ஆதாருடன் இணைக்க ஜனவரி 31வரை அவகாசம் – இதுவரை1.61 கோடி மின் இணைப்புகள் ஆதாருடன் இணைப்பு! செந்தில் பாலாஜி…

சென்னை:  மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாகவும், இதுவரை 1.61 கோடி மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டு இருப்பதாகவும் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி  கூறியுள்ளார்.  ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பின்படி, டிசம்பர் 31ந்தேதி கடைசி நாள் என்ற நலையில், தற்போது, ஜனவரி 31-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. … Read more

காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் அனைவருக்கும் டிஜிபி சைலேந்திரபாபு புத்தாண்டு வாழ்த்து

சென்னை: காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அனைவருக்கும் டிஜிபி சைலேந்திரபாபு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். காவல் அதிகாரிகள் உயர் அதிகாரிகளை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து கூற தலைமை அலுவலகம் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் வாழ்த்துகளை தொலைபேசியில் தெரிவித்தால் போதுமானது எனவும் டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

ஷாப்பிங் சென்றபோது மயங்கி விழுந்த நபர்; சி.பி.ஆர் கொடுத்து மீட்ட மருத்துவர்; வைரல் வீடியோ!

சுயநினைவின்றி மயங்கி விழுந்த நபரை மருத்துவர் ஒருவர் சி.பி.ஆர் முதலுதவி கொடுத்து மீட்கும் வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பெங்களூரு IKEA ஸ்டாரில் ஷாப்பிங் செய்யச் சென்ற ஒருவர், திடீரென மூர்ச்சையாகி சரிந்து கீழே விழுந்துள்ளார். அங்கு ஷாப்பிங் செய்ய வந்தவர் மருத்துவர், அவருக்கு சி.பி.ஆர் அளிக்கிறார். தொடர்ந்து அவரின் நெஞ்சுப்பகுதியில், சிறுசிறு இடைவெளி விட்டு அழுத்தியுள்ளார். Doctor giving CPR அந்த நபருக்கு 10 நிமிடங்கள் வரை எந்த அசைவும் இல்லை. மருத்துவர் தொடர்ந்து இந்த … Read more

உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் பிறந்தது 2023 புத்தாண்டு! மக்கள் கொண்டாட்டம்… வீடியோ

உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் ‘2023’ புத்தாண்டு பிறந்துள்ளது. 2022ஆம் ஆண்டு இன்றுடன் முடிவடைந்து 2023 பிறக்கிறது. இந்தப் புத்தாண்டை உலக மக்கள் அனைவரும் கோலாகலமாக கொண்டாடி வரவேற்க தயாராக இருக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் எல்லோரும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் உலகிலேயே முதல் புத்தாண்டு நியூசிலாந்தில் தொடங்கியது. Watch live: New Zealand is marking the start of 2023 with a lights and fireworks display at the Sky … Read more

நீக்கப்பட்ட 2,400 நர்சுகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி! அமைச்சர் மா.சுப்பிரமணியன் மகிழ்ச்சி செய்தி…

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது, கொரோனா காலக்கட்டத்தில் பணியமர்த்தப்பட்ட 2400 தற்காலிக செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு   ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம்,  கொரோனா கால நெருக்கடியை சமாளிக்க தேசிய சுகாதார குழுமத்தின் வழி காட்டுதல்படி ஒப்பந்த அடிப்படையில் நர்சுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசு விதிமுறைகளை அ.தி.மு.க. அரசு முறையாக கடைபிடிக்காமல் … Read more

ஒன்றிய மண்வள ஆராய்ச்சி மையத்தில் அனுமதியின்றி 370 மரங்களை வெட்டியதாக வனச்சரகர் உட்பட 5 பேர் கைது

உதகை: ஒன்றிய மண்வள ஆராய்ச்சி மையத்தில் அனுமதியின்றி 370 மரங்களை வெட்டியதாக வனச்சரகர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீட்டுக்கல் பகுதியில் 234 ஏக்கரில் ஒன்றிய மண்வள ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. ஒன்றிய மண்வள ஆராய்ச்சி மையத்தில் அனுமதியின்றி ரூ.48 லட்சம் மதிப்புள்ள 370 மரங்கள் வெட்டி விற்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இந்நிலையில் உதகை தெற்கு வனச்சரகர் நவீன்குமார், வனக்காப்பாளர் பாபு, வனவர் சசிதரன், வேட்டை தடுப்பு காவலர் தேவேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ரேசன் கடையை சேதப்படுத்திய படையப்பா : வனத்துறை நடவடிக்கையால் ஏமாற்றம் அடைந்தது| elephant damage ration shop

மூணாறு: மூணாறு அருகே கே.டி.எச்.பி.கம்பெனிக்குச் சொந்தமான கூடாரவிளை எஸ்டேட் பாக்டரி டிவிஷனில் படையப்பா எனும் ஆண் காட்டு யானை ரேசன் கடையை சேதப்படுத்திய நிலையில் வனத்துறையினர் விரட்டியதால், தனது எண்ணம் நிறைவேறாமல் ஏமாற்றம் அடைந்தது. மூணாறு அருகே குட்டியாறுவாலி பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு டூவீலர், ஜீப் ஆகியவற்றை சேதப்படுத்திய படையப்பா நேற்று முன்தினம் இரவு கூடாரவிளை எஸ்டேட் பாக்டரி டிவிஷன் பகுதிக்குச் சென்றது. அங்கு நள்ளிரவு 2:15 மணிக்கு வேலுச்சாமி நடத்தி வரும் ரேசன் கடையின் … Read more

"ஷர்மிகா சரண் மீது நடவடிக்கை எடுக்கப்படும்!"- இந்திய மருத்துவ இணை இயக்குநர் பார்த்திபன் எச்சரிக்கை

பரபரப்பை உண்டாக்கிய பா.ஜ.க-வின் டெய்சி சரண் ஆடியோ பேச்சைவிட, தற்போது அவரது மகள் டாக்டர் ஷர்மிகா சரண் பேசும் வீடியோக்கள்தான் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி சர்ச்சையை உண்டாக்கிக்கொண்டிருக்கின்றன. ”கவுந்து படுத்தா மார்பக புற்றுநோய் வரும்.” ”தினமும் 4 ஸ்பூன் நெய் சாப்பிட்டால் முகம் பொலிவாகும்.” ”ஒரு க்ளோப் ஜாமுன் சாப்பிட்டா, ஒரேநாளில் மூணு கிலோ எடை கூடிவிடும்.” ”நம்மவிட பெரிய மிருகத்தை சாப்பிட்டா நம்மளால டைஜஸ்ட் (செரிமானம்) பண்ணமுடியாது. பீஃப் நம்மவிட பெரிய மிருகம்ங்குறதால அதைச் சாப்பிடக்கூடாது.” … Read more

ரொனால்டோ உடனான 173 மில்லியன் ஒப்பந்தம்: சவுதி அரேபியாவின் அல் நஸர் கிளப் வரலாறு என்ன?

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ அல் நஸர் கிளப்புடனான தனது புதிய ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், சவுதி அரேபியாவின் அல் நர் கிளப்பை பற்றிய தகவல் இந்த செய்தியில் வழங்கப்பட்டுள்ளது. அல் நஸர் அணியுடன் கைகோர்த்த ரொனால்டோ கத்தார் உலக கோப்பை போட்டிகள் பிறகு மான்செஸ்டர் அணியுடனான ஒப்பந்தத்தில் இருந்து விலகி கொண்ட போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போது சவுதி அரேபியாவின் கால்பந்து கிளப் அணியான அல் நஸருடன் 173 மில்லியன் மதிப்புள்ள புதிய ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளார். … Read more

ரிஷப் பண்ட்-டை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுனரை கௌரவித்த ஹரியானா அரசு… வீடியோ…

உத்தரகண்ட் மாநிலம் ரூர்கி அருகே நேற்று அதிகாலை நடந்த சாலைவிபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பலத்த காயமடைந்தார். டெல்லியில் இருந்து ரூர்கி வழியாக தனது சொந்த ஊரான டேராடூனுக்கு சொகுசு காரை ஒட்டிச் சென்றார் ரிஷப் பண்ட். அதிகாலை 5:30 மணியளவில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது எதிரே ஹ்ரிதுவாரில் இருந்து ஹரியானா மாநிலம் பானிபட் சென்று கொண்டிருந்த ஹரியானா அரசு பேருந்தின் ஓட்டுநர் … Read more