போராடும் அவர் ரொம்ப பாவம்! இந்திய வீரருக்காக வருந்திய அஸ்வின்

இந்திய வீரர் இஷான் கிஷன் ரொம்ப பாவம் என தமிழக வீரர் அஸ்வின் கூறியுள்ளார்.  போராடும் இஷான் கிஷன் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் கொண்ட தொடர்களில் இரு அணிகளும் மோதுகின்றன. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற இருந்த நிலையில், மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. டி20 அணியில் இடது கை வீரர் … Read more

மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் இருந்து இன்று துவங்கியது பாரத் ஜோடோ யாத்திரை

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் இருந்து இன்று பாரத் ஜோடோ யாத்திரை துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான நடைபயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 150 நாட்கள் நடைபெற உள்ள இந்த யாத்திரை தற்போது வரை 30 நாட்களை கடந்துள்ளதுடன், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானாவை கடந்து தற்போது மகராஷ்டிராவில் நடைபெற்று வருகிறது.   மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் இருந்து இன்று பாரத் ஜோடோ யாத்திரை … Read more

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து அருவிகளில் பொதுமக்கள் குளிக்க அனுமதி

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து அருவிகளில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றல அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

சேலம்: மருத்துவக் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – போலீஸார் விசாரணை

சேலம், அரியானூர் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பட்டியை பகுதியை சேர்ந்த அருள்மொழி குமார் என்பவருடைய மகன் நிர்மல் குமார் முதுநிலை பிசியோதெரபி படித்து வந்தார். தினமும் சொந்த ஊருக்கு சென்று வர முடியாத நிலை என்பதால் கல்லூரிக்கு எதிரே உள்ள தனியார் விடுதியில் ரூம் எடுத்து தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் நிர்மல் குமார் தினமும் பெற்றோரிடம் செல்போனில் பேசுவது வழக்கம். ஆனால் நேற்று காலையில் இருந்து நிர்மல் குமாருக்கு … Read more

இதுதான் எனது கடைசி உலகக்கோப்பை! கிறிஸ்டியானோ ரொனால்டோ

கத்தார் உலகக்கோப்பையுடன் ஓய்வு பெற உள்ளதாக போர்த்துக்கல் கால்பந்து அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார். ரொனால்டோ  ஓய்வு போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ சமீபத்திய நேர்காணலில் தனது ஓய்வு குறித்து தெரிவித்தார். ரொனால்டோ கூறுகையில், ‘இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகள் விளையாட விரும்புகிறேன். எனவே அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் தான். நான் 40 வயதில் ஓய்வு பெற விரும்புகிறேன். அந்த வயது சரியானதாக இருக்கும் என நினைக்கிறேன். @EPA எனது மனநிலை … Read more

மைசூரில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்ட தமிழ் கல்வெட்டுகளின் மைப்படிகள்

சென்னை: கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட தமிழ் கல்வெட்டுகளின் மைப்படிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார். இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், மைசூரில் இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள கல்வெட்டுப் பிரிவில் பல ஆண்டுகளாக இருந்த தமிழ் கல்வெட்டுகளின் மைப்படிகளை சென்னைக்கு கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறியுள்ளது. இந்த மைப்படிகள் பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து மைசூருக்கு கொண்டு செல்லப்பட்டு இருந்தன. இதுதொடர்பாக கோர்ட்டில் … Read more

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தங்கள் குறித்த விவாதத்தில் காஷ்மீர் பிரச்னையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிப்பதற்காக நடத்தப்பட்ட பொதுச்சபை கூட்டத்தில் காஷ்மீர் பிரச்னையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா. பொதுச்சபையை பாகிஸ்தான் தொடர்ந்து தவறாக பயன்படுத்தி வருகிறது, விவாதிக்கவே இந்த கூட்டமே தவிர காஷ்மீர் பிரச்னையை பேசுவதற்கு அல்ல என ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரக ஆலோசகர் பிரதிக் மாத்துர் கூறியுள்ளார்.

உலகளவில் 64.24 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 64.24 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.24 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 66.23 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 62.17 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு உலக அளவில் 6,623,800 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.23 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,623,800 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 642,486,897 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 621,752,356 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 36,017 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒன் பை டூ

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க “நாட்டு நடப்பை அப்படியே சொல்லியிருக்கிறார். இதுவரை பா.ஜ.க இந்தியா முழுவதுமுள்ள 270 சட்டமன்ற உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்கியிருக்கிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மாற்றுக் கட்சி உறுப்பினர்களைப் பல கோடி ரூபாய் பணம் கொடுத்து, மிரட்டி, தங்கள் கட்சியில் சேர்த்துக்கொள்கின்றனர். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்கூட, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-களை பிள்ளை பிடிப்பதைப்போலத் தூக்கிக்கொண்டிருக்கிறார்கள். அதைத்தான் அண்ணன் ஆர்.எஸ்.பாரதியும் சொல்லியிருக்கிறார். தற்போது குஜராத்தில் தேர்தல் அறிவித்த பிறகுகூட சில காங்கிரஸ் … Read more