ராஜஸ்தானில் மதக்கலவரம் : ஜெய்ப்பூரில் இணைய சேவை முடக்கம்…

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள சோமு நகரில் ஒரு மத வழிபாட்டுத் தலத்தில் இருந்து கற்களை அகற்றுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு இரண்டு சமூகத்தினரிடையே மதக்கலவரமாக மாறியது. சோமுவில் உள்ள பேருந்து நிலையம் அருகே மசூதிக்கு வெளியே சாலையோரத்தில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவரும் கற்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் அதனை அகற்ற உள்ளூர் நிர்வாகம் முடிவெடுத்தது. இது தொடர்பாக இரண்டு மதத்தினரிடையே மோதல் எழுந்ததால், சம்பந்தப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகளுடன் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. பரஸ்பர ஒப்பந்தம் எட்டப்பட்ட … Read more

Modi: “அந்த அடிமைத்தனத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்தது பாஜகதான்" – பிரதமர் மோடி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தீன் தயாள் உபாத்யாய் மற்றும் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி ஆகியோரின் வாழ்க்கை மற்றும் லட்சியங்களைப் போற்றும் வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ‘ராஷ்டிர பிரேர்ணா ஸ்தல்’ என்ற அருங்காட்சியகம் ரூ.232 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டிருக்கிறது. சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ‘ராஷ்டிர பிரேர்ணா ஸ்தல்’ அருங்காட்சியகம், பா.ஜ.க-வின் தேர்தல் சின்னமான தாமரை வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில், மூன்று தலைவர்களின் பிரம்மாண்ட வெண்கலச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத் … Read more

பாமகவில் இருந்து ஜி.கே மணி நீக்கம்; அன்புமணி தரப்பு அதிரடி

பாமகவில் இருந்து ஜி.கே.மணியை நீக்கம் செய்திருப்பதாக பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் ராமதாஸ் அதரவாளரும், பாமக எம்எல்ஏ- வுமான ஜி.கே.மணியை பாமகவில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கியிருக்கிறார். அன்புமணி, ராமதாஸ் இதுதொடர்பாக அன்புமணி தரப்பில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ” பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. … Read more

டிஜிட்டல் பிரச்சாரம் : இன்ஃப்ளூயன்சர்கள் காட்டில் பண மழை…

சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களுக்கு இங்கிலாந்து அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் அரை மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் செலவிட்டுள்ளது. அரசு திட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களை விளம்பரப்படுத்தவும் இளைஞர்களை ஈர்க்கவும் 200-க்கும் மேற்பட்ட இன்ஃப்ளூயன்சர்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பொதுத் தொடர்பு நிறுவனமான டேன்ஜரின் தகவல் அறியும் உரிமை (FoI) சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, தி கார்டியன் பத்திரிகை இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த செலவினம் உள்துறை, நீதி, பாதுகாப்பு மற்றும் வேலை–ஓய்வூதிய அமைச்சகங்களின் மூலம் … Read more

Doctor Vikatan: நகங்களைப் பாதிக்குமா நெயில் ஆர்ட்?

Doctor Vikatan: சமீபகாலமாக இளம் பெண்கள் மத்தியில் நெயில் ஆர்ட் என்ற விஷயம் பிரபலமாகி வருகிறது. அவர்களைப் பார்க்கும்போது எனக்கும் நெயில் ஆர்ட் செய்துகொள்ளும் ஆசை வருகிறது. நெயில் ஆர்ட் செய்துகொள்வது எந்த அளவுக்குப் பாதுகாப்பானது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமா நெயில் ஆர்ட், ஜெல் நெயில் பாலிஷ் போல இன்று பலவிதமான நக அலங்காரங்கள் டிரெண்டாக உள்ளன. சராசரியாக 10 பேரில் 8 பேருக்கு இதுபோன்று நகங்களை அலங்காரம் செய்துகொள்கிற பழக்கம் … Read more

பல நோய்களுக்கு செயற்கை உரமே காரணம்: உள்துறை அமைச்சர் அமித்ஷா

போபால், மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா நகரில் நடைபெற்ற இயற்கை வேளாண்மை மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: இன்றைய காலத்தில் பல்வேறு நோய்களுக்கு அடிப்படை காரணமாக ரசாயன உரங்கள் உள்ளன. இதற்கு மாற்றாக இயற்கை விவசாயத்தை மேற்கொண்டால், விவசாயிகளின் வருமானம் குறையாது. மாறாக, அவர்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்கள் தூய்மையானதாக இருக்கும். இயற்கை வேளாண்மை விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதோடு, தண்ணீர் பயன்பாட்டையும் குறைக்கும். மக்களை நோய்களிலிருந்து பாதுகாக்கும். நாடு முழுவதும் … Read more

கோவை இடிகரை ஸ்ரீரங்கநாதர் கோயில்: நோய் தீர்க்கும் சடாரி; வரம் தரும் சத்தியநாராயண பூஜை!

பெருமாள் ஸ்ரீரங்கநாதராக சயனக் கோலத்தில் அருள்பாலிக்கும் திருத்தலங்கள் பல உள்ளன. அவற்றில் ஸ்ரீராமாநுஜர் வழிபட்ட தலங்கள் என்றால் மிகவும் சிறப்பினை உடையன. அப்படிப்பட்ட தலங்களில் ஒன்றுதான் இடிகரை. ஸ்ரீராமாநுஜர் ஸ்ரீரங்கத்திலிருந்து புறப்பட்டுப் பல இடங்களுக்கும் பயணம் செய்தபோது பல புண்ணிய க்ஷேத்திரங்களைத் தரிசனம் செய்தார். மேலும் பல கோயில்களைப் பிரதிஷ்டை செய்தும் வழிபட்டு வந்தார். அந்தத் தலங்களில் நித்ய ஆராதனை நடைபெறவும் ஏற்பாடுகள் செய்தார். அவ்வாறு ஸ்ரீராமாநுஜர் தங்கியிருந்து வழிபட்ட திருத்தலங்களில் ஒன்றுதான் இடிகரை. கோவை மாவட்டம், … Read more

தாய்லாந்து-கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை தகர்ப்புக்கு இந்தியா கண்டனம்

புதுடெல்லி, தாய்லாந்து-கம்போடியா இடையே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் எல்லையில் கம்போடியா பகுதியில் இருந்த 29 அடி உயர விஷ்ணு சிலையை தாய்லாந்து ராணுவம் இடித்து அகற்றியது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:- தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியில், சமீபத்தில் கட்டப்பட்ட ஒரு இந்து மத தெய்வச் சிலை இடிக்கப்பட்டது குறித்த செய்திகளை நாங்கள் கவனித்தோம். … Read more

பாலியல் புகார் கூறி ரூ.10 கோடி பணம் பறிக்க முயற்சி – 2 பெண்கள் கைது

மும்பை, மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் அரவிந்த் கோயல். இவரது மகன் ரித்தம். கடந்த நவம்பர் 5-ந்தேதி ரித்தமுக்கும், யஷஷ்வி என்ற பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தொடர்ந்து நவம்பர் 14-ந்தேதி, அம்போலி பகுதியில் உள்ள ஓட்டலில் ரித்தம் தனது நண்பர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். விருந்து முடிந்த பிறகு ரித்தம், யஷஷ்வி, அவரது தம்பி ஆகியோர் ஓட்டலில் உள்ள லிப்ட்டில் தரைத்தளத்திற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த லிப்டில் மற்றொரு பெண் ஏறினார். திடீரென … Read more