திருவண்ணாமலையில் இன்று 2வது நாளாக கிரிவலம் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்கள்..

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இன்று 2வது நாளாக தொடரும் பவுர்ணமி கிரிவலம் தொடர்ந்து வருகிறது. பல லட்சம்பேர்  கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர். கார்த்திகை தீபத்தையொட்டி நேற்று இரவு முதல் தொடங்கிய கிரிவலம் இன்றும் தொடர்கிறது. நாளை காலை வரை கிரிவலம் செல்லும் நேரம் இருப்பதால், நாளையும் பக்தர்களின் கிரிவலம் தொடரும் என நம்பப்படுகிறது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தின் முக்கிய நிகழ்வாக, மகாதீபம் நேற்று அண்ணாமலையார் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது. இதை பல லட்சம் பக்தர்கள், அண்ணாமலைக்கு அரோகரோ … Read more

126 வார்டுகளில் வெற்றி பெற்று டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி; தொண்டர்கள் கொண்டாட்டம்..!!

டெல்லி: 250 வார்டுகள் கொண்ட டெல்லி மாநகராட்சியை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது. மொத்தமுள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி 126 வார்டுகளிலும், பாரதிய ஜனதா கட்சி 97 வார்டுகளிலும், காங்கிரஸ் 7 வார்டுகளிலும் வெற்றிபெற்றது. 2007 முதல் 3 முறை வென்று டெல்லி மாநகராட்சியை பாஜக தக்க வைத்த நிலையில் ஆம் ஆத்மி அபார வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

டெல்லி மாநகராட்சி: பாஜக-வுடனான போட்டியில் வெற்றியை நெருங்கும் ஆம் ஆத்மி – ரேஸிலே இல்லாத காங்கிரஸ்!

கிழக்கு டெல்லி மாநகராட்சி ( EDMC), டெல்லி மாநகராட்சி (MCD) தெற்கு டெல்லி மாநகராட்சி(SDMC) ஆகிய மூன்று மாநகராட்சிகளுக்கான தேர்தல் 2017-ல் நடத்தப்பட்டன. அதன் பிறகு டெல்லியில் மூன்றாக இருந்த மாநகராட்சி ஒன்றாக இணைக்கப்பட்டு தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில், கடந்த 4-ம் தேதி தேர்தல் நடைப்பெற்றது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டியில் நிலவியது. டெல்லி மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 250 வார்டுக்கும் சேர்த்து 50% … Read more

நான் அந்த முடிவை எடுக்காமல் இருந்திருந்தால் இளவரசி டயானா உயிரிழந்திருக்கமாட்டார்: மொடல் பரபரப்பு தகவல்

இளவரசி டயானாவின் காதலரான டோடி அல் பயத் டயானாவுடன் சுற்றிக்கொண்டிருந்த நாட்களில், டோடிக்கு வேறொரு காதலி இருந்ததாக ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஏற்கனவே ஒரு பெண்ணைக் காதலித்துக்கொண்டிருந்த டோடி, அவருக்கு துரோகம் செய்ததாக அந்த முன்னாள் காதலியே தெரிவித்துள்ளார். பல பெண்களுடன் பழகிய டோடி கோடீஸ்வரரான டோடிக்கு பிரபல நடிகைகள் உட்பட பல பெண்களுடன் தொடர்பு இருந்திருக்கிறது. ஆனால், மொடலான ஆனி (Annie Cardone) என்ற பெண்ணை உருகி உருகிக் காதலித்திருக்கிறார் அவர். அதே … Read more

டெல்லி மாநகராட்சியை கைப்பற்றுகிறது ஆத்ஆத்மி கட்சி…

டெல்லி: டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், மாநகராட்சியை ஆம்ஆத்மி கட்சி கைப்பற்றுவது உறுதியாகி உள்ளது. 250 வார்டுகளை கொண்ட மாநகராட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதலே ஆம்ஆம்தி கட்சி முன்னிலை  பெற்று வந்தது. இன்று மதியம் ஒருமணி நிலவரப்படி, ஆம்ஆத்மி கட்சி 108 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. பாஜக 84 இடங்களில் வெற்றி … Read more

மாண்டஸ் புயல்: டிச.9ம் தேதி மாலை முதல் 10ம் தேதி காலை வரை மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்..பாலச்சந்திரன் பேட்டி

சென்னை: டிச.9ம் தேதி மாலை முதல் 10ம் தேதி காலை வரை மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழ்நாட்டில் நாளை முதல் கனமழை பெய்யும். 9ம் தேதி விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுச்சேரியில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. டிசம்பர் 10ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக்கில் சாதிக்கும் வீரர்களுக்கு நேரடி பணி நியமனம் வழங்க முடிவு| Dinamalar

பெங்களூரு : ”ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற பட்டதாரிகளுக்கு, நேரடி நியமனம் மூலம் அரசு வேலை வழங்கும் திட்டத்துக்கு, அடுத்த அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்படும்,” என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார். பெங்களூரில் நேற்று விளையாட்டு துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு, ‘ஏகல்வயா விருதை’ கவர்னர் தாவர்சந்த் கெலாட் வழங்கினார். இதில், முதல்வர் பசவராஜ் பொம்மை பங்கேற்று பேசியதாவது: ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டில் பதக்கம் வென்ற பட்டதாரிகளுக்கு, ‘குரூப் பி’ பணியும்; கீழ் நிலை … Read more

`உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் முதல் பெண் சோப்தார்!' அவரின் பணி என்ன தெரியுமா?

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முதல் முறையாக பெண் சோப்தார் நியமிக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் முதல் பெண் சோப்தாராக திலானி என்பவர் கடந்த ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முதல் பெண் சோப்தாராக லலிதா நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதி, சேம்பரிலிருந்து நீதிமன்றக் கூடத்துக்குச் செல்லும்போதும், திரும்பி வரும்போதும் இடையூறு இல்லாமல் செல்வதற்காக, `சத்தம் போடாதீர்கள்!’ என்று சைகையில் சொல்லியபடி வெள்ளைச்சீருடை, தேசியச்சின்னம் பொறுத்தப்பட்ட … Read more

தவறாக பயன்படுத்தப்பட்ட இளம்பெண்ணின் பாஸ்போர்ட்: ஒரு எச்சரிக்கை செய்தி

தனது பாஸ்போர்ட்டுடன் விசாவை இணைப்பதற்காக இந்திய இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றிடம் கையளிக்க, அவருக்கு எதிர்பாராத ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. உயர் கல்விக்காக பிரித்தானியா செல்ல திட்டமிட்டுள்ள இளம்பெண் அந்த 29 வயதுடைய பெண், கடந்த மூன்று ஆண்டுகளாக நெதர்லாந்தில் தங்கி கல்வி பயின்று வருகிறார். அடுத்து உயர் கல்விக்காக பிரித்தானியா செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். அதற்காக தனது விசாவை பாஸ்போர்ட்டுடன் இணைப்பதற்காக இந்தியாவிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றை நாடியுள்ளார் அவர். மின்னஞ்சலில் வந்த அதிர்ச்சி … Read more