திருவனந்தபுரம்: 'மேயராக்குவதாக கூறி போட்டியிட வைத்தனர், ஆனால்…'- முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீலேகா

கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க கைப்பற்றியுள்ளது. தேர்தல் சமயத்தில் முன்னாள் டி.ஜி.பி-யும், கேரள மாநிலத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியுமான ஸ்ரீலேகா திருவனந்தபுரம் மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. ஸ்ரீலேகா சாஸ்தமங்கலம் வார்டில் கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில், கட்சியில் சீனியரான வி.வி.ராஜேஷ் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை மேயராக ஆஷாநாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சீனியாரிட்டி அடிப்படையிலும் கட்சி அனுபவத்தின் அடிப்படையில் இவர்கள் … Read more

தனி நீதிபதி தீர்ப்பு செல்லுமா? திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் மேல்முறையீடு வழக்கில் நாளை தீர்ப்பு

மதுரை: தனி நீதிபதி தீர்ப்பு செல்லுமா?  என்பது குறித்து, திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் மேல்முறையீடு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.  திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான தமிழ்நாடு அரசின்  மேல்முறையீட்டு மனுக்கள் மீது நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு 5 வது நாளாக விசாரணை நடத்திய நிலையில்,  நாளை … Read more

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது | Automobile Tamilan

மஹிந்திராவின் பிரசத்தி பெற்ற XUV700 மாடலுக்கு மாற்றாக புதிய XUV 7XO எஸ்யூவி விற்பனைக்கு ரூ.13.66 லட்சம் ஆரம்பம் முதல் துவங்குகின்ற நிலையில், முதலில் வாங்கும் 40,000 நபர்களுக்கு மட்டுமே இந்த அறிமுக சலுகை விலை கிடைக்க உள்ளது. மஹிந்திராவின் புதிய மின்சார வாகனங்களான XEV சீரிஸ் கார்களிலிருந்து பல்வேறு நவீன அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. Mahindra XUV 7XO முந்தைய XUV 700 மாடலின் விலையை அடிப்படையாகவே அமைந்திருந்தாலும், இந்த கார் பல்வேறு நவீன அம்சங்களுடன் … Read more

"பிள்ளைகளை நம்பலாமா?" – ஓய்வுக்கு முன் நீங்கள் கேட்க வேண்டிய 5 கேள்விகள்!

நீங்கள் வாழ்நாள் முழுவதும் குடும்பத்திற்காக ஓயாமல் உழைத்தவர். ஆனால், ஓய்வுக்காலம் என்று வரும்போது, “இனி என் செலவுக்கு யாரை எதிர்பார்ப்பது?” என்ற கேள்வி உங்களுக்குள் எழுகிறதா? இந்தியாவில் ஓய்வுக்கால வாழ்க்கை குறித்த இரண்டு அதிர்ச்சிகரமான புள்ளிவிவரங்கள் இதோ: சுயசார்பின்மை: 2023-ல் நடத்தப்பட்ட ஆய்வின்படி, 67% இந்திய முதியவர்கள் தங்கள் அன்றாட செலவுகளுக்குத் தங்கள் பிள்ளைகளையோ அல்லது உறவினர்களையோதான் சார்ந்து இருக்கிறார்கள். மருத்துவச் செலவு: இந்தியாவில் மருத்துவச் செலவுகள் ஆண்டுக்கு 14% வரை உயர்கிறது. அதாவது, இன்று ₹5 லட்சமாக இருக்கும் ஒரு அறுவை சிகிச்சையின் செலவு, … Read more

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், ஐ.நா.பெண்கள் அமைப்பிற்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!!

சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பிற்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது! ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு (UN Women) மற்றும் தமிழ்நாடு அரசு, பெண்களின் முன்னேற்றம், பாலின சமத்துவம், பாதுகாப்பான பணியிடங்கள் மற்றும் தலைமைத்துவ மேம்பாடு ஆகியவற்றில் இணைந்து செயல்படுகின்றன; குறிப்பாக, ஜவுளித் துறையில் பாலியல் துன்புறுத்தலைத் தடுப்பது, கல்வி, சுகாதாரம், மற்றும் பொருளாதார அதிகாரமளித்தல் போன்ற துறைகளில் இணைந்து பல திட்டங்களைச் செயல்படுத்துகின்றன, இதுதொடர்பாக தமிழ்நாடு … Read more

DMK : அடுத்தடுத்த அறிவிப்புகள், திட்டங்கள்! `தோல்வி பயமா… தேர்தல் நேர எதார்த்தமா?'

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கிறது என்ற நிலையில், தமிழ்நாட்டின் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. தேசிய அரசியல் கட்சி தலைவர்களின் தொடர் படையெடுப்பும், மாநிலக் கட்சிகளின் கூட்டணி சலசலப்பும், சமூக ஊடகங்களில் பரவும் புரோமோஷன் வீடியோக்களும் என மக்கள் பரபரப்பாகத் தொடங்கிவிட்டனர். “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்” என முதல்வர் ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் 4 ஆண்டுகள், 7 மாதங்கள், 29 நாட்கள் ஆகிவிட்டது. தேர்தல் பிரசாரத்தின்போதே குஜராத் மாடலுக்கு மாற்றாக திராவிட … Read more

அமெரிக்காவில் புத்தாண்டன்று காணாமல் போன இளம்பெண் கொலை : இந்தியாவுக்கு தப்பிய கொலையாளியைப் பிடிக்க தீவிரம்…

அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலம் கொலம்பியாவில், புத்தாண்டு தினத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட 27 வயதான இந்திய இளம்பெண் நிகிதா கோடிஷாலா, தனது முன்னாள் காதலனின் குடியிருப்பில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த கொலையை செய்ததாக நிகிதாவின் முன்னாள் காதலன் அர்ஜுன் சர்மா (26) மீது போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். கொலை செய்த பிறகு, அவர் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார் என்று PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மருத்துவத் துறை நிபுணரான நிகிதா, மருந்தியல், … Read more

லொள்ளு சபா வெங்கட் ராஜ் மறைவு: 'டைப் ரைட்டர் மெக்கானிக் டு நடிகர்' – பகிரும் இயக்குநர் ராம்பாலா

நடிகர் லொள்ளு சபா வெங்கட் ராஜ் நேற்று உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 68. ‘வல்லனுக்குப் புல்லும் ஆயுதம்’, ‘மனிதன்’, ‘டிக்கிலோ’ எனப் பல படங்களிலும் நடித்திருக்கிறார். ‘மனிதன்’ படத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாகக் கலகலக்க வைத்திருப்பார். சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ படத்தில் கம்பிக்கிடையே புகுந்து புகுந்து வந்திடுவார். ‘வடக்குப்பட்டி ராமசாமி’யில் எதிர்காற்று அடித்ததில், லேட் ஆக நடந்து வந்தேன் என்பார். இப்படி சின்னதொரு ரோலில் நடித்திருந்தாலும் காமெடியில் அதகளம் செய்திருப்பார் வெங்கட் ராஜ். மறைந்த நடிகர் … Read more

சென்னை கூவம் ஆற்றின் உள்ளே இறங்கி தூய்மை பணியாளர்கள் போராட்டம் – பரபரப்பு

சென்னை: சென்னை எழும்பூரில் கூவம் ஆற்றின் உள்ளே இறங்கி தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறை யினர் அவர்களை கைது செய்துஅழைத்துசென்றனர். தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்கக் கூடாது, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, ரிப்பன் மாளிகை முன்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10 நாட்களுக்கும் மேலாக தூய்மைப் பணியாளர்கள் … Read more

சென்னை: வேலம்மாள் பள்ளியில் 13வது வீதி விருது விழா; திரளான கலைஞர்கள் பங்கேற்பு | Photo Album

Kanimozhi: “நம்முடைய கலை வடிவங்களையும் மொழியையும் பிடுங்கிக் கொண்டு சென்றுவிட்டார்கள்” – கனிமொழி Source link