துணிவு படத்தின் டிரெய்லர் நாளை இரவு 7 மணிக்கு வெளியாகிறது…

அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் துணிவு படத்தின் டிரெய்லர் நாளை இரவு 7 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன், வீரா, அஜய், ஜி.எம். சுந்தர் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் இவர்களின் கேரக்டர் குறித்த அறிவிப்புடன் போஸ்டரும் இன்று வெளியானது. சென்சாரில் U/A சான்று வழங்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் நாளை மாலை 7 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டை கொண்டாட இருக்கும் அஜித் … Read more

தேனி மாவட்டத்தில் நாளை இரவு 1 மணிக்கு மேல் பொது இடத்தில் புத்தாண்டு கொண்டாட அனுமதியில்லை: எஸ்.பி.

தேனி: தேனி மாவட்டத்தில் நாளை இரவு 1 மணிக்கு மேல் பொது இடத்தில் புத்தாண்டு கொண்டாட அனுமதியில்லை என எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்ரே தெரிவித்துள்ளார். மக்களுக்கு இடையூறாக அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

`காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஏ.டி.எம் தான் கர்நாடகா!’ – தேர்தல் பிரசாரத்தில் அமித் ஷா

கர்நாடகாவில் வரும் 2023 மே மாதத்துக்குள் சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. கர்நாடகாவை ஆளும் பா.ஜ கட்சியினரும், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினரும், ஆட்சிக்கட்டிலில் அமர கங்கணம் கட்டிக்கொண்டு, களத்தில் படு ‘பிஸியாக’ தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கியுள்ளனர். ஒரு புறம் காங்கிரஸ் கட்சியினர் ‘ஜோடோ’ யாத்திரை நடத்தி முடித்து, மாவட்டம் வாரியாக வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கி விட்டனர். மறு புறம் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் ‘பஞ்ச ரத்தின ரத யாத்திரை’ தொடங்கி தீவிரமாக … Read more

புத்தாண்டு படிபூஜை: திருத்தணிக்கு நாளை இரவு சிறப்பு ரயில்களை இயக்குகிறது தெற்கு ரயில்வே…

சென்னை:  திருத்தணியில் புத்தாண்டையொட்டி நடைபெறும் திருப்புகழ் திருப்படி பூஜை விழாவையொட்டி திருத்தணிக்கு சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அறுபடைவீடுகளில் ஐந்தாம் படைவீடான திருத்தணி முருகன் கோயிலில், திருப்புகழ் திருப்படித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம்,  ஏராளமான பஜனை குழுவினர் ஒவ்வொரு படியிலும், பக்தி பாடல்களை பாடியவாறு மலைக்கோயிலுக்குச் சென்று முருகப் பெருமான வழிபடுவார்கள். இக்கோயிலில் முக்கிய விழாவாக ஓா் ஆண்டைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ள 365 திருப்படிகளுக்கு … Read more

புத்தாண்டு கொண்டாட்டம்: புதுச்சேரியில் கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிப்பு!

புதுச்சேரி: புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக புதுச்சேரியில் நேரம் நீடிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 2 மணி வரை கொண்டாட அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே ஒரு மணி வரை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் வழிபாட்டு தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளதால் கூடுதலாக ஒரு மணி நேரம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை: "எட்டுவழிச்சாலை திட்டத்தை புகுத்தப் போவதில்லை; ஆனால்…'' – இணை அமைச்சர் வி.கே.சிங்

வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பா.ஜ.கவில் சிவகங்கை லோக்சபா தொகுதி பொறுப்பாளராக மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் தான், சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட  புதுக்கோட்டை மாவட்டத்தின் திருமயம், சிவகங்கை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக, திருமயம் அருகே வி.லெட்சுமிபுரம், ஓடைப்பட்டி, திருமயம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்குவாரிகளைப் பார்வையிட்டு, அவற்றால், பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, இந்த பிரச்னைகள் எல்லாம் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மூலம் தீர்வு காண நடவடிக்கை … Read more

வெளியே போ என சத்தமிட்ட ஆவி: பிரித்தானிய ஆலயத்துக்குள் ஆவி வேட்டையாடுபவருக்கு காத்திருந்த அதிர்ச்சி அனுபவம்

பழங்கால பிரித்தானிய ஆலயம் ஒன்றிற்குள் நுழைந்த ஆவி வேட்டையாடும் நபர் ஒருவருக்கு, வெளியே போ என ஆவி ஒன்று சத்தமிடும் திகில் அனுபவம் ஒன்று கிடைத்தது. பட்டப்பகலில் கிடைத்த பயங்கர அனுபவம் ஆவி வேட்டையாடும் Andy Pollard என்னும் யார்க்‌ஷையரைச் சேர்ந்த நபர், லீட்ஸிலுள்ள Kirkstall Abbey என்னும் பழங்கால துறவிகள் மடத்துக்குச் சென்றுள்ளார். வெளிச்சம் நன்றாக இருக்கும் மதிய நேரத்தில், ஆவிகள் நடமாட்டத்தை உணரும் கருவிகளுடன் அந்த மடத்தில் உலாவிக்கொண்டிருந்திருக்கிறார் Andy. Image: Andy Pollard … Read more

மெரினா கடலுக்குள் அமைய உள்ள கருணாநிதியின் பேனா நினைவு சின்னம் மாதிரி படங்கள் வெளியீடு – ஜனவரி 31ந்தேதி கருத்துக்கேட்பு கூட்டம்

சென்னை: மெரினாவில் அமையவுள்ள கருணாநிதியின் பேனா நினைவு சின்ன மாதிரி படம் வெளியீடு. இந்த சின்னம் அமையவுள்ள பகுதி,  நில அதிர்வு மண்டல வரைபடத்தின்படி, மிதமான ஆபத்து மிக்க பகுதி என்பது ‘வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை’ மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன் இதுகுறித்து ஜனவரி 31ந்தேதி பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும்,  தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி வயது … Read more

20 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: 20 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஊர்க்காவல் படை தலைமை கமாண்டன்ட் ஆக டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி நியமிக்கப்பட்டுள்ளார். தலைமையக ஏ.டி.ஜி.பி.யாக உள்ள ஜி.வெங்கடராமனுக்கு கூடுதலாக காவல்துறை நிர்வாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னை டிஜிபி அலுவலக ஐஜியாக டி.செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக ஆசியம்மாள் நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் சரக டிஐஜியாக, ஐபிஎஸ் அதிகாரி எம்.எஸ்.முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார். கடலோர பாதுகாப்பு குழும ஐஜியாக, ஐபிஎஸ் அதிகாரி ஏ.கயல்விழி சென்னையில் … Read more