சோழவரம் ஏரியின் நீர்வரத்து இன்று 200 கனஅடியாக சரிவு
திருவள்ளூர்: சோழவரம் ஏரிக்கு நேற்று 1109 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 200 கனஅடியாக சரிந்துள்ளது. 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 813 மில்லியன் கனஅடியாக உள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
திருவள்ளூர்: சோழவரம் ஏரிக்கு நேற்று 1109 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 200 கனஅடியாக சரிந்துள்ளது. 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 813 மில்லியன் கனஅடியாக உள்ளது.
சபரிமலை: கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பனை தரிசிக்க, இந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டதால், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த சீசனில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அதிகளவில் வருகின்றனர். இந்தாண்டு வராவிட்டால் அடுத்து 50 வயதுக்கு பின் தான் சபரிமலையில் வரமுடியும் என்பதால், பத்து வயதை தொடும் நிலையில் உள்ள சிறுமியரும் அதிகம் வருகின்றனர். இந்நிலையில், தேவசம்போர்டு கணக்கு வழக்கில்லாமல் முன்பதிவை அனுமதிக்கிறது. ‘ஸ்பாட் புக்கிங்’ என்ற பெயரிலும் தினமும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு முன்பதிவு வழங்குகிறது. … Read more
கார்த்திகை மாதம் ஐயப்பனுக்கு உகந்த மாதம். நவம்பர் 16-ஆம் தேதி கார்த்திகை பிறந்தது. இதையடுத்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்லும் விதமாக பலரும் 48 நாட்கள் நோன்பு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நாட்களில் பெரும்பாலும் ஐயப்பனுக்கு பஜனைகள் பாடப்படும். வழக்கமாக பாடப்படும் ஐயப்ப பாடல்களையும் அவற்றின் பொருளையும் பின்வருமாறு காணலாம். ஸ்ரீஐயப்பன் 1) “ஹரிவராசனம் விஸ்வமோகனம் ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம் அரிவிமர்த்தனம் நித்யநர்த்தனம் ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே” இந்த பாடல் “சாஸ்தா ஸ்துதி கதம்பம் ” என்னும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. … Read more
சென்னை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவள்ளூர்: புழல் ஏரிக்கு நேற்று 981 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 611 கனஅடியாக சரிந்துள்ளது. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 2745 மில்லியன் கனஅடியாக உள்ளது.
புதுடில்லி : உச்ச நீதிமன்றத்தின், ‘கொலீஜியத்தில்’ ஆறாவது உறுப்பினராக நீதிபதி சஞ்சிவ் கன்னா சேர்க்கப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவது குறித்து கொலீஜியம் நேற்று ஆய்வு செய்தது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் முடிவு செய்யும். கொலீஜியத்தின் இந்த பரிந்துரை மீது மத்திய அரசு ஆலோசனை நடத்தி, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பும். ஜனாதிபதியே நீதிபதிகளை நியமிப்பார். … Read more
தமிழக ஆளுநரை விமர்சித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திருச்சி தேசியக் கல்லூரியில் நடந்த முப்பெரும் விழாவில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, சுதந்திரப் போராட்ட வரலாற்றை மக்களை மையப்படுத்தி திருத்தி எழுதப்பட வேண்டும். மகாத்மா காந்தி மட்டுமின்றி பல்வேறு தலைவர்களுடைய பங்களிப்பை அனைவரும் தெரிந்து கொள்கிற வகையில் பதிவு செய்யப்பட வேண்டும், வரலாற்றில் அகிம்சை போராட்டம் தான் அதிக அளவில் பதிவாகியுள்ளது. ஆயுதப் போராட்டங்கள் அதிகம் பதிவாகவில்லை என்று உரையாற்றி வரலாற்று திரிபுவாதம் … Read more
ஈரானில் பெண்கள் உரிமைக்கான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதற்காக பிரபல கால்பந்து நட்சத்திரத்திற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கால்பந்து நட்சத்திரம் Amir Nasr-Azadani குறித்த தகவலை, உலகெங்கிலும் உள்ள சுமார் 65,000 கால்பந்து நட்சத்திரங்கள் உறுப்பினர்களாக கொண்ட FIFPRO என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. ஈரானின் பிரபல கால்பந்து நட்சத்திரமான Amir Nasr-Azadani என்பவரே தற்போது மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். @instagram குறித்த தகவலை அறிந்து FIFPRO அமைப்பு நிர்வாகம் அதிர்ச்சியும் ஆத்திரமும் கொண்டதாக குறிப்பிட்டுள்ளது. ஈரானில் … Read more
கத்தார்: உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிச் சுற்றுக்கு முதல் அணியாக அர்ஜெண்டினா முன்னேறியது. 22வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முதல் அரையிறுதி போட்டி நேற்று லுசைல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த அரையிறுதி போட்டியில் முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினா மற்றும் குரோஷியா மோதியது. இதன்படி பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி போட்டியின் 34-வது நிமிடத்தில் தனது அணிக்கான முதல் கோலை … Read more
சிவகங்கை: திருப்புத்தூரில் மீன் சந்தையில் உணவு பாதுகாப்புத்துறை நடத்திய சோதனையில் 300 கிலோ தரமற்ற மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பார்மலின் ரசாயனம் தடவி மீன்கள் விற்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து உணவுப் பாதுகாப்புத்துறை ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது மீன் வியாபாரிகள் உணவு பாதுகாப்பு உரிமம், தர நிர்ணய சான்று பெறாததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.