவல்துறை அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அசர்வா பகுதியில் உள்ள மருத்துவமனையில் இந்த … Read more