எல்லையில் வாலாட்டிய சீன ராணுவம் – விரட்டி அடித்த இந்திய ராணுவம்…!

இட்டாநகர், லடாக் எல்லை உள்ளிட்ட இந்திய எல்லைகளில் சீனா தொடர்ந்து வாலாட்டி வருகிறது. இந்திய எல்லைப் பகுதிகளில் சீனா கிராமங்களை நவீன வசதிகளுடன் கட்டமைத்து குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் இத்தகைய நடவடிக்கைகளால் எல்லைகளில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இந்தப் பதற்றத்தை தணிக்க பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளை இருதரப்பும் மேற்கொண்டு வருகிறது. இந்தியா- சீனா ராணுவ தளபதிகளுக்கிடையே இதுவரை 16 சுற்றுக்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. பேச்சுவார்த்தையின் போது பிரச்சினைகளுக்கு பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை உருவாக்கவும் இருதரப்பும் … Read more

"சென்னையில் மழைநீர் தேங்காததற்கு அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளே காரணம்!"- கே.சி.கருப்பணன்

பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்காலின் இரண்டு கரைகளிலும் கடந்த சனிக்கிழமை  உடைப்பு ஏற்பட்டது. வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் சீரமைப்பு பணிகள் இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகளை முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ-வுமான கே.சி.கருப்பணன் இன்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “கடந்த அ.தி.மு.க ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, கீழ்பவானி வாய்க்காலை சீரமைக்கும் திட்டத்தை தொடங்கியது. இந்தப் பணிகளுக்கு அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்கூட ஆதரவு தெரிவித்தார். கொரோனா பரவல் காரணமாக பணிகள் நடைபெறவில்லை. … Read more

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு வாபஸ்!

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற  உத்தரவைத் தொடர்ந்து தனியார் பால் நிறுவனங்கள் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடர்ந்த  வழக்கை திரும்ப பெற்றன. கடந்த அதிமுக ஆட்சியில்  பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு செய்தியளார்களிடம் பேசும்போது, தனியார் பால் நிறுவனங் களின் பால் தரம் குறைந்த என விமர்சனம் செய்திருந்தார்.  இதையடுத்து ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தலா ஒரு கோடி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று … Read more

புதுச்சேரி நகராட்சி பகுதியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிக்கு முன் அனுமதி பெற வேண்டும்: நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி பகுதியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிக்கு முன் அனுமதி பெற வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. நட்சத்திர விடுதிகள் உள்ளிட்டவற்றில் கேளிக்கை நீலகேசி நடத்த 7 நாட்களுக்கு முன் அனுமதி பெறவேண்டும். புதுச்சேரி நகராட்சிக்கு 7 நாட்களுக்கு முன்பு விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.

புயல் காரணமாக திருப்பதியில் 189 பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பல லட்சம் நஷ்டம்

திருப்பதி, மாண்டஸ் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பதியில் இருந்து நெல்லூர், விஜயவாடா, குண்டூர், ஐதராபாத் மற்றும் திருமலைக்கு செல்லும் ஆந்திர மாநில அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டது. நேற்று முன்தினம் 101 பஸ்களும், நேற்று 88 பஸ்களும் நிறுத்தப்பட்டது. இதனால் 66,150 கி.மீ. இயக்கப்பட வேண்டிய பஸ்கள் நிறுத்தப்பட்டதால் ரூ.35 லட்சம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு இழப்பு ஏற்பட்டதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தினத்தந்தி Related Tags : திருப்பதி பஸ்கள் Tirupati Buses

“முதல்வர் அடாவடியாகச் செயல்படாமல், விவசாயிகளின் கருத்துகளைக் கேட்க வேண்டும்!” – டிடிவி.தினகரன்

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு, கண்டியூர் அருகே நடவு செய்யபட்ட வயலில் நெல் உள்ளிட்ட பயிர்களை அழித்து திருவையாறு புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து சாலை பணி தற்காலிகமாக நிறுத்தபட்டது. பின்னர் ஆர்.சி.ஓ தலைமையில் விவசாயிகளிடம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. டிடிவி தினகரன் `அறுவடை முடியும் வரை சாலை பணிகள் நடைபெறாது. அதன் பிறகு நிச்சயம் சாலை அமைக்கபடும்’ என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் மீண்டும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி … Read more

இலங்கை லீக் தொடரில் புதிய சாதனை படைத்த இருவர்!

லங்கா பிரீமியர் லீக் தொடரில் தனுக டபாரெ மற்றும் நுவனிடு பெர்னாண்டோ கூட்டணி 113 ஓட்டங்கள் விளாசியது. காலே அணி வெற்றி பல்லேகெல்லேவில் நடந்த லங்கா பிரீமியர் லீக் தொடர் போட்டியில், காலே கிளாடியேட்டர்ஸ் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கண்டி அணியை வீழ்த்தியது. முதலில் ஆடிய காலே அணி 6 விக்கெட்டுக்கு 153 ஓட்டங்கள் எடுத்தது. தொடக்க வீரர் தனுக டபாரெ 70 (51) ஓட்டங்களும், நுவனிடு பெர்னாண்டோ 56 (50) ஓட்டங்களும் எடுத்தனர். பின்னர் … Read more

குஜராத்தின் 18வது முதலமைச்சராக பதவியேற்றார் பூபேந்திர படேல்…

காந்திநகர்: குஜராத்தின் 18வது முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். காவி துண்டுடன் ஓபிஎஸ் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜக இதுவரை பெற்றிராதவாறு அமோ வெற்றி  பெற்றுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.  மொத்தம் உள்ள 182 இடங்களில் 156 இடங்களில் … Read more

கோல்டன் குலோப் விருதுக்கு S.S.ராஜமௌலியின் 'RRR' திரைப்படம் தேர்வு

ஜனவரி 10ம் தேதி அமெரிக்காவில் நடைபெறவுள்ள கோல்டன் குளோப் விருதுக்கு, சிறந்த திரைப்படம் பிரிவில் (ஆங்கிலம் அல்லாத) S.S.ராஜமௌலியின் ‘RRR’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான RRR திரைப்படம் உலகளவில் பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்று வருகிறது.

கர்நாடகாவில் ஜிகா வைரஸ் பரவல்: 5 வயது சிறுமிக்கு வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு

பெங்களூரு, கர்நாடக மாநிலத்தில் ஐந்து வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி கே சுதாகர் கூறும்போது, மாநிலத்தில் ராய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதால், எந்தவிதமான கவலையும் கவலையும் தேவையில்லை. “ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது குறித்து புனேவில் இருந்து ஆய்வக அறிக்கையைப் பெற்றுள்ளோம். சில மாதங்களுக்கு முன்பு கேரளா, மகாராஷ்டிரா … Read more