நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை இப்போது இருந்தே தொடங்குங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை இப்போது இருந்தே தொடங்குங்கள் என திமுக நிர்வாகிகள் கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற பாஜகவினர் எதையும் செய்ய தயங்கமாட்டார்கள்; அதனை எதிர்கொள்ள தயாராக இருங்கள். அணிகளில் வழங்கப்பட்ட பொறுப்பை பெருமையாக கருதாமல், களத்தில் பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

கோவிட் தொற்றிலிருந்து மக்களைக் காக்க கோரும் அதிபர் ஜி ஜின்பிங் – சீனாவில் என்ன நடக்கிறது?

கொரோனா வைரஸின் பாதிப்பு சீனாவில் அதிவேகமாகப் பெருகி வருகிறது. கூட்டம் கூட்டமாக மக்கள் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். அடுத்து வரும் சில மாதங்களிலேயே 2 மில்லியன் கோவிட் மரணங்கள் வரை நிகழ வாய்ப்புள்ளது என ஆய்வுகள் தெரிவித்துள்ளன. மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அங்குள்ள நடைபாதைகளிலும் இருக்கைகளிலும் அமரவைக்கப்பட்டு நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்கப்படுகிறது. சீனா சீனாவில் மீண்டும் கொரோனா… பாதிப்புகளை மூடி மறைக்கிறதா?! ஆம்புலன்ஸ்களில் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. பெரும்பாலானவர்களின் … Read more

பிரிந்து செல்ல முடிவு செய்த இளம் மனைவி: கோபத்தில் 63 வயது கணவர் செய்த செயல்

கிறிஸ்துமஸ் ஈவ் தினத்தன்று எர்னஸ்டோ ஃபவாரா என்ற 63 வயது மீனவர், அவருடைய 29 வயது மனைவி மரியா அமதுசோ தன்னை விட்டு செல்வதை தாங்க முடியாமல் கத்தியால் குத்தி கொலை செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம் மனைவி கொலை சிசிலியின் காஸ்டெல்வெட்ரானோவில்(Castelvetrano) வாழ்ந்து வரும் எர்னஸ்டோ ஃபவாரா என்ற 63 வயது கணவர் அவருடைய 29 வயது மனைவி மரியா அமதுசோ தன்னை விட்டு பிரிந்து செல்ல முயன்றபோது கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். கிறிஸ்துமஸ் … Read more

துபாயில் இருந்து சென்னை வந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு – தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்..

சென்னை: சீனாவில்இருந்து மதுரை வந்த 2 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், தற்போது துபாயில் இருந்து சென்னை வந்த 2 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களது மாதிரி,  புதிய வகை கொரோனாவா என்பதற்கான பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. சீனாவின் ஆய்வகம் ஒன்றில் இருந்து  கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில்  பரவத்தொடங்கிய பெருந்தொற்றான கொரோனா, கடந்த 3 ஆண்டுகளாக உலக நாடக்ளை புரட்டிப்போட்டது. கடந்த சில மாதங்களாக தொற்று … Read more

அதிமுக தவறானவர்கள் கையில் உள்ளது: டிடிவி தினகரன் பேட்டி

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தயாராக உள்ளது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அமமுகவினை பலப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளேன். மார்ச் 23 ஆம் தேதி வரை நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. 2 மாவட்டச் செயலாளர்கள் அதிமுகவுக்கு சென்றதால் அமமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதிமுக தவறானவர்கள் கையில் உள்ளது எனவும் கூறினார்.

JEE: தமிழக மாணவர்கள் விண்ணப்பிப்பதில் சிக்கல்; தெளிவுபடுத்திய தேசியத் தேர்வு முகமை!

2023-ம் ஆண்டிற்கான JEE Mains தேர்வு ஜனவரி மாதம் 24-31 தேதிகளில் நடைபெற இருக்கிறது. பொறியியல் படிப்புக்காகத் தேசிய அளவில் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வின் முதல்நிலையில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் அடுத்தகட்ட தேர்வான JEE Advanced-ஐ எழுதுவர். Advanced தேர்வுகள் ஏப்ரல் 6-12 வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி பெறும் மாணவர்கள் கலந்தாய்வின் மூலம் ஐ.ஐ.டி, என்.ஐ.டி போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் சேருவர். JEE JEE Mains நடைபெறும் அதே நாள்களில் சி.பி.எஸ்.இ … Read more

மான்செஸ்டரில் இருந்து ரொனால்டோ வெளியேறிய பிறகு…மகன் கிறிஸ்டியானோ ஜூனியர் எடுத்துள்ள முக்கிய முடிவு

மான்செஸ்டர் அணியில் இருந்து முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சமீபத்தில் விலகியதை தொடர்ந்து அவரது மகன் ஜூனியர் கிறிஸ்டியானோ-வும் Man Utd இளைஞர் அணியை விட்டு வெளியேறியுள்ளார். கிளப்பில் இருந்து விலகிய ரொனால்டோ கத்தார் 2022 உலக கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்னால் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பயிற்சியாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் கத்தார் … Read more

பொதுமக்கள் தனிமனித இடைவெளி, முகக்கவசம், கிருமிநாசினியை பயன்படுத்த வேண்டும்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: பொதுமக்கள் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவது, கிருமிநாசினியை மக்கள் பயன்படுத்த வேண்டும், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.   சீனாவில் இருந்து மதுரை வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் கூறினார். சென்னை சைதாப்பேட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சீனா, ஜப்பன், தென்கொரியா, ஹாங்காங், தைவான் போன்ற 5 நாடுகளில் இருந்து தமிழகம் … Read more