பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி| India successfully test fires extended range version of BrahMos Air Launched missile

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: போர்க்கப்பல்களை தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்ததாக பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஏவுகணை, 400 கி.மீ., தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் வல்லமை பெற்றது எஸ்யு-30 போர் விமானத்தில் இருந்து ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணையானது, இலக்காக வைக்கப்பட்ட கப்பலை துல்லியமாக தாக்கியதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வானில் இருந்து கப்பல்களை தாக்கும் வகையில் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது. புதுடில்லி: போர்க்கப்பல்களை தாக்கி அழிக்கும் … Read more

“ரத்த ஓவியங்களுக்குத் தடை, மீறும் நிறுவனங்களுக்கு சீல்…" அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!

மனித உயிர் விலைமதிப்பற்றது. ரத்ததானம், பல உயிர்களை எதிர்பாராத விபத்துகளில் இருந்து காப்பாற்றி வருகிறது. ஆனால் அந்த ரத்தத்தின் மதிப்பு தெரியாதவர்கள், அதை வீணடித்து வருவது கவலைக்குரியது. அதிலும் பிரபலங்களும் படித்த இளைஞர்களும் இந்தச் செயல்களை ஊக்கப்படுத்தி வருவது மிகவும் வேதனையானது என்று, பலரும் தங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சென்னை வடபழனி, தியாகராய நகர் பகுதியில் உள்ள பிளட் ஆர்ட் (Blood Art)  நிறுவனங்களை, மருத்துவத்துறை அதிகாரிகள் இரு தினங்களுக்கு முன் ஆய்வு செய்தனர். … Read more

ஜேர்மன் உளவுத்துறை அதிகாரியே ரஷ்யாவுக்காக உளவு பார்த்த விடயம்: சிக்கியது எப்படி?

ஜேர்மன் உளவுத்துறை அதிகாரி ஒருவரே ரஷ்யாவுக்காக உளவு பார்த்த விடயம் ஜேர்மனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலையே பயிரை மேய்ந்த கதை ஜேர்மனியின் வெளிநாட்டு உளவு அமைப்பான BNDயிலுள்ள ஒரு துறையின் தலைவராக பணியாற்றியவர் Carsten L. அவர் ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக இம்மாதம் கைது செய்யப்பட்டார். சிக்கியது எப்படி? வேலியே பயிரை மேய்ந்த கதையாக, தன் நாட்டின் பாதுகாப்புக்காக உழைக்கும் முக்கிய பொறுப்பில் இருந்த Carsten, தன் நாட்டுக்கே துரோகம் செய்துள்ளார். மேற்கத்திய நாடு ஒன்றின் உளவுத்துறை … Read more

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் ‘ஒரு கோடியே ஒன்றாவது பயனாளி’க்கு மருந்து பெட்டகம் வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

திருச்சி: தமிழகஅரசு அமல்படுத்தி உள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ்  திருச்சி அருகே உள்ள கிராமத்தில், ஒரு கோடியே ஒன்றாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை  முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தொடங்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி இலட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். அரசு சார்பில் செவிலியர்கள் வீடு தோறும் சென்று, உடல்நலம் பாதிப்பு மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களை சந்தித்து, அவர்களின் உடல்நிலை குறித்து சோதனை, … Read more

சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிக்கு ரூ.206.64 கோடி மதிப்பில் ஒப்பந்தம்

சென்னை : சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிக்கு ரூ.206.64 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தானது. சி.எம்.பி.டி. முதல் மாதவரம் வரை 10.1 கி.மீ. தூரத்துக்கு இருப்புப் பாதை, இதர பணிகள் நடைபெற உள்ளன.

