தடுத்த போலீசை 4 கி.மீ., இழுத்து சென்ற டிரைவர் கைது| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இந்தூர்: ம.பி.,யில் மொபைல்போன் பேசியபடி வந்த கார் டிரைவருக்கு போலீஸ் ஒருவர் அபராதம் விதித்தார். ஆனால், அதனை செலுத்தாமல் கிளம்பிய போது, தடுத்த போலீசை 4 கி.மீ., தூரம் காரின் முன்பக்கத்தில் வைத்து இழுத்து சென்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சத்ய சாய் சதுக்கம் பகுதியில் சிவ் சிங் சவுகான்(50) என்ற போக்குவரத்து போலீஸ் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த வழியாக , டிரைவர் … Read more

திருக்கடையூரில் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் தரிசனம்!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதின பரிபாலனத்திலுள்ள , தேவாரப்  பாடல்பெற்ற  ஸ்ரீஅபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. மார்க்கண்டேயனுக்காக சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால் இது அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.  இக் கோயிலில் 60, 70, 80, 90, 100 வயதை எட்டியவர்கள் சிறப்பு ஹோமங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடக்கும் என்பது ஐதிகம்.  திருக்கடையூரில் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் தரிசனம் … Read more

நித்யானந்தாவுக்கு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விருந்தா? பரபரப்பை கிளப்பிய தகவல்

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் மேல் சபையில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்திற்கு இந்திய அரசால் தேடப்பட்டு வரும் சாமியார் நித்யானந்தா அழைக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நித்யானந்தாவிற்கு அழைப்பு பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரபல சாமியார் நித்யானந்தா கடந்த 2019 ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பியோடினார். அவரை சிறைப்பிடிக்க இந்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது, இதற்கிடையில் இணையத்தின் வாயிலாக அவ்வப்போது தோன்றும் நித்யானந்தா, “கைலாசா தீவு” என்ற உலகிலேயே தூய்மையான … Read more

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – இயல்பை விட 2% கூடுதலாக வடகிழக்கு பருவமழை! வானிலை மையம் தகவல்..

சென்னை: அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என தெரிவித்துள்ள வானிலை மையம் இயக்குநர் பாலச்சந்திரன்,   தமிழ்நாட்டில் அக்டோபர் 1 முதல் இதுவரை வடகிழக்கு பருவமழை இயல்பை விட 2% கூடுதலாக பெய்துள்ளது என  தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை  நடப்பாண்டு, வடகிழக்கு பருவமழை இயல்பை விட 2% கூடுதலாக பெய்துள்ளத. இயல்பு அளவான 404 மி.மீ.-க்கு பதில் 412 மி.மீ. பெய்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 63% அதிகமாக பெய்துள்ளது என … Read more

அரியலூர், பெரம்பலூர், செங்கல்பட்டு மாவட்ட மக்கள் இயக்க நிர்வாகிகள் உடன் நடிகர் விஜய் ஆலோசனை..!!

சென்னை: அரியலூர், பெரம்பலூர், செங்கல்பட்டு மாவட்ட மக்கள் இயக்க நிர்வாகிகள் உடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை அருகே பனையூர் அலுவலகத்தில் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சீன வீரர்களுடன் மோதல்: இந்திய வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை: ராஜ்நாத்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: அருணாச்சல பிரதேசம் தவாங் செக்டார் பகுதியில் சீன வீரர்களுடன் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. யாரும் படுகாயம் அடையவில்லை என லோக்சபாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதியில் சீன வீரர்களுடன் நடந்த மோதல் தொடர்பாக லோக்சபாவில் ராஜ்நாத் சிங் அளித்த விளக்கம்: கடந்த 9 ம் தேதி தவாங் செக்டாரில் உள்ள யங்ஸ்டே பகுதியை சீன … Read more

மழை, மக்கள் நல்வாழ்வு வேண்டி இருக்கன்குடி மாரியம்மனுக்கு சங்காபிஷேகம்; திரளான பக்தர்கள் தரிசனம்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் ஆன்மிகத் தலங்களில் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில், கார்த்திகை மாதத்தின் கடைசி சோமவார தினத்தையொட்டி அம்மனுக்கு சங்கு அபிஷேகம் சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது. சங்காபிஷேகம் கார்த்திகை கடைசி சோமவார தினத்தையொட்டி இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நெல்லையைச் சேர்ந்த ஓதுவார் குழுவினர் தலைமையில் யாகசாலை பூஜையுடன் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், மக்கள் நல்வாழ்விற்காகவும் சிறப்பு மகாஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்குப் பால், பன்னீர், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், … Read more

ஒரே நேரத்தில் இரண்டு மனைவிகளும் கர்ப்பம்..இணையத்தில் பதிவிட்ட யூடியூபர்

ஒரே நேரத்தில் இரண்டு மனைவிகளும் கர்ப்பம்..இணையத்தில் பதிவிட்ட யூடியூபர் Source link

மூன்றாம் கட்ட நகர்ப்புற உட்கட்டமைப்பிற்கான நிதியுதவி குறித்து ஜெர்மன் மேம்பாட்டு வங்கியுடன் முதலமைச்சர் முன்னிலையில் தமிழகஅரசு ஒப்பந்தம்!

சென்னை:  மூன்றாம் கட்ட நீடித்த நகர்ப்புற உட்கட்டமைப்பிற்கான நிதியுதவி குறித்து ஜெர்மன் மேம்பாட்டு வங்கியுடன் முதலமைச்சர் முன்னிலையில் தமிழகஅரசு ஒப்பந்தம் பரிமாற்றப்பட்டது. ஜெர்மன் மேம்பாட்டு வங்கியின் 500 மில்லியன் யூரோ நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் மூன்றாம் கட்ட நீடித்த நகர்ப்புற உட்கட்டமைப்பிற்கான நிதியுதவி – தமிழ்நாடு திட்டத்திற் கான ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் பரிமாற்றம் செய்யப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஜெர்மன் … Read more

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சிப்பதற்கு டிடிவி தினகரன் கண்டனம்..!!

சென்னை: முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பை பொருட்படுத்தாமல் ஒரு மாநில அரசு இப்படி நடந்துகொள்வது இறையாண்மைக்கு சவாலாக அமைந்துவிடும். எக்காரணம் கொண்டும் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டப்படுவதை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.