“திமுக அரசு இதுவரை ஒவ்வொரு மகளிருக்கும், ரூ.22,000 கொடுத்திருக்கணும்" – செல்லூர் ராஜூ

புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசும்போது, “உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க மீனாட்சியம்மனை வேண்டியுள்ளேன், அதிமுகவுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கும். செல்லூர் ராஜூ அதிமுக ஆட்சி விரைவில் வரவேண்டும் என பொதுமக்கள் எதிர்நோக்குகின்றனர். 2022-ல் திமுக ஆட்சியில் இருந்தாலும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அழிக்கமுடியாத கல்வெட்டாக உள்ளது. அதிமுகவுக்கு இந்த ஆண்டு மகிழ்ச்சியானதாக சந்தோஷமாக இருக்கும். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு விரைவில் … Read more

21 வருடங்களுக்கு முன்பு கழிவறையில் விழுந்த மோதிரம்: மனைவிக்கு பரிசளித்து ஆச்சரியப்படுத்திய கணவன்

21 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போன நிச்சயதார்த்த மோதிரத்தை மீண்டும் மனைவிக்கு பரிசாக அழைத்து கணவர் அசத்தியுள்ளார். தொலைந்து போன மோதிரம் அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த நிக் டே என்ற நபருக்கு 21 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது, திருமணத்திற்கு முன்னதாக தனது காதல் மனைவி ஷைனாவுக்கு ஆசையாக வைர மோதிரம் ஒன்றை நிக் டே பரிசாக வழங்கியுள்ளார். இதையடுத்து திருமணம் நடைபெற்று இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு காதலி ஷைனா தனது கையில் இருந்த மோதிரத்தை டாய்லெட்டில் தவறவிட்டு … Read more

சாலையில் இருந்த குழிதான் ரிஷப் பண்ட் விபத்துக்கு காரணம் – டெல்லி கிரிகெட் அசோசியேஷன் தகவல்

உத்தரகாண்ட்: சாலையில் இருந்த குழிதான் ரிஷப் பண்ட் விபத்துக்கு காரணம் என்று டெல்லி கிரிகெட் அசோசியேஷன் இயக்குனர் ஷியாம் சர்மா தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்து ரூர்கி வழியாக தனது சொந்த ஊரான டேராடூனுக்கு சொகுசு காரை ஒட்டிச் சென்றார் ரிஷப் பண்ட். அதிகாலை 5:30 மணியளவில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது எதிரே ஹ்ரிதுவாரில் இருந்து ஹரியானா மாநிலம் பானிபட் சென்று கொண்டிருந்த ஹரியானா அரசு … Read more

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற கட்டுப்பாடுகள்: பிசிசிஐ முடிவு| BCCI review: Yo-Yo test returns, Dexa also added to selection criteria for Indian team

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை: இந்திய அணியில் இடம்பெறுவதற்கு யோ யோ சோதனை, டெக்சா( எலும்பு ஸ்கேன் சோதனை) ஆகியவற்றில் தேர்வு பெற வேண்டும் எனவும், உள்ளூர் போட்டிகளில் இடம்பெற வேண்டும் எனவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளது. டுவென்டி- 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதியுடன் நாடு திரும்பிய நிலையில், இந்தாண்டு இந்தியாவில் நடக்கும் ஒரு நாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு அணியை தயார் செய்வது குறித்து பிசிசிஐ … Read more

“தொகுப்பூதிய செவிலியர்கள் பணிநீக்கம்; திமுக அரசின் தொழிலாளர் விரோத போக்கு" – சீமான் காட்டம்

“தன்னலமற்று சேவையாற்றிய செவிலியர்களின் உழைப்பினை உறிஞ்சி விட்டு, தற்போது வேலை இல்லை என்று கூறி ஒரே நாளில் வீட்டிற்கு அனுப்புவது கொடுங்கோன்மை” என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் மேலும், “கொரோனா பெருந்தொற்று தடுப்புப் பணிகளுக்காக தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை, தமிழ்நாடு அரசு பணிநீக்கம் செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. பேரிடர் காலத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது தன்னலமற்று சேவையாற்றிய செவிலியர்களின் உழைப்பினை உறிஞ்சி விட்டு, தற்போது வேலை இல்லை … Read more

பேக்கர் மற்றும் ஹவ்லேண்ட் தீவுகளில் புத்தாண்டு பிறந்தது

அமெரிக்கா: கடைசி இடமாக பேக்கர் மற்றும் ஹவ்லேண்ட் தீவுகளில் 2022 முடிவடைந்து 2023 புத்தான்டு பிறந்தது. அமெரிக்காவுக்கு அருகே உள்ள பேக்கர், ஹவ்லேண்ட் தீவுகளில் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.

ஹரியானா: விளையாட்டுத்துறை அமைச்சர் மீது பாலியல் புகார் அளித்த பெண் பயிற்சியாளர்!

ஹரியானா மாநிலம், குருக்ஷேத்ராவில் உள்ள பெஹோவாவில் பா.ஜ.க எம்.எல்.ஏ-வாக இருப்பவர் அமைச்சர் சந்தீப் சிங். இவர் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கிறார். இந்த நிலையில், அவர்மீது தடகள பயிற்சியாளரான பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக இந்திய தேசிய லோக் தளத்தின் (INLD) அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தினர். அப்போது, “அமைச்சர் சந்தீப் சிங் என்னை உடற்பயிற்சி கூடத்தில் சந்தித்தார். அதன்பிறகு என்னுடன் இன்ஸ்டாகிராமில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, என்னை சந்திக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினார். … Read more

புத்தாண்டு கொண்டாட்டத்தில் டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த கத்திக்குத்து: பொலிஸார் விசாரணை

அமெரிக்காவில் புத்தாண்டு தினத்தன்று டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில் 41 வயதுடைய நபர் ஒருவர் மீண்டும் மீண்டும் கத்தி குத்து சம்பவத்திற்கு உள்ளாகியுள்ளார். புத்தாண்டில் கத்தி குத்து அமெரிக்காவில் சனிக்கிழமையன்று டைம்ஸ் சதுக்கத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக நகரம் தயாராகிக் கொண்டிருந்த போது கத்தி குத்து சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இதில்  41 வயதான ஆண் ஒருவர் உடல் மற்றும் முதுகில் பல கத்திக் காயங்களால் பாதிக்கப்பட்டார் மற்றும் தீவிரமான நிலையில் பெல்லூவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  நியூயார்க் … Read more

புத்தாண்டை ஒட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் வருகை அதிகம்

சென்னை: புத்தாண்டை ஒட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவில் அதிகளவு பார்வையாளர்கள் வருகை புரிந்ததால் கூடுதல் பார்வையாளர்கள் வர வாய்ப்பு இருந்தும் முறையான ஏற்பாடுகளை செய்யாததால் சிறுவர்களுடன் காத்திருக்க முடியாமல் நெரிசல் மிகுதியால் பலர் திரும்பிச் செல்கின்றனர். அதிகளவு பார்வையாளர்கள் குவிந்ததால் ஒழுங்குபடுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். புத்தாண்டு என்பதால் வனத்துறை அதிகாரிகள், உயரதிகாரிகளை சந்திக்க சென்றதால், ஊழியர்கள் மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய எல்லையில் சுற்றித் திரிந்த சீனர்கள் இருவர் அதிரடியாக கைது | Two Chinese nationals who were wandering around the Indian border were arrested

மஹராஜ்கஞ்ச்–உத்தர பிரதேசத்தில், இந்திய – – நேபாள எல்லை யில் சட்டவிரோதமாக சுற்றித் திரிந்த சீனர்கள் இருவரை, நம் எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். நம் எல்லைப் பகுதிகள் வழியாக, வெளிநாட்டவர் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்கும் வகையில், எல்லைப் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் சோனாலி அருகே உள்ள இந்திய – – நேபாள எல்லைப் பகுதியில் நேற்று சோதனை நடத்தி, சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிந்த நபர்களிடம் … Read more