களக்காடு அருகே நிகழ்ந்த கொலை வழக்கில் ஒருவர் கைது
நெல்லை: களக்காடு அருகே சிதம்பராபுரத்தில் பழனி என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பழனியை வெட்டி படுகொலை செய்த செல்வராஜ் என்பவரை களக்காடு போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
நெல்லை: களக்காடு அருகே சிதம்பராபுரத்தில் பழனி என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பழனியை வெட்டி படுகொலை செய்த செல்வராஜ் என்பவரை களக்காடு போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஆமதாபாத் : குஜராத் அருகே அரபிக் கடலில் மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்த 12 பேரை இந்திய கடலோரக் காவல் படையினர் பத்திரமாக மீட்டனர். நம் நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு கப்பல்அரபிக் கடல் வழியாக ஆப்ரிக்க நாடான ஜிபோட்டிக்கு நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றது. குஜராத் அருகே நடுக்கடலில் சென்றபோது கடல் கொந்தளிப்பு காரணமாக கப்பல் தண்ணீரில் மூழ்கத் துவங்கியது. உடனடியாக இது குறித்து மும்பையில் உள்ள இந்திய கடலோர காவல்படை மீட்பு … Read more
ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அனுமன்பள்ளி அருகே சின்ன தொட்டிபாளையத்தை அடுத்த கள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ண கவுண்டர் (85). இவருக்கு பழனியம்மாள் (66) என்ற மனைவியும், ராஜாகந்தசாமி (43) என்ற மகனும் உள்ளனர். கணவன்- மனைவி இருவரும் கள்ளியங்காட்டு தோட்டத்தில் குடியிருந்து, அவர்களின் சொந்த தோட்டத்தில் விவசாயம் செய்து வந்தனர். இதனிடையே பழனியம்மாளி்ன் சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் கடும் அவதி அடைந்து வந்துள்ளார். அதேபோல கருப்பண்ண கவுண்டருக்கு காது சரியாக கேட்காமலும், கண்பார்வை குறைபாடும் இருந்து வந்தது. இதனால் கணவன் … Read more
உக்ரைனை ஆதரிப்பதற்காக ஆயுத உற்பத்தியை மேம்படுத்த நட்பு நாடுகளை நேட்டோ தலைவர் வலியுறுத்துகிறார். கீவ், கெர்சன் தாக்குதல் புத்தாண்டு வார இறுதியில் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு நகரமான கெர்சனில் அதிகளவில் ஏவுகணை தாக்குதல்கள் காணப்பட்டன. தீவிர ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களினால் சில பகுதிகளில் கொண்டாட்டங்கள் என்பது சாத்தியம் இல்லாமல் போனது. நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் இந்த நிலையில் புடின் உக்ரைனுக்கு எதிரான போரில் பெரிய அளவிலான வெடிமருந்துகளை நீண்ட காலம் பயன்படுத்துவதை எதிர்பார்ப்பதாக … Read more
புதுடெல்லி: பண மதிப்பிழக்குக்கு எதிரான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் -8ஆம் தேதி பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். இதனால், புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டு, இதற்கு மாற்றாக 500, 2000 ரூபாய் நோட்டுகள் பழக்கத்திற்கு வந்தன, இந்த பண மதிப்பிழக்குக்கு எதிரான விவேக் நாராயண் சர்மா உள்ளிட்ட 57 பேர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் … Read more
சென்னை: சென்னை அடுத்த திருநீர்மலை ரங்கநாதர் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
புதுடில்லி : புதுடில்லியில் நேற்று கார் விபத்தில் சிக்கிய, 20 வயது பெண், 4 கி.மீ., துாரம் இழுத்துச் செல்லப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார். புதுடில்லியில் உள்ள அமன்விஹார் பகுதியைச் சேர்ந்த அஞ்சலி, 20, நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பங்கேற்றார். பின் அதிகாலை 3:00 மணியளவில், தன் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். சுல்தான்புரி பகுதியில் வந்தபோது, அவ்வழியாக வந்த கார் அஞ்சலி மீது மோதியது. காரின் அடிப்பாகத்தில் சிக்கிய இவர், இரு … Read more
கோவிட் தொற்று காரணமாக சீனாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் தங்கள் நாட்டில் நுழைய மொராக்கோ அரசு தடை விதித்துள்ளது. சீனாவில் மீண்டும் கோவிட் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அந்நாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய கோவிட் பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளன. மொராக்கோ தடை உத்தரவு இந்த நிலையில் வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோ தங்கள் நாட்டில் சீன பயணிகள் நுழைய அதிரடி தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக மொராக்கோவின் வெளியுறவு … Read more
சென்னை: சென்னையில் 226-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 226-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.