இலவச உணவு தானிய திட்டம்: ஓராண்டு நீடிப்பு நாளை முதல் அமல்| Free Food Grain Scheme: One year duration effective from tomorrow

புதுடில்லி: இலவச உணவு தானிய திட்டம் ஓராண்டு நீடிப்பு நாடு முழுவதும் நாளை முதல் அமலுக்கு வருகிறது. கொரோனா ஊரடங்கின் போது, மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. பலர் வேலை வாய்ப்பை இழந்தனர். இந்த நிலைமையை சமாளிப்பதற்காக, பல்வேறு உதவி திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக, ஏழை எளிய மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் ஏழைகளுக்கான இலவச உணவு தானிய திட்டத்தை, 2020 ஏப்ரலில் மத்திய அரசு அறிவித்தது. சர்வதேச அளவில் … Read more

கோவை: ஈஷா மையத்திலிருந்து மாயமான பெண் கிணற்றில் சடலமாக மீட்பு! – மனைவியின் உடலை உறுதி செய்த கணவர்

திருப்பூர் மாவட்டம், அவிநாசியைச் சேர்ந்தவர் பழனிக்குமார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவரின் மனைவி சுபஶ்ரீ, ஒரு பனியன் கம்பெனியில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராகப் பணியாற்றிவருகிறார். இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில், சுபஶ்ரீ கடந்த 11-ம் தேதி காலை கோவை பூண்டி அருகேயுள்ள ஈஷா யோகா மையத்துக்கு ஒரு வார கால பயிற்சிக்குச் சென்றிருக்கிறார். பயிற்சி முடிந்து 18-ம் தேதி அவர் வீடு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் சுபஶ்ரீ வரவில்லை. இது தொடர்பாக பழனிக்குமார் ஆலந்துறை … Read more

இலங்கையர்கள் எங்கள் நாட்டின் மிகப்பெரிய சொத்து: தென் கொரிய தூதுவர்

Courtesy: Sunday Observer கொரியாவில் உள்ள இலங்கையர்கள், பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் சொத்தாக பார்ப்பதாக தென் கொரிய தூதுவர் கூறியுள்ளார். தென் கொரியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 45-வது ஆண்டு நிறைவு கடந்த வாரம் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், இலங்கைக்கான கொரிய குடியரசின் தூதுவர் சந்துஷ் வூன்ஜின் ஜியோங், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளைப் தொடர்வது மற்றும் வாய்ப்புகள் குறித்த தனது கருத்துக்களை சமீபத்தில் சண்டே ஒப்சர்வருடன் பகிர்ந்துகொண்டார். கொரியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு … Read more

புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவிதங்கள் இல்லை: டிஜிபி தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாடட்டங்களில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும், விபத்துகளும் இல்லை என்று டிஜிபி கூறியுள்ளார். நேற்று இரவு முதல் இன்று காலை வரை நடந்த புத்தாண்டு கொண்டாட்டங்களில் பாதிப்பு ஏற்படவில்லை. அனைத்து மாநகரம், மாவட்டங்களில் போலீசின் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது என்று டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.

பிக் பாஸ் 5 நாள் 83: என்னை அப்படி கூப்படாதீங்க எச்சரித்த அசிம்; எவிக்ஷனில் வெளியேறப்போவது யார்?

‘மூச்சு விடாமல் ஒரு மணி நேரத்திற்கு பேசினாலும அசிம் பேசுவதில் பாயிண்ட்டே இருக்காது’ என்று நேற்றைய கட்டுரையில் எழுதியிருந்தேன். இந்த எபிசோடில் அசிமாக நடிப்பதற்கு ஷிவினுக்கு வாய்ப்பு கிடைத்த போது, ‘இந்த விஷயத்தை’ மிகத் திறமையாக வெளிக்கொணர்ந்தார். ஒருவகையில் அசிமின் உள்ளீடற்ற வாதத்திறமையை ஷவின் அம்பலப்படுத்தி விட்டார் என்றே சொல்லலாம். அது கடுமையான விமர்சனமாகவே இருந்தாலும் நகைச்சுவையின் மூலம் வைக்கும் போது எதிராளியும் ஒப்புக் கொள்வார் என்பதற்கு ஷிவினின் ‘ஆக்ட்’ ஒரு நல்ல உதாரணம். ‘செம.. செம..’ … Read more

3 வயது சிறுமியை ரயில் பாதையில் தள்ளிவிட்ட பெண்: அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்

அமெரிக்காவில் ஓரிகான் ரயில் நிலையத்தில் மூன்று வயது சிறுமியை ரயில் பாதையில் தள்ளிவிட்ட 32 வயது பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள் அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள போர்ட்லேண்டின் கேட்வே ட்ரான்சிட் சென்டர் மேக்ஸ் பிளாட்பார்மில் தனது அம்மாவுடன் நின்று கொண்டு இருந்த மூன்று வயது சிறுமியை பெண் ஒருவர் திடீரென ரயில் பாதையில் தள்ளிவிட்ட அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் அனைவரையும் திகிலடைய வைத்துள்ளது. அந்த வீடியோவில் சிறுமியின் பின்னால் அமர்ந்திருந்த பெண் திடீரென … Read more

உக்ரைன் அதிபரின் புத்தாண்டு செய்தி | கொரோனாவுக்கு மத்தியில் சீனாவில் கொண்டாட்டம் | உலகச் செய்திகள்

சீனாவில் கொரோனா பரவலுக்கு மத்தியில் மக்கள் புத்தாண்டைக் கொண்டாடக் கூட்டமாக திரண்டனர். “வெற்றி பெறும் வரை ரஷ்யா உடன் தொடர்ந்து போரிடுவோம்” என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது புத்தாண்டு செய்தியில் குறிப்பிட்டுள்ளார். வட கொரியா 24 மணி நேரத்தில் நான்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளைச் செலுத்தியுள்ளதாகத் தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. 2035-க்குள் சீனா, வட கொரியா உள்ளிட்ட நாடுகள் வரை பாயும் ஏவுகணைகளை ஜப்பான் உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல். மெக்சிகோ நாட்டில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் … Read more

படகு கவிழ்ந்ததில் 2 புலம்பெயர்ந்தவர்கள் உயிரிழப்பு: 232 பேர் மீட்பு

லெபனான் கடற்கரையில் சனிக்கிழமையன்று படகு கவிழ்ந்ததில் இரண்டு புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 232 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். புலம்பெயர்பவர்களின் ஆபத்தான பயணம் சொந்த நாடுகளில் அதிகரிக்கும் பதற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக பல்வேறு நாட்டு மக்களும் ஆபத்தான கப்பல் பயணங்கள் மூலம் ஐரோப்பாவை வந்தடைய முயற்சிக்கின்றனர். அந்த வகையில் கடந்த செப்டம்பரில் வடக்கு லெபனானில் இருந்து ஐரோப்பாவை நோக்கி சென்ற புலம்பெயர்ந்தவர்களில் 34 பேர் வடக்கு சிரிய துறைமுக நகரமான டார்டஸின்(Tartus)  கடற்கரையில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர். இது அரசாங்கங்களுக்கு மத்தியிலும், … Read more

‘உன் வாழ்க்கை உன் கையில்’ – நடிகர் ரஜினிகாந்த் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து

சென்னை: அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் ஒவ்வொரு நாடுகளிலம் ஆங்கில புத்தாண்டு பிறந்து வருகிறது. இதனிடையே இந்தியாவில் புதிதாய் பிறந்த ஆங்கில புத்தாண்டை மக்கள் இனிப்புகள் வழங்கியும், பாட்டுப் பாடி, நடனமாடி உற்சாகமாக வரவேற்றும், ஒருவருக்கொருவர் ஹேப்பி நியூ இயர் என புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் 2023 புதிதாய் பிறந்த நிலையில் தேவாலயங்கள் மற்றும் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பல்வேறு … Read more