பொன்னியின் செல்வன் 2 வது பக்கம் எப்.28ல் வெளியிடப்படவுள்ளது

சென்னை: பொன்னியின் செல்வன் 2 வது பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகிறது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். செம்டம்பரில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

“நாட்டுக்காக மூன்று தலைவர்களை இழந்த ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே!" – நட்டாவுக்கு கே.எஸ்.அழகிரி பதில்

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் அமைச்சர் கக்கனின் சிலை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரான கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு, சிலையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் கக்கனின் குடும்பத்தினர் பங்கு பெற்றனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கே.எஸ்.அழகிரி, “கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பா.ஜ.க-வின் மூத்த தலைவர் ஜே.பி நட்டா, `காங்கிரஸ் ஊழல் கட்சி, குடும்பத்துக்காகச் செயல்படும் … Read more

புத்தாண்டுக்கு பிரித்தானியா செல்லும் இளவரசர் ஹரி; அரச குடும்பத்தை பார்க்க அல்ல

இளவரசர் ஹரி புத்தாண்டுக்கு பிரித்தானிய செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அவர் தனது அரச குடும்பத்தாரை பார்ப்பதற்காக செல்லவில்லை, பதிலாக அரச குடும்பத்திற்கு எதிராக வெளிவரவுள்ள அவரது நினைவுக்குறிப்பு புத்தகத்தை விளம்பரப்படுத்த அவர் பிரித்தானியாவிற்கு பயணம் செய்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இளவரசர் ஹரியின் நினைவுக்குறிப்பு புத்தகமான ‘ஸ்பேர்’ (Spare) ஜனவரி 10, 2023 அன்று வெளியியாகவுள்ளது. டெய்லி மெயில் அறிக்கையின்படி , ஹரி புத்தாண்டில் இங்கிலாந்திற்குச் சென்று தனது புத்தகத்தை எழுதியதற்கான ‘நோக்கத்தை’ விளக்கி விளம்பரப்படுத்தவுள்ளார். … Read more

பொங்கல் பரிசு டோக்கன் வழங்கும் தேதி மற்றும் முதலமைச்சரின் பொங்கல் தொகுப்பு வழங்கும் தேதி மாற்றம்!

சென்னை:  தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கும் தேதியை 3வது முறையாக மாற்றி உத்தரவிட்டு உள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று,  பொங்கல் பரிசில் கரும்பு சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான டோக்கன்  வழங்கும் தேதிகள் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.1000 வழங்கு வதை முதலமைச்சர் ஸ்டாலின் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அது ஜனவரி 5ம் தேதி மாற்றப்பட்டு தற்போது ஜனவரி 9ஆம் தேதி என உறுதி செய்யப்பட்டுள்ளது. அறுவைடைத் திருநாளான … Read more

கஞ்சா விற்க முயன்ற 2 ஆப்ரிக்கர்களுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை

சென்னை: கஞ்சா போன்ற போதைப் பொருட்களை விற்க முயன்ற ஆப்ரிக்காவை சேர்ந்த 2 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவை சேர்ந்த 2 பேரை கைது செய்த காவல்துறையினர் 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

ரீவைண்ட்: கஷாயத்தில் விஷம்; பள்ளி மாணவி தற்கொலை; கோவை கார் குண்டு வெடிப்பு – தமிழ்நாடு க்ரைம் 2022

கர்ப்பத்தை கலைக்கச் சொன்ன கணவன்… கத்தியால் குத்தி கொன்ற மனைவி விழுப்புரத்தில் உள்ள நாயகன் தோப்பு என்னும் பகுதியில் வசித்து வந்தவர் கட்டட தொழிலாளி சந்தோஷ். இவர் தன் மனைவி சுரேகா, குழந்தைகளுடன் வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், சுரேகா மூன்றாவது முறையாக கர்ப்பம் தரித்திருப்பதையடுத்து, அவர் மீது சந்தேகப்பட்டு கர்ப்பத்தை கலைக்க கூறியிருக்கிறார். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த கணவன், தன் மனைவி சுரேகாவை கத்தியால் குத்த முயன்றிருக்கிறார். அப்போது அந்த கத்தியை வாங்கி … Read more

ஜேர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையில் போர்… எலான் மஸ்க் அமெரிக்க ஜனாதிபதியாவார்: புடின் ஆதரவாளர் ஆரூடம்

ஜேர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையில் போர் வெடிக்கும், எலான் மஸ்க் அமெரிக்க ஜனாதிபதியாவார் என 2023இல் நடக்கவிருக்கும் பல விடயங்களை கணித்துக் கூறியுள்ளார் புடின் ஆதரவாளர் ஒருவர். 2023 எப்படி இருக்கும்?   2022 முடியப்போகும் நிலையில், 2023 எப்படி இருக்கும் என்பதை அறிய மக்கள் பலர் ஆவலாக இருக்கிறார்கள். அதற்கேற்றாற்போல, 2023ஐக் குறித்து பலர் கணித்துச் சொல்லியிருக்கிறார்கள். தற்போது, ரஷ்ய முன்னாள் ஜனாதிபதியும், புடின் ஆதரவாளருமான Dmitry Medvedev என்பவரும், 2023ஆம் ஆண்டைக் குறித்த பல விடயங்களை … Read more

“40ம் நமதே நாடும் நமதே” என்ற இலக்கு நோக்கி உழைக்க வேண்டும்! திமுக அணி நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: “40ம் நமதே நாடும் நமதே” என்ற இலக்கு நோக்கி உழைக்க வேண்டும்  என 23 திமுக அணி நிர்வாகிகளிடையேயும் திமுக தலைவரும், முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையில், இன்று (28-12-2022) தி.மு.க. அனைத்து அணி நிர்வாகிகள் கூட்டம் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில்  நடைபெற்றது. இந்தி கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,  ‘திமுகவின் 23 அணிகளும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் “40ம் நமதே நாடும் … Read more

ஜனவரி 3 – ம் தேதி முதல் பொங்கல் பரிசு டோக்கன் : தமிழக அரசு தகவல்

பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி ஜனவரி. 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  நாளை முதல் டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஜனவரி 3 முதல் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.  பொங்கல் பரிசுடன் கரும்பு சேர்க்கப்பட்டுள்ளதால் அரசுக்கு கூடுதலாக ரூ. 71 கோடி செலவாகும் என அரசு தெரிவித்துள்ளது.