22.11.22 செவ்வாய்க்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | November – 22 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

FIFA உலகக்கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்த நெதர்லாந்து!

FIFA உலகக்கோப்பையில் அல் துமமா மைதானத்தில் நடந்த போட்டியில் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் செனெகல் அணியை வீழ்த்தியது. தடுப்பாட்டம்  FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடரின் மூன்றாவது போட்டி அல் துமமா மைதானத்தில் நடந்தது. இதில் நெதர்லாந்து – செனெகல் அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் இரு அணிகளும் தடுப்பாட்டத்தில் மிரட்டின. @Alberto PIZZOLI / AFP எனினும் நெதர்லாந்து அணி தனது முதல் கோலை 84வது நிமிடத்தில் அடித்தது. அந்த … Read more

காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா, வடக்கு தமிழ்நாடு இடையே கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா, வடக்கு தமிழ்நாடு இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னைக்கு தென் கிழக்கே 420 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. வட தமிழகம் நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழக்கும். திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இறந்த காதலிக்கு தாலி கட்டி : மணமுடித்த அசாம் இளைஞர்| Dinamalar

குவஹாத்தி :உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த காதலிக்கு தாலி கட்டி, ‘இனி நான் வேறு திருமணம் செய்து கொள்ள மாட்டேன்’ என, அவரது உடல் மீது சத்தியம் செய்த இளைஞரை பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வட கிழக்கு மாநிலமான அசாமின் மோரிகான் நகரில் வசிப்பவர் பிதுபன் தாமுலி. அருகிலுள்ள கோசுவா என்ற கிராமத்தில் வசித்தவர் பிரார்த்தனா போரா. இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.இருவர் வீட்டிலுமே சம்மதம் தெரிவித்து திருமணத்துக்கான பேச்சும் … Read more

கடவுள் கொடுத்த உயிர்! 30 ஆண்டுகள் உறைந்த கருவில் பிறந்த இரட்டை குழந்தைகள்..புதிய உலக சாதனை

அமெரிக்காவில் 30 ஆண்டுகளாக உறைய வைக்கப்பட்ட கருமுட்டைகள் மூலம் தம்பதியர் இரட்டை குழந்தைகளை வரவேற்றுள்ளனர். அமெரிக்காவின் Oregan-ஐ சேர்ந்த பிலிப் ரிட்ஜ்வே மற்றும் ரேச்சல் தம்பதி, IVF மூலம் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராகியுள்ளனர். புதிய உலக சாதனை   1992ஆம் ஆண்டு உறைய வைக்கப்பட்ட கருமுட்டைகளைக் கொண்டு பிலிப்-ரேச்சல் தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இது மருத்துவ உலகில் உலகில் மிகப்பெரிய சாதனை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த தம்பதி தங்கள் குழந்தைகளுக்கு லிடியா, டிமோத்தி என பெயர் … Read more

அடுத்து 2 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அடுத்து 2 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவில் சரக்கு ரயில் விபத்து மூன்று பேர் பலி; 7 பேர் காயம்| Dinamalar

புவனேஸ்வர் ஒடிசாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், நடைமேடையில் காத்திருந்த பயணியர் மூன்று பேர் பலியாகினர்; ஏழு பேர் படுகாயமடைந்தனர். ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஜாஜ்பூர் மாவட்டத்தில் கோரை ரயில் நிலையம் உள்ளது. நேற்று காலை டோங்கோபோஸ் என்ற இடத்தில் இருந்து சத்ரபூருக்கு காலி பெட்டிகளுடன் சரக்கு ரயில் சென்றது. கோரை ரயில் நிலையம் அருகே, டிரைவர் திடீர் என பிரேக் போட்டதால், எட்டு … Read more

FIFA உலக கோப்பை: தேசிய கீதம் பாட மறுத்த ஈரானிய வீரர்கள்!

இன்று நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், ஈரானிய வீரர்கள் தேசியகீதம் பாடாமல் எதிர்ப்பு தெரிவித்தனர். கத்தாரில் இன்று நடந்த FIFA உலகக் கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய ஈரான் அணியின் வீரர்கள், ஆட்டத்தின் தொடக்கத்தில் ஈரானிய தேசிய கீதத்தை பாடாமல் தவிர்த்தனர். ஈரானில் நடந்துவரும் அரசாங்கத்துக்கு எதிரான மக்களின் ஆர்ப்பாட்டத்திற்கு வெளிப்படையான ஆதரவை தெரிவிக்கும் விதமாக வீரர்கள் தேசிய கீதம் பாட மறுத்தனர். தோஹாவில் உள்ள கலீஃபா சர்வதேச மைதானத்தைச் சுற்றி … Read more

உலகக்கோப்பை கால்பந்து அரசை கண்டித்து தேசிய கீதம் பாடாத ஈரான் வீரர்கள்

கத்தார்: உலகக்கோப்பை கால்பந்து – இங்கிலாந்து மற்றும் ஈரான் அணிகள் மோதும் போட்டி தொடங்கியது. இதில் ஈரானின் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்களை அரசு ஒடுக்குவதை கண்டித்து, ஈரான் வீரர்கள் தேசிய கீதம் படவில்லை. ஒன்றிணைந்து முடிவெடுத்ததாக அணியின் கேப்டன் ஜஹான்பக்ஷ் தெரிவித்துள்ளார்.