இந்தியாவுக்கு ஏற்ற பேட்டரி ஹீரோ எலக்ட்ரிக் அறிமுகம்| Dinamalar

புதுடில்லி ‘ஹீரோ எலக்ட்ரிக்’ நிறுவனம், ‘பேட்ரிக்ஸ்’ எனும் ‘பேட்டரி பேக்’ தயாரிப்பு நிறுவனத்துடன் ஒன்றிணைந்து, மிகவும் பாதுகாப்பான, புதிய பேட்டரி பேக்கை தயாரித்து வெளியிட்டுள்ளது. சிறப்பான பேட்டரி மேலாண்மை திறன், அதிநவீன ‘ஐ.பி., 67’ வெப்ப பாதுகாப்பு கொண்ட இந்த பேட்டரி பேக், ‘ஏ.ஐ.எஸ்., 156’ விதிமுறைக்கேற்ப, பாதுகாப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரிகள், அனைத்து ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் பயன்படுத்தப்பட உள்ளன. அடுத்த ஓராண்டில், 3 லட்சம் பேட்டரிகளை தயாரிக்க இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஹீரோ … Read more

25.11.22 வெள்ளிக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | November – 25 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

கத்தார் உலகக்கோப்பையில் முன்னாள் சாம்பியனை திணறடித்த தென் கொரியா!

உருகுவே மற்றும் தென் கொரியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கால்பந்து போட்டி டிராவில் முடிந்தது. முன்னாள் சாம்பியன் கத்தாரின் Education City மைதானத்தில் நடந்த போட்டியில் முன்னாள் சாம்பியனான உருகுவே அணியும், தென் கொரிய அணியும் மோதின. சம பலத்துடன் இரு அணிகளும் மோதியதில் முதல் பாதி கோல் இன்றி முடிந்தது. அதேபோல் இரண்டாம் பாதியில் உருகுவே அணி எடுத்த கோல் முயற்சிகளுக்கு தென் கொரியா முட்டுக்கட்டை போட்டது. @Reuters இறுதிவரை இரண்டு அணிகளும் கோல் அடிக்காததால் … Read more

சுடுகாட்டில் பிறந்த நாள் கொண்டாடிய மஹா., நபர்

தானே, :சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைகளை களைவதற்காக, மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு நபர் சுடுகாட்டில் ‘கேக்’ வெட்டி தன் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இது குறித்த ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தைச் சேர்ந்தவர் கவுதம் ரத்தன், 54. இவர், கடந்த 19ம் தேதி தன் பிறந்த பிறந்த நாளை சுடுகாட்டில் வைத்து விமரிசையாக கொண்டாடியுள்ளார். இந்த விழாவில், 40 குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ‘கேக்’ … Read more

பழங்குடி மாணவியின் நர்ஸிங் கனவு; நிறைவேற்றிய திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலையில்  கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் வெள்ளக்கவி ஊராட்சிக்கு உள்பட்ட சின்னூர் பழங்குடி கிராமம்  உள்ளது. எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத சூழலிலும், இங்கு வசிக்கும் மாணவி மகாலட்சுமி ப்ளஸ் டூ முடித்த பின்னர் பி.எஸ்சி நர்ஸிங் படிக்க விரும்பியுள்ளார். கவுன்சலிங்கில், அவருக்குத் தனியார் கல்லூரி கிடைக்க, கட்டணம் செலுத்த முடியாத நிலையில் படிப்பை கைவிட்டுள்ளார். இது குறித்து விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இதையறிந்த திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி, மாணவியின் கல்விக்கான செலவை … Read more

சண்டை நிறுத்துங்கள் அல்லது அழிவை சந்திப்பீர்கள்: உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடு ஒன்று எச்சரிக்கை

உக்ரைன் சண்டை நிறுத்த வேண்டும் அல்லது மிகப் பெரிய அழிவை எதிர்நோக்கும் என்று பெலாரஸ் நாட்டின் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் போரில் பெலாரஸ் ஐரோப்பிய நாடான பெலாரஸ் ரஷ்யாவின் மிக நெருங்கிய நட்பு நாடாக திகழ்ந்து வருவதுடன், உக்ரைன் மீதான ரஷ்ய போரை ஆரம்பம் முதலே பெலாரஸ் ஆதரித்து வருகிறது. அத்துடன் போரின் தொடக்க நாட்களில் பெலாரஸ் நாட்டின் எல்லை வழியாக உக்ரைனுக்குள் நுழைந்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தினர். soldier of Ukraine … Read more

உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2022: கேமரூன் அணியை 1-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்து அணி வெற்றி!

அல்-வக்ரா  : உலகக்கோப்பை கால்பந்து 2022  தொடரின் 13வது போட்டியில் குரூப் ஜி பிரிவில் சுவிட்சர்லாந்து மற்றும் கேமரூன் அணிகள் மோதின. அல்-வக்ரா பகுதியில் அல் ஜனாப் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 1-0 என்ற கணக்கில் கேமரூன் அணியை சுவிட்சர்லாந்து அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

கோகுல்ராஜ் கொலை வழக்கு: `பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை ஆஜர்படுத்த வேண்டும்!' – நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நாமக்கல் மாவட்டத்தில் நடந்த கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில், மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை அளித்தும், சாகும் வரை சிறையில் இருக்கவும் தீர்ப்பளித்தது. மதுரை உயர் நீதிமன்றக் கிளை இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உள்ளிட்டவர்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் 5 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜின் … Read more

உக்ரைன் நாடே இருளுக்குள் மூழ்கி சிக்கி தவிப்பு: அதிர்ச்சியூட்டும் நாசா செயற்கைக்கோள் புகைப்படங்கள்

மின் சக்தி நிலையங்கள் மீது ரஷ்யாவின் தொடர் ஏவுகணை தாக்குதல்கள் எந்த அளவிற்கு உக்ரைனை இருட்டுக்குள் தள்ளியுள்ளது என்பதை நாசாவின் செயற்கைக்கோள் புகைப்படங்கள் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. உக்ரைனின் சக்தி நிலையங்கள் மீது குறி கடந்த பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 9 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷ்ய படைகளின் மன சோர்வு மற்றும் உக்ரைனிய படைகளின் பதில் தாக்குதல் ஆகியவற்றால் போரின் ஆரம்ப நாட்களில் ரஷ்ய … Read more

உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2022: கானா அணியை வீழ்த்தியது போர்ச்சுகல் அணி..!

உலகக்கோப்பை கால்பந்து 2022  தொடரின் 15 வது போட்டியில் குரூப் H பிரிவில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கேப்டனாக உள்ள போர்ச்சுகல் அணியும்,   கானா அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் கானா அணியை 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணிவீழ்த்தியது.