வீட்டின் கிறிஸ்துமஸ் மரத்தை உற்று பார்த்த குடும்பத்தாருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி! புகைப்படம்

தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரத்திற்குள் கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒளிந்திருந்ததை கண்டு குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர். விஷப்பாம்பு அதன்படி கிறிஸ்துமஸ் மரத்திற்குள் ஆறரை அடி கொண்ட மம்பா கருப்பு நிற கொடிய விஷப் பாம்பு இருப்பதை கண்டு குடும்பத்தார் அலறினர். இதையடுத்து பாம்பு பிடிப்பதில் வல்லவரான நிக் ஈவன்ஸ் அங்கு வரவழைக்கப்பட்டார். பின்னர் லாவகமாக அவர் பாம்பை பிடித்தார். கிறிஸ்துமஸ் மரத்தின்… பின்னர் நிக் கூறுகையில், சாண்டா எனக்கு கிறிஸ்துமஸ் பரிசை அளித்துள்ளார், … Read more

ராகுல் பேசுவது கோட்சேவின் வாரிசுகளுக்கு கசக்கத்தான் செய்யும்! கோபன்னாவின் புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை: நேருவின் வாரிசு  ராகுல் பேசுவது  கோட்சேவின் வாரிசுகளுக்கு கசக்கத்தான் செய்யும் என காங்கிரஸ் துணைத்தலைவர் கோபன்னாவின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவரும், ஊடகத் துறைத் தலைவருமான ஆ.கோபண்ணா எழுதிய மாமனிதர் நேரு – அரிய புகைப்பட வரலாறு என்ற நூல் நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில், கோபண்ணாவின் பேத்தி ஆதியா, முதல்வரிடம் நூலைக் கொடுத்தார். தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நூலை வெளியிட, … Read more

பழனி அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதிய விபத்தில் பலி 2ஆக உயர்வு

திண்டுக்கல்: பழனி அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது. பக்தர்கள் மீது கார் மோதியதில் காயமடைந்த 5 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரியாயி என்பவர் உயிரிழந்தார்.

எழும்பூர் ரயில் நிலையம் மறுசீரமைப்பு – ரூ.734.91 கோடி மதிப்பில் பணிகள் தொடக்கம்!

சென்னை எழும்பூர் ரயில் நிலைய கட்டடம் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தொன்மை வாய்ந்ததாகும். 144 ஆண்டுகள் கடந்தும் எழில் வனப்புடன் விளங்குகிறது. நாள்தோறும் 562 ரயில்கள் கையாளப்படுகின்றன. முக்கியமான நேரங்களில் ஒரே நேரத்தில் 24,600 பயணிகள் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்துகின்றனர். இங்கு பயணிகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் மறு சீரமைப்பு செய்யப்பட இருக்கிறது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூபாய் 734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் செய்ய ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் … Read more

திருமழிசை பேருந்து நிலையம் விமான நிலையம்போல நவீன வசதிகள் மற்றும் பரந்தூர் வரை மெட்ரோ ரயில் இயக்க திட்டம்!

சென்னை: கட்டப்பட்டு வரும் திருமழிசை குத்தம்பாக்கம் பேருந்து நிலையம், விமான நிலையம் போலே ஏசி, ஃபுட்கோர்ட், எஸ்கலேட்டர், வைஃபை உள்பட நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருவதாகவும், அங்கிருந்து சென்னை நகரம் மற்றும் புதிதாக அமையவுள்ள  பரந்தூர் விமான நிலையம்  வரை மெட்ரோ ரயில் சேவை அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சென்னை புறநகர் பகுதியான திருமழிசை அருகே குந்தம்பாக்கத்தில் தமிழகஅரசு சார்பில் புறநகர் பேருந்து நிலையில், பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து … Read more

சென்னை ஆவடி அருகே சிலிண்டர் விபத்தில் உயிரிழந்தோர்எண்ணிக்கை 3ஆக உயர்வு

சென்னை: சென்னை ஆவடி அருகே சிலிண்டர் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. கடந்த 19ம் தேதி சிலிண்டர் வெடித்த விபத்தில் பாட்டி ரோஜா, பேத்தி கீர்த்தி ஏற்கெனவே உயிரிழந்த நிலையில் விபத்தில் சிகிச்சை பெற்றுவந்த சங்கர் ராஜ் உயிரிழந்தார். இதனால் சிலிண்டர் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

தமிழ் புத்தக திருவிழா கோலாகலமாக ஆரம்பம்: புத்தகங்களை வாங்கி குவித்த தமிழ் ஆர்வலர்கள் | Tamil Book Festival kicks off with a bang: Tamil enthusiasts flock to buy books

பெங்களூரு: எட்டு நாட்களுக்கான தமிழ் புத்தக திருவிழா கோலாகலமாக துவங்கியது. முதல் நாளிலேயே தமிழ் ஆர்வலர்கள் ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கி குவித்தனர். கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம், கர்நாடக தமிழ் பள்ளி மற்றும் கல்லுாரி ஆசிரியர் சங்கம் இணைந்து, பெங்களூரு தமிழ் சங்கத்தில் தமிழ் புத்தக திருவிழா ஏற்பாடு செய்துள்ளது.இதன் துவக்க விழா நேற்று மாலை நடந்தது. முதலில் தமிழ் மொழி பாடலை, தமிழ் ஆர்வலர் ஒளி மலரவன் பாடினார். பெங்களூரு விவேக்நகரின் கனிமொழி, பரதநாட்டியம் ஆடி … Read more

பசியால் வாடும் 8 குழந்தைகள்: நண்பருக்கு உதவ சென்று தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்

வெனிசுலாவில் நண்பர் ஒருவருக்கு உதவ முயன்று தனது நான்கு கை கால்களையும் இழந்த தந்தை எல்விஸ் சனாப்ரியா, தனது 8 குழந்தைகளும் இப்போது உணவு வழங்க முடியாத இக்கட்டான நிலையில் இருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார். கை கால்களை இழந்த தந்தை தென் அமெரிக்காவின் வெனிசுலா நகரில் வசித்து வரும் எல்விஸ் சனாப்ரியா(48) என்ற தந்தை, தனது எட்டுக் குழந்தைகளும் பசியால் வாடுவதாக வருத்தம் தெரிவித்துள்ளார். எல்விஸ், நாட்டின் உயரமான கட்டிடங்கள் பலவற்றில் கண்ணாடி முகப்புகளை நிறுவும் பணியை … Read more

சீனாவும், பாகிஸ்தானும் இணைந்து இந்தியாவை தாக்கும்! டெல்லி யாத்திரையில் ராகுல் பரபரப்பு தகவல்…

டெல்லி: சீனாவும், பாகிஸ்தானும் இணைந்து இந்தியாவை தாக்கும் அபாயம் உள்ளது  என டெல்லியில் நடைபெற்ற  யாத்திரை பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கூறினார். இது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. அவரது யாத்திரையின்போது, அவ்வப்போது மத்தியஅரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து வருவதுடன், சீனா, பாகிஸ்தான் குறித்தும் பரபரப்பு தகவல்களை பேசி வருகிறார்.இந்த நிலையில், தற்போது,  ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரை இன்று 109வது நாளை எட்டி உள்ளது. 109-வது நாளை … Read more