செம்பரம்பாக்கம் ஏரி நீர்திறப்பை மேலும் அதிகரிக்க முடிவு

செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் நீரின் அளவை மதியம் 12 மணிக்கு விநாடிக்கு 2,000 கன அடியாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். நீர்வரத்து தொடர்ந்து  அதிகரித்து வருவதால் உபரிநீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட உள்ளது எனவும் கூறினார்.

உக்ரைனிலிருந்து காதலன் அனுப்பிய அந்த புகைப்படம்: பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

தான் உக்ரைனில் கடத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி அதற்கு ஆதாரமாக புகைப்படம் ஒன்றை அனுப்பிவைத்திருந்தார் பிரித்தானிய பெண் ஒருவரின் புதுக்காதலர். விவாகரத்தான சோகத்தில் இருந்த பிரித்தானிய பெண் இங்கிலாந்தில் வாழும் ரேச்சல் (Rachel Elwell, 54), சமீபத்தில்தான் விவாகரத்தானதால் தனிமையில் வாடிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பேஸ்புக்கில் ஸ்டீபன் (Stephen Bario, 54) என்ற நபரின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் சமூக ஊடகத்தில் மணிக்கணக்காக உரையாடிக்கொண்ட நிலையில், தான் ஒரு புராஜக்டுக்காக உக்ரைன் செல்வதாக கூறியுள்ளார் ஸ்டீபன். பின்னர் சில … Read more

செங்கல்பட்டு மாவட்டத்தில் 513 ஏரிகள் நிரம்பின – பாலாற்றில் வெள்ளப்பெருக்கு- பொதுமக்கள் ஆற்றில் குளிக்க தடை

செங்கல்பட்டு: பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. கோவளம், மாமல்லபுரம், கல்பாக்கம் பகுதியில் மழை பெய்து வருவதால் அங்குள்ள பக்கிங்காம் கால்வாயிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பாலாற்றில் குளிக்கவும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.  செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 528 பொதுப்பணித்துறை ஏரிகளில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 513 ஏரிகள் நிரம்பின. இதில் 220 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. அனுமந்தபுரத்தில் உள்ள கொப்பளான் ஏரியின் மதகு உடைந்ததால் நீர் … Read more

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை ஸ்டாலினே பெற்றுத் தர முடியும்: ஜெகத்ரட்சகன் எம்.பி.

விழுப்புரம்: புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்தை தமிழ்நாடு முதலமைச்சரால் தான் பெற்றுத்தர முடியும் என விழுப்புரம் மாவட்டம் வானூரில் திமுக நிர்வாகி திருமண விழாவில் ஜெகத்ரட்சகன் எம்.பி. தெரிவித்துள்ளார். புதுச்சேரியின் 30 தொகுதியிலும் உதய சூரியனை உதிக்கச் செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

இத்தாலியப் பிரதமரின் தோழி உட்பட 3 பேர் சுட்டுக் கொலை: குடியிருப்பாளர் கூட்டத்தில் அதிர்ச்சி!

இத்தாலியின் ஃபிடென் நகரின் உள்ள ஒரு மதுக் கூடத்தில் நேற்று குடியிருப்பாளர்கள் கூட்டம் நடைப் பெற்றிருக்கிறது. அதில், இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் நண்பர் உட்பட குடியிருப்புவாசிகள் அனைவரும் கலந்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது உள்ளூர்வாசி ஒருவர் திடீரென கூட்டத்துக்குள் புகுந்து துப்பாக்கியால் சாரமாரியாக சுட்டார். அதில் ஒரு ஆண், 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து தாக்கியிருக்கிறார்கள். அதனால், மேலும் அசம்பாவிதம் நடப்பது தவிர்க்கப்பட்டிருக்கிறது. இத்தாலியப் பிரதமர் பகிர்ந்த … Read more

திருமணமாகி வந்த நாளில் இருந்து! என்னால் முடியவில்லை… ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை

தமிழகத்தில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரின் உடலை வாங்க மறுத்து குடும்பத்தார் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். என்னால் வாழ முடியாது நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் வசுமதி (23) பொறியாளரான இவருக்கும் வினோத் (31) என்பவருக்கும் கடந்த அக்டோபர் 30ஆம் திகதி திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த 26ஆம் திகதி வசுமதி தனது பெற்றோருக்கு போன் செய்து கணவர், மாமனார், மாமியோர் ஆகியோர் திருமணமாகி வந்த நாளில் இருந்து வரதட்சணை … Read more

டிவிட்டரில் கட்டணத்துடன் கூடிய ‘புளு டிக்’ வசதி இன்று முதல் மீண்டும் தொடக்கம்..

சான்பிரான்சிஸ்கோ: டிவிட்டரில் கட்டணத்துடன் கூடிய ‘புளு டிக்’ வசதி இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. டிவிட்டரை கைப்பற்றிய உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், அந்நிறுவனத்தில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பியுடன், பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அவரது முதல் நடவடிக்கையாக புளுடிக் வசதி பெற வேண்டுமானால் கண்டனம் என அறிவித்து, அதன்படி மாதம் 8 டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவித்தார். டிவிட்டரை உபயோகப்படுத்தும், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் கணக்கு அதிகாரபூர்வமானது … Read more

மதுராந்தகத்தில் அரசு பேருந்து மீது பின்னால் வந்த லாரி மோதி விபத்து

செங்கல்பட்டு: மதுராந்தகத்தில் அரசு பேருந்து மீது பின்னால் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அய்யோ பாவம் திருமாவளவன்… இப்ப என்ன பதில் சொல்லுவார்?| Dinamalar

தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: ‘பொது சிவில் சட்டத்தை, ராஜ்யசபாவில் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டிருப்பது, அரசியலமைப்பு சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் கேடான முயற்சி’ என, திருமாவளவன் தெரிவித்துள்ளார். பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வலியுறுத்தியது, அம்பேத்கர். ‘பொது சிவில் சட்டமானது, சமதர்ம சமுதாயம் இல்லாத, இந்தியாவின் சமூக அமைப்பை சீர்திருத்தும் சட்டம்’ என்று ஆணித்தரமாக வாதிட்டதோடு, ‘அடிப்படை உரிமைகளையும், பாகுபாடுகளையும் களையும்’ என தெளிவாக சொன்ன அம்பேத்கரின் எண்ணங்களை வலுவிழக்கச் செய்பவர், … Read more