வாடகை காரில் வழிமறித்து ரூ.68 லட்சம் அபேஸ்; நகைக்கடை ஊழியர்களிடம் கொள்ளையடித்த போலி ஐ.டி ஆபீசர்ஸ்!
ஆந்திர மாநிலம், குண்டூர், வங்காவாரி தெருவைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (42). இவர், குண்டூர் பகுதியில் நகைக்கடை நடத்திவருகிறார். அதனால், தன்னுடைய கடைக்குத் தேவையான நகைகளை மொத்தமாக சென்னை சௌகார்பேட்டையில் வாங்குவதை விஸ்வநாதன் வழக்கமாக வைத்திருந்தார். நகைகளை வாங்க கடந்த 15-ம் தேதி கடையில் வேலைப்பார்க்கும் அலிகான், சுகானி ஆகியோரிடம் 68 லட்சம் ரூபாயை கொடுத்து தங்கநகைகளை வாங்க சென்னைக்கு பேருந்தில் அனுப்பி வைத்தார் விஸ்வநாதன். அதன்படி இருவரும் 16-ம் தேதி காலை 5:30 மணியளவில் சென்னைக்கு வந்தனர். … Read more