தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு முடிவு வெளியானது…

சென்னை: தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், தேர்ச்சி பெற்றவர்களிலிருந்து 18 ஆயிரம் பேர் அடுத்த கட்ட உடல் தகுதித் தேர்வுக்காக அழைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 2-ம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் என 3 ஆயிரத்து 552பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த நவம்பர் மாதம் 27-ம் தேதி  மிழகம் முழுவதும் 295 … Read more

சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனை..!!

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. அறிவிப்புகள், அரசாணைகள், திட்டங்கள் பற்றி அதிகாரிகள் உள்ளிட்டோருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசித்து வருகிறார்.

கோவிட் முன்னெச்சரிக்கை: நாடு முழுவதும் மருத்துவமனைகளில் அவசரகால ஒத்திகை| Covid precautions: mock drills in hospitals across the country

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: அதிகரித்துவரும் கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் அவசரகால ஒத்திகை நடத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஒத்திகையை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ‘பி.எப்., – 7’ வகை கோவிட் தொற்று பரவல் மீண்டும் உச்ச நிலையை எட்டி வருகிறது. இதனையடுத்து இந்தியாவில் கோவிட் தொற்று தடுப்பு நடவடிக்கையை கடைப்பிடிக்க அனைத்து … Read more

“எங்கள் முன்மொழிவுகளை உக்ரைன் ஏற்க வேண்டும்; இல்லையென்றால்…" – ரஷ்யா எச்சரிக்கை

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 300 நாள்களைக் கடந்திருக்கும் நேரத்தில், இந்தப் போரில் உக்ரைன், ரஷ்யா மட்டுமல்லாமல், உலக நாடுகள் பலவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. போரை நிறுத்த பலகட்ட முயற்சிகள் நடைபெற்றன. அதோடு பல்வேறு உலக நாடுகள் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்திவந்தன. இந்த நிலையில், ரஷ்ய செய்தியாளர்களிடம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், “ரஷ்யாவை பலவீனப்படுத்த அமெரிக்கா உக்ரைனை ஒரு போர்க்களமாகப் பயன்படுத்துகிறது. எங்கள் இலக்கு… இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர … Read more

102 குழந்தைகள் “போதும் இனி முடியாது”…12 மனைவிகளுக்கு வேண்டுகோள் விடுத்த கணவன்

உகாண்டாவின் முசா ஹசாஹ்யா(67) என்ற நபர் 102 குழந்தைகளுக்கு தந்தையான பிறகு தனது 12 மனைவிகளையும் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுமாறு  கேட்டுக் கொண்டுள்ளார். இனி குழந்தைகள் வேண்டாம்  உகாண்டாவின் புகிசாவில் மூசா ஹசாஹ்யா(67) என்ற நபர் தனது 12 மனைவிகளுடன் இணைந்து 102 குழந்தைகளை பெற்று எடுத்துள்ளார். இவருக்கு மொத்தம் 568 பேரக் குழந்தைகளும் தற்போது உள்ளனர்.  இந்நிலையில் தனது பெரிய குடும்பத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருவதால் மூசா ஹசாஹ்யா தன்னுடைய 12 மனைவிகளையும் கருத்தடை … Read more

ஜனவரி 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம்

சென்னை: ஜனவரி 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகிறது என சட்டப்பேரவை தலைவர்  அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில்  செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, 2023ம் ஆண்டின்  முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர்   வரும் ஜனவரி 9ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும்.  இந்த கூட்டத்தொடர், ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், முதல் நாளில் ஆளுநர் உரையாற்றுவார். ஆளுநர் உரை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.  கூட்டத்தொடர் நடக்கும் நாட்கள் … Read more

மக்களுக்கு அரசு சேவை விரைவாக கிடப்பதை உறுதி செய்ய பொதுசேவை உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி கோரிக்கை

சென்னை: மக்களுக்கு அரசு சேவை விரைவாக கிடப்பதை உறுதி செய்ய பொதுசேவை உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மக்களுக்கு அரசின் சேவை தாமதமின்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு மாதத்தில் வழங்க முதல்வர் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என அவர் தெரிவித்தார்.

சரிந்து விழுந்த ராட்சத பாறை… கல்குவாரி விபத்தில் சிக்கி இருவர் பலியான சோகம்!

தமிழக – கர்நாடக எல்லையில் உள்ள ஈரோடு மாவட்டம் தாளவாடியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது, கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டத்துக்கு உள்பட்ட பிசிலவாடி கிராமம். இப்பகுதியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்தக் குவாரியில் இருந்து வெடிபொருள்களை பயன்படுத்தியும், மெகா கல்உடைப்பு இயந்திரங்கள் மூலமாக எடுக்கப்படும் பாறைகளை பயன்படுத்தி கட்டடங்கள், சாலை அமைக்கத் தேவையான ஜல்லி, எம்.சாண்ட் போன்ற கட்டுமான பொருள்களை தயாரித்து விற்பனை செய்கின்றனர்.   இந்த கல்குவாரியில் நேற்று … Read more

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்! தமிழகஅரசு அறிவிப்பு…

சென்னை: அரசு ஊழியர்களுக்கு தமிழகஅரசு  பொங்கல் போனஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் (பரிசுத் தொகை) அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில், “அரசின் நலத்திட்டங்களுக்கு அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஒய்வூதியர்கள் மற்றும் குடும்ப மிகை ஊதியம், பொங்கல் பரிசு வழங்கிட முதமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் சி மற்றும் டி பிரிவை சேர்ந்த அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3000 … Read more

வேலூர் திருவலம் அருகே சரக்கு ரயில் பழுதாகி நின்றதால் பெங்களூர் சென்னை செல்லும் பயணிகள் ரயில் தாமதம்

வேலூர்: திருவலம் அருகே சரக்கு ரயில் பழுதாகி நின்றதால் பெங்களூர் சென்னை செல்லும் பயணிகள் ரயில் தாமதமானது. சரக்கு ரயிலில் பெட்டிகளை இணைக்கக்கூடிய கப்ளிங் உடைந்ததால் அதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஜோலார்பேட்டை – அரக்கோணம் விரைவு ரயில் தாமதமானதால் பயணிகள் உறங்கி பேருந்தில் செல்கின்றனர்.