தலைப்பு செய்திகள்
மந்திரவாதி மூலம் இறந்த தந்தையுடன் உரையாடிய மகன்: லொட்டரியில் அடித்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்
உயிரிழந்த தந்தை லொட்டரி டிக்கெட் வாங்க வேண்டும் என்று கூறியதை அடுத்து, அமெரிக்காவை சேர்ந்த வெஸ்ஸி பிரன்சுவிக் என்ற 55 வயதான நபர் ஒருவர் லாட்டரியில் 33,000 பவுண்டுகள் வெற்றி பெற்றுள்ளார். இறந்த தந்தையின் வாக்கு அமெரிக்காவின் மேரிலாந்து பகுதியை சேர்ந்த வெஸ்ஸி பிரன்சுவிக் என்ற 55 வயது நபர், தனது இறந்து போன தந்தை தன்னை தொடர்பு கொண்டு லொட்டரி டிக்கெட்டை வாங்குமாறு அறிவுறுத்தியதாக தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் பவர்பால் மற்றும் மெகா மில்லியன் காம்போ டிக்கெட்டுகளை வாங்கிய வெஸ்ஸி பிரன்சுவிக், … Read more
நாமக்கல்லில் இன்று அதிகாலை ஏற்பட்ட பட்டாசு விபத்து! பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு
நாமக்கல்: நாமக்கல் அருகே வீட்டில் நடத்தி வந்த பட்டாசு கடையில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில், 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடி விபத்தில் அந்த கடையில் இருந்த பெண் 50 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். இதுவரை 4 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதுபோல பட்டாசு கடை நடத்தவும் பல்வேறு கட்டுப்பாடுகள், … Read more
தமிழ்நாட்டில் 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாட்டில் 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ராமேஸ்வரம் (ராமநாத சுவாமி திருக்கோயில்), திருவண்ணாமலை (அருணாசலேஸ்வரர் கோயில்) , மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆகிய கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
Ariyippu, The Teacher, Jaya Jaya Jaya Jaya Hey: மூன்று படங்கள் நமக்குச் சொல்லும் நான்கு பாடங்கள்!
பெண்கள் சார்ந்த கதைக்களத்தைக் கொண்ட ஒற்றைச் சரடில் இணையும் மூன்று மலையாளப் படங்கள் சமீபத்தில் ஓ.டி.டி தளங்களில் வெளிவந்திருக்கின்றன. ஸ்பாய்லர்கள் கொண்ட அலசல் என்பதால் படம் பார்க்காதவர்கள், பார்க்க நினைப்பவர்கள் இந்தக் கட்டுரையைத் தவிர்த்துவிடவும். படம் ஒன்று: Ariyippu | Declaration நொய்டாவில் ரப்பர் கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தம்பதிகள் அரபு நாட்டில் வேலைக்குச் செல்வதை லட்சியமாகக் கொண்டு அதற்கான முயற்சிகள் செய்கின்றனர். அதன் ஒரு அங்கமாக நாயகியிடம் வேலை செய்யும் திறனை வெளிப்படுத்தும் … Read more
மெஸ்ஸியா? ரொனால்டோவா? இறப்பதற்கு முன்னர் ஜாம்பவான் பீலே தேர்வு செய்த ஒரு பெயர்
மறைந்த கால்பந்து ஜாம்பவான் பீலே, கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோரில் ஒருவரை நிலையான வீரர் என முன்னர் தேர்வு செய்திருக்கிறார். பீலே பிரேசில் மற்றும் கிளப் அணிகளான சாண்டோஸ் மற்றும் நியூயார்க் காஸ்மோஸ் அணிகளுக்காக ஸ்ட்ரைக்கராக விளையாடிய பீலே, காலத்தை கடந்த வீரராக கொண்டாடப்படுபவர். 1958, 1962 மற்றும் 1970 ஆகிய ஆண்டுகளில் பிரேசில் உலகக் கோப்பையை வெல்ல பீலேவின் பங்களிப்பும் முக்கிய காரணமாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 29ஆம் திகதி பீலே … Read more
பாமக இளைஞர் அணி தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார் ஜி.கே. மணியின் மகன் ஜி.கேஎம்.தமிழ்குமரன்!
சென்னை: பாமக இளைஞர் அணி தலைவராக இருந்த, பாமக எம்எல்ஏ ஜிகே மணியின் மகனான ஜிகேஎம் குமரன், கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கட்சி தலைமைக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி உள்ளார். மத்திய அமைச்சர், நாடாளுமன்ற என பல பதவிகளை வகித்த அன்புமணி ராமதாஸ், கட்சியின் இளைஞரணி தலைவராகவும் இருந்து வந்தார். இவர் பாமக கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து அவர் வகித்து வந்த இளைஞர் அணி … Read more
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.41,040 க்கு விற்பனை
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.41,040 க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.5,130-க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து ரூ.74.30 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் பீலே போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்| Brazilian football icon Pele has died at the age of 82
கால்பந்து உலகின் சரித்திர நாயகன் பீலே. ‘மின்னல்’ வேகத்தில் ஓடிச் சென்று கோல் அடிப்பதில் வல்லவர். வறுமையான குடும்பத்தில் பிறந்த இவர், அசாத்திய திறமையால் உச்சம் தொட்டார். சாமான்யன் முதல் உலகப்புகழ் பெற்ற நட்சத்திரங்கள் வரை, இவரது கலக்கல் ஆட்டத்திற்கு அடிமையாகினர். ‘கருப்பு முத்து’ என போற்றப் பட்ட இவர், தனது புன்னகையால் ரசிகர்களை கவர்ந்தார். உலகை விட்டு மறைந்தாலும், மக்களின் மனங்களில் என்றென்றும் இடம் பெற்றிருப்பார். பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே 82. சிறு வயது … Read more
“நாங்கள் கொடுப்பவர்கள்; எடுப்பவர்கள் கிடையாது” – உத்தவ் தாக்கரேயிக்கு முதல்வர் ஷிண்டே பதில்
மும்பை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள சிவசேனா அலுவலகத்தை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவினர் இரண்டு நாள்களுக்கு முன்பு கைப்பற்ற முயன்றனர். இதனால் கைகலப்பு ஏற்பட்டது. தற்போது அந்த அலுவலகத்திற்கு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்திருந்தார். ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்திற்கு கூட ஷிண்டே உரிமை கொண்டாடக்கூடியவர் என்று தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள ஏக்நாத் ஷிண்டே, “இதற்கு மேலும் எங்களுக்கு எதிரான விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள முடியாது. … Read more