முகேஷ் அம்பானியின் மகன் திருமண நச்சயதார்த்தம் கோலாகலம்| Mukesh Ambani’s son Anant Ambani, Radhika Merchant ‘rokafied’!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜெய்ப்பூர்: ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த்துக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் மகள் ராதிகாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம், ராஜஸ்தானின் நாத்வாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலில் கோலாகலமாக நடந்தது. முகேஷ் அம்பானி – நீடாவின் தம்பதியின் 3வது மகனான ஆனந்த், அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலையில் படிப்பை முடித்தவர். ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஜியோ பிளாட் பார்ம்கள் மற்றும் ரீடெயில் வென்ச்சர்ஸ் வாரியங்களில் உறுப்பினராக இருந்தவர், தற்போது, ரிலையன்ஸ் நிறுவனத்தின் … Read more

ரூ.70 லட்சம் மதிப்பு; உயர் ரக பைக்குகள் விற்பனை… டீலருக்கே டிமிக்கி கொடுத்த பைக் ஷோரூம் ஊழியர்கள்!

ராணிப்பேட்டை வக்கீல் தெருவைச் சேர்ந்த வேதாராம் என்பவர் வேலூர் சாய்நாதபுரம் பகுதியில் ‘யமஹா’ ஷோ ரூம் நடத்திவருகிறார். இதனுடைய கிளை ஷோ ரூம்கள் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகிலும், காட்பாடி, ராணிப்பேட்டை பகுதிகளிலும் செயல்பட்டுவருகின்றன. இவரின் காட்பாடி ஷோ ரூம் விற்பனைப் பிரிவில் பணிபுரிந்துவந்த வரகூர் புதூரைச் சேர்ந்த பொற்செல்வன், சாய்நாதபுரம் விக்னேஷ், வண்டறந்தாங்கல் பிரசாந்த், கணியம்பாடி தினேஷ்குமார் ஆகிய நால்வரும் கூட்டுச்சேர்ந்து, டீலர் வேதாராமுக்கே தெரியாமல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி நவம்பர் 11-ம் … Read more

அலைஅலையாய் பாய்ந்த 100க்கும் மேற்பட்ட ரஷ்ய ஏவுகணைகள்: கதிகலங்கிய உக்ரைனிய நகரங்கள்

வியாழன் கிழமையான இன்று உக்ரைனிய நகரங்கள் மீது 120க்கும் மேற்பட்ட ரஷ்ய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அலை அலையாய் பாய்ந்த ஏவுகணைகள் 10 மாதங்கள் கடந்து மந்த நிலையை அடைந்துள்ள உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில், யாரும் எதிர்பாராத நேரம் ரஷ்ய ராணுவம் அவ்வப்போது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் வியாழன் கிழமையான இன்று ரஷ்ய ராணுவம் 120க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை உக்ரைனிய நகரங்கள் மீது ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது. … Read more

இந்தியாவில் 2036ம் ஆண்டு ‘ஒலிம்பிக்’ போட்டி: மத்தியஅமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல்…

டெல்லி: இந்தியாவில் 2036ம் ஆண்டு ‘ஒலிம்பிக்’ போட்டி நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்தியஅமைச்சர் அனுராக் தாக்கூர்  தெரிவித்து உள்ளார். 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு இந்தியா ஏலம் எடுக்கும் என்றும்,   இந்த முயற்சி வெற்றி பெற்றால், ஜப்பான், தென் கொரியா மற்றும் சீனாவுக்குப் பிறகு விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நான்காவது ஆசிய நாடு என்ற பெருமையைப் பெறும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார். உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டியாகக் கருதப்படும் ஒலிம்பிக் போட்டிகள் (Olympic … Read more

திருச்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் பயனடையும் ஒரு கோடியே 1வது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்..!!

திருச்சி: திருச்சி, சன்னாசிபட்டியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் மருந்து பெட்டகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். திட்டத்தின் மூலம் பயனடையும் ஒரு கோடியே 1வது பயனாளி மீனாட்சிக்கு முதல்வர் மருந்து பெட்டகம் வழங்கினார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இயன்முறை சிகிச்சை பெறும் மீனாட்சியின் கணவரிடம் முதல்வர் நலம் விசாரித்தார்.