சேலம்: மகள்களை காவிரி ஆற்றில் வீசிவிட்டு, தம்பதி தற்கொலை – வீட்டில் கிடைத்த உருக்கமான கடிதம்

சேலம், தாதகாபட்டியை சேர்ந்தவர்கள் யுவராஜ் – மான்விழி தம்பதியினர். இவர்கள் சேலத்தில் உள்ள தனியார் டைல்ஸ் நிறுவனத்தில் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு நிதிஷா (7), அக்க்ஷரா (5) என்கிற இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் நிதிஷா கடந்த மூன்று ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தினமும் இன்சுலின் ஊசி செலுத்தி வந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்களது இரண்டாவது மகள் அக்க்ஷராவுக்கும் உடல் … Read more

நிருபரை மோசமான வார்த்தைகளால் விளாசிய டொனால்டு ட்ரம்ப்! ஒரே பதிவில் பதிலடி கொடுத்த பெண்

தன்னை விமர்சித்து கட்டுரை எழுதிய பெண் நிருபரை, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடுமையாக விளாசியுள்ளார். டிரம்ப் மீது விமர்சனம் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் உலகம் சுருங்கி விட்டதாக பெண் நிருபர் ஒலிவியா நுஸி, பல ஆதாரங்களை மேற்கோள் காட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ‘டிரம்ப்பின் உலகம் மிகச் சிறியதாக மாறிவிட்டது. இந்த நாட்களில் அவர் Mar-லாகோவை விட்டு வெளியேறவில்லை. அவர் வெளியே செல்வார், கோல்ஃப் விளையாடுகிறார், திரும்பி வருவார். மேலும் … Read more

நேபாளம், உத்தராகண்ட்டில் நிலநடுக்கம்

காத்மாண்டு: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று அதிகாலை 2 முறை அடுத்தடுத்து ரிக்டர் அளவுகோலில் முறையே 4.7, 5.3 என்ற அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடிவந்த நிலையில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் குறித்து அந்த மையம் கூறுகையில், ‛‛பக்லுங் மாவட்டம் ஆதிகாரி சவுர் பகுதியில் அதிகாலை 1.23 மணிக்கு முதலாவதாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 என்ற அளவில் பதிவானது. அதன்பிறகு பக்லுங் … Read more

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்

சென்னை: வடசென்னை அனல் மின் நிலைய 1வது நிலையின் 3வது அலகில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 25ம் தேதி ஏற்பட்ட கொதிகலன் கசிவு சரிசெய்யப்பட்டு மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

திடீரென பின்புறமாக தாக்கிய ஸ்பைடர் கமெரா! மைதானத்தில் நிலைதடுமாறி விழுந்த வீரரின் வீடியோ

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் நோர்ட்ஜெவை ஸ்பைடர் கமெரா பின்புறமாக தாக்கியது. நோர்ட்ஜெவை தாக்கிய கமெரா மெல்போர்ன் மைதானத்தில் அவுஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் 47வது ஓவரின் போது, தென் ஆப்பிரிக்க அணி வீரர் நோர்ட்ஜெ நடந்து செல்லும்போது எதிர்பாராத விதமாக ஸ்பைடர் கமெரா அவரது தோளில் தாக்கியது. திடீரென கமெரா தாக்கியதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக … Read more

புதுச்சேரி அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து என்பது மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. பிரெஞ்சு நிர்வாகத்தின் கீழ் இருந்த புதுச்சேரியை இந்திய அரசுடன் பிரதமராக ஜவஹர்லால் நேரு இருந்த போது இணைத்தார். 1963 ஆம் ஆண்டு சட்டம் அலுவல் விதிகள் அமல்படுத்தப்பட்டு புதுச்சேரி, காரைக்கால், மஹே மற்றும் ஏனாம் பகுதிகள் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள … Read more

காரைக்குடி அருகே போலீசாரின் வாகன தணிக்கையில் 15 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்

காரைக்குடி: காரைக்குடி அருகே மானகிரி பகுதியில் போலீசாரின் வாகன தணிக்கையில் 15 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காரில் 1.5 டன் குட்கா பொருட்களை கடத்தி வந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வணிக திருவிழா!| Business festival again after 12 years in Puducherry!

புதுச்சேரி: புதுச்சேரியில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு சுற்றுலாத்துறை மூலம் புதுச்சேரி வணிக திருவிழா–2023வரும் 5ம் தேதி துவங்குகிறது. புதுச்சேரி மாநில வரி வருவாய் சுற்றுலா துறையை நம்பியே உள்ளது. சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகள், வியாபாரம், ஓட்டல்கள், போக்குவரத்து மூலம் வரி வருவாய் உயர்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகையை அதிகரிக்க மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரியை சுற்றியுள்ள தமிழக பகுதி மக்கள் மற்றும் வெளிமாநில சுற்றுலா … Read more

புத்தாண்டு, பொங்கலுக்கு தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு கட்டண ரயில் (06041) தாம்பரத்திலிருந்து ஜனவரி 13-ம் தேதி இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.10-க்கு நாகர்கோவில் சென்றடையும். மறு மார்க்கத்தில் நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் (06042) ஜனவரி 16 அன்று நாகர்கோவிலிலிருந்து மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும். தெற்கு ரயில்வே இதேபோல் தாம்பரம் – திருநெல்வேலி சிறப்பு கட்டண … Read more

இங்கிலாந்து, பிரான்ஸ் வீரர்களின் கூட்டணி கோல்கள்..வெற்றி வாகை சூடிய மான்செஸ்டர் யுனைடெட்

இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரில் மான்செஸ்டர் அணி 3-0 என்ற கோல் கணக்கில் நாட்டிங்கம் ஃபாரெஸ்ட் அணியை வீழ்த்தியது. மிரட்டிய இங்கிலாந்து – பிரான்ஸ் வீரர்கள் ஓல்டு ட்ராஃபோர்டு மைதானத்தில் நடந்த போட்டியில் மான்செஸ்டர் மற்றும் நாட்டிங்கம் ஃபாரெஸ்ட் அணிகள் மோதின. ஆட்டத்தின் 19வது நிமிடத்தில் மான்செஸ்டரின் மார்க்கஸ் ராஷ்போர்ட் (இங்கிலாந்து) முதல் கோலை அடித்தார். அதனைத் தொடர்ந்து அடுத்த மூன்று நிமிடங்களிலேயே சக வீரர் அந்தோணி மார்ஷியல் (பிரான்ஸ்) ஒரு கோல் அடித்தார். இதனால் 2-0 … Read more