தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி. தென்காசி, திருப்பூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'கண்ணாடித் துண்டுகளுடன் கட்டு' – தொழிலாளிக்கு அரசு மருத்துவமனையில் நேர்ந்த அவலம்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த மூலப்பள்ளிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி(63). இவர், கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முந்தினம் பெரியசாமி தனது வீட்டு அருகாமையில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று, ரேஷன் பொருள்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பி கொண்டு இருந்துள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த கார் ஒன்று பெரியசாமி ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், நிலைதடுமாறி பெரியசாமி கீழே விழுந்தால், அவரின் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர், அருகே … Read more

புடினை விமர்சித்த கோடீஸ்வர ரஷ்ய எம்.பி. இந்தியாவில் மர்ம மரணம்

புடினின் உக்ரைன் போரை விமர்சித்த ரஷ்யாவின் பணக்கார எம்.பி. இந்தியாவில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் பணக்கார எம்.பி.களில் ஒருவரும், அதிபர் விளாடிமிர் புட்டினின் தீவிர விமர்சகருமான பாவெல் அன்டோவ் (Pavel Antov), இந்தியாவின் கிழக்கு ஒடிசா மாநிலத்தில் உள்ள ஹோட்டலில் இருந்து மர்மமான முறையில் விழுந்து இறந்து கிடந்தார். கோடீஸ்வரர் மர்ம மரணம் கோடீஸ்வரர் பாவெல் அன்டோவ் தனது 66-வது பிறந்த நாளைக் கொண்டாட ஒடிசாவின் Rayagada பகுதியில் விடுமுறையில் இருந்தார். Reprodução அவர் … Read more

உலகளவில் 66.20 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 66.20 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 66.20 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 66.86 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 63.46 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிச.27 : பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

 தங்க அங்கி அணிவித்து தீபாராதனை :இன்று மண்டல பூஜை| Deeparathana dressed in golden robes: Mandal Puja today

சபரிமலை :சபரிமலையில் நேற்று மாலை மூலவருக்கு தங்கஅங்கி அணிவித்து தீபாராதனை நடைபெற்றது. இன்று மதியும் 12:30 மணிக்கு மண்டலபூஜை நடைபெறுகிறது. சபரிமலையில் நவ., 17ல் தொடங்கி 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜைகளின் நிறைவாக நடைபெறுவது மண்டலபூஜை. இன்று மண்டல பூஜை நடக்கிறது. இன்று மூலவருக்கு அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய தங்கஅங்கி டிச.,23ல் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்டது. நேற்று மதியம் இது பம்பை வந்தடைந்தது. கணபதி கோயில் அருகே … Read more

இந்த வார ராசிபலன்: டிசம்பர் 27 முதல் ஜனவரி 1 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

ஜேர்மன், கனேடிய மக்களுக்கு விசா தொடர்பில் இந்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு

ஜேர்மன் குடிமக்கள் இனி இந்திய விசாவிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. ஜேர்மன் குடிமக்களுக்கு ஆன்லைனில் இந்திய விசா ஜேர்மன் குடிமக்கள் இப்போது இந்தியாவிற்குள் நுழைவதற்கு மின்னணு பயண அங்கீகாரத்திற்கு (ETA) விண்ணப்பிக்க முடியும் என்று இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இது ஜேர்மனியிலிருந்து இந்தியாவிற்கு வரும் வணிக மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இது ஒரு நல்ல செய்தியாகும், ஏனெனில் இது விசாவிற்கு விண்ணப்பிக்கும் செயல்முறையை மிகவும் எளிதாக்கும். ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை இந்திய உள்துறை … Read more

வேலாயுத சுவாமி திருக்கோயில், திண்டல்மலை

வேலாயுத சுவாமி திருக்கோயில், ஈரோடு மாவட்டம், திண்டல்மலையில் அமைந்துள்ளது. ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ., தொலைவில் திண்டல் மலை அமைந்துள்ளது. 60 மீட்டர் உயரத்தில் மரங்கள் நிறைந்து காணப்படுகிறது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில், திண்டல்மலை வேலாயுத சுவாமி கோயிலும் ஒன்று. இவர் குழந்தை வேலாயுத சுவாமி, குமார வேலாயுத சுவாமி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். இங்கு அமைந்துள்ள இடும்பனாருக்கு ஒரு சிறப்பு உள்ளது. பூந்துறை நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,686,858 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.86 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,686,858 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 662,042,509 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 634,640,584 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 38,886 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.