மேகாலயா, பாட்னா உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதி நியமனம்

புதுடெல்லி, மேகாலயா, பாட்னா உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேகாலயா தலைமை நீதிபதியாக ரேவதி பிரசாந்த் மோகித் டேரே மற்றும் பாட்னா தலைமை நீதிபதியாக சங்கம் குமார் சாஹூ நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளார். மேகலாயா தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரேவதி பிரசாந்த் மோகித் டேரோ மும்பை ஐகோர்ட்டில் நீதிபதியாக உள்ளார். அதேபோல, சங்கம் குமார் சாஹூ ஒடிசா நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார். மேகாலயா தலைமை நீதிபதியாக … Read more

தெலுங்கானாவில் டிசம்பர் மாதம் மதுபான விற்பனை மூலம் ரூ.5,102 கோடி வசூல்

ஐதராபாத், தெலுங்கானாவில் மதுபான விற்பனை 2025 டிசம்பரில் இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. டிசம்பர் மாதத்தில் மட்டும் அங்கு மதுபான விற்பனை மூலம் ரூ.5,102 கோடி வசூலாகியுள்ளது. இது வழக்கமான மாதாந்திர சராசரியை விட மிக அதிகமாகும். ஆண்டு இறுதி மற்றும் பண்டிகைக் கால விடுமுறையையொட்டி மதுபான விற்பனை அதிகரித்ததாக கூறப்படுகிறது. ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31 அன்று, மதுபான விற்பனை ரூ.352 கோடியைத் தொட்டது. டிசம்பர் 30 அன்று பதிவான ரூ.375 கோடியுடன் சேர்த்து, … Read more

சென்னையில் ஏர் டாக்ஸி சேவை எப்போது?

சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் ஏர் டாக்ஸி சேவை  நடைமுறைக்கு வர உள்ளது. முதற்கட்டமாக சென்னையில் Air Taxi சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில்  அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்ககும் வகையில், ஏர் டாக்ஸி சேவைகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை சென்னை ஐஐடி நிறுவனத்தைச் சார்ந்த இபிளான் என்ற நிறுவனம் செய்து வருகிறது. இந்தியாவில் மக்கள் பெருக்கம் மற்றும் வாகனங்கள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் சாலைகளில்  ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்ள காரணமாக … Read more

தமிழகத்தில் முதன் முறையாக சோலார் படகு சேவை தொடக்கம்! திமுகஅரசு அசத்தல்….

சென்னை: தமிழகத்தில் முதன் முறையாக சூரிய ஒளி சக்தியால் இயங்கும் சோலார் மின் படகுகள் சேவையை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, இந்த படகு சேவை  கடலூர் மாவட்டத்தில் உள்ள உள்ள  பிரபலமான  அலையாத்தி காடுகளைக்கொண்ட  பிச்சாவரம் படகு சவாரி இல்லத்தில் தொடங்கப்பட்டுள்ளது . தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரம். இங்குள்ள  அலையாத்தி காடுகள் வழியாக இயக்கப்படும்   படகு சேவை பெரும் பிரபலமானது.  இங்குள்ள அலையர்த்தி காடுகள்,  இரண்டாவது பெரிய அலையாத்தி காடுகள் என … Read more

2026 டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் முதன்முறையாக தமிழ்நாட்டு நாய் இனங்கள் உள்பட விலங்குகள் படைப்பிரிவு அறிமுகம்!!

டெல்லி: 2026 டெல்லி குடியரசு தின அணிவகுப்பில்  முதன்முறையாக  தமிழ்நாட்டு நாய் இனங்கள் உள்பட விலங்குகள் படைப்பிரிவு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடப்பு ஆண்டு குடியரசு தின விழாவில், முதன்முறையாக,  விலங்குகள் படைப்பிரிவு சேர்க்கப்பட உள்ளது. இந்த படைப்பிரிவில் இரட்டைத்திமில் ஒட்டகங்கள், மலை ஏறும் திறன் கொண்ட 4 குதிரைகள், தற்போது பணியில் உள்ள 16 நாய்கள் மற்றும் 4 ராப்டர் பறவைகள் போன்றவை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு வலிமை … Read more

”ரூ.800 கோடி மதிப்பிலான சொத்துகள் அபகரிப்பு புகார்” – அதிமுக பிரமுகர் உட்பட 12 பேர் மீது வழக்கு!

தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்ட சாலை பால்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் சிராஜூதீன். சிங்கப்பூர் தொழிலதிபரான இவர் அங்கேயே வசித்து வந்தார். இவருக்கு தஞ்சாவூர் பால்பண்ணை, சீராஜ்பூர் நகர் மற்றும் செங்கிப்பட்டி பகுதிகளில் சொத்துகள் இருந்தன. இதன் இன்றைய அரசு மதிப்பு சுமார் ரூ.800 கோடி என்கிறார்கள். இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு ஷேக் சிராஜூதீன் இறந்து விட்டார். பிறகு, இவரது மனைவி முகமதா பேகம்(76) வசம் சொத்துகள் இருந்தன. இவரிடம், தஞ்சாவூரை சேர்ந்த ஸ்ரீவித்யா சுமதி என்பவர், தங்களின் … Read more

அரசு நிலம் ஆக்கிரமிப்பு: 4 மாதங்களுக்குள் அகற்ற அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு…

சென்னை:   அரசுக்கு சொந்தமான 17 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 4 மாதங்களுக்குள் அகற்றுமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக,   சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மதுரை புதூரைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் உயர் நீதிமன்ற மதுரையில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், ‘மதுரை புதூர் கொடிக்குளம் பாரத் நகர் மற்றும் சர்வேயர் காலனி பகுதியில் … Read more

புதுச்சேரி: களைகட்டிய புத்தாண்டு… கொண்டாடி மகிழ்ந்த மக்கள்! – Photo Album

புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் குழந்தைகளுக்கு கையில் டேக் அணிவித்து பாதுகாப்பு குழந்தைகளுக்கு கையில் டேக் அணிவித்து பாதுகாப்பு போக்குவரத்து சீரமைப்பு செய்யும் காவலர்கள் சோதனைக்கு பின் கடற்கரை சாலைக்கு அனுமதிக்கும் போலிசார் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ பாதுகாப்பு துப்பாக்கி ஏந்திய கமாண்டோ பாதுகாப்பு புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ பாதுகாப்பு புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா … Read more

கூட்டணி குழப்பம்: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கிறார் ராகுல்காந்தி…

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடையே கூட்டணி தொடர்பான குழப்பம் நீடித்து வரும் நிலையில்,  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி  விரைவில் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும், ராகுலுக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படும் பிரவீன் சக்ரவர்த்தி தவெக தலைவர் விஜயை சந்தித்து பேசியது தமிழ்நாட்டில் தொடர்ந்து வரும் திமுக காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும்  ஆட்சி அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் … Read